Election case 10k cost chief justice order for advt

தேர்தல் விதிகளுக்கு எதிராக பத்திரிக்கை, ஊடகங்களில் தேர்தல் விளம்பரங்கள் செய்ததாக திமுக,பாஜக எதிரான வழக்கு தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல் ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனது கட்சி நடைபெற்று முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டதாகவும், ஏற்கனவே உயர்நீதிமன்றம் நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டிருந்த தாக சுட்டிக்காட்டியிருந்தார்.அரசியல் கட்சிகள், மாநில தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்றே ஊடகங்கள், பத்திரிகை, மற்றும் ரேடியோவில் விளம்பரம் செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்..

தேர்தல் ஆணையத்தின் அனுமதிக்கு பிறகே விளம்பரங்களை வெளியிட முடியும் என்ற நிலையில்,தேர்தல் நாளன்று திமுக மற்றும் பாஜக தேர்தல் விதிக்கு எதிராக தன்னிச்சையாக பத்திரிக்கைகளில் விளம்பரங்கள் செய்துள்ளதாகவும், எனவே தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக செயல்பட்ட திமுக,காஜக வேட்பாளர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும், அதுவரை மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்வு முடிவுகளை வெளியிட கூடாது, அதற்கு தடை விதிக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்..

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், மக்கள் பிரிதிநிதுத்துவ சட்டத்தின் படி வழக்கில் வழக்கு தொடரமுடியாது என்றும் பத்திரிகைகளில் விளம்பரம் செய்ய கட்சிகளுக்கு எந்த தடையும் கிடையாது என தெரிவித்து சட்ட நுணுக்கங்களை ஆராயமல் வழக்கு தொடர்ந்துள்ள மனுதாரருக்கு 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து
வழக்கை தள்ளுபடி செய்தனர்.

You may also like...