Cm midnight 1 o clock ஒன்னும் பயப்படாத கண்ணு, நானு பழ்னிசாமிதான் பேசுறேன், இப்போ நானு ஒரு நெம்பரு கொடுகுறேன், அதுல கால் பண்ணி முதல்வரு கொடுத்தாருன்னு சொல்லுங் அம்ணி, எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங், நீங்க கவலையே பட தேவையில்லைங் கண்ணு” என்று தைரியமூட்டினார்.!

கடந்த செவ்வாய்கிழமை மாலை நான்கு மணிக்கு ஹைதராபாத்திலிருந்து புறப்பட்டது அந்த டெம்போ டிராவலர் வேன்.. ஒரு இளைஞர் மற்றும் 13 இளம்பெண்கள் அடங்கிய குழுவில் அனைவரும் ஐதராபாத் ஐடி கம்பெனிகளில் பணியாற்றும் தமிழ்நாட்டின் திருநெல்வேலி தேனி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.!

வேகமாக ஓட்டிக்கொண்டிருக்கும் வேன் டிரைவருக்கு இரவு பத்து மணியளவில் அவரது டிராவல்ஸில் இருந்து போன் வருகிறது.. இரவு 12 மணி முதல் பிரதமர் அறிவித்த ஊரடங்கு உத்தரவு குறித்த தகவல் அது.!

உடனே வேனுக்குள் திரும்பிய டிரைவர் திருநெல்வேலி வரை போக முடியாது என்றும் முதலில் வரும் தமிழக எல்லையில் இறங்கி வேறு வண்டி பிடித்து வீடு போய் சேருங்கள் என்று கூறியபடி வண்டியை ஓட்டினார்.!

தூக்க கலக்கத்திலிருந்த அனைவரும் செய்வதறியாது டிரைவரிடம் கெஞ்ச, ஊரடங்கு என்பதால் முடியாது என்று கறாராக கூறிவிட்டார். ஒவ்வொருவரும் தங்கள் பெற்றோருக்கு, நண்பர்களுக்கு தகவல் தர மாற்று வாகனம் யாராலும் அந்த இரவில் ஏற்பாடு செய்ய முடியவில்லை.!

மணி இரவு ஒன்றைத் தாண்டியது.. வேனிலிருந்த ஒரு இளம்பெண் கூகுள் செய்து முதல்வர் அலுவலகத்தின் தொடர்பு எண் தேடிப்பார்க்க, முதல்வரின் பெர்சனல் நம்பர் என ஒரு போன் நம்பர் இருந்தது.. தயங்கியபடியே அந்த நம்பரை தொடர்பு கொள்ள இரண்டாவது ரிங்கிலேயே ரிசீவர் எடுக்கப்பட்டு ஹலோ என்ற ஆண் குரல் ஒலித்தது.. முதல்வர் அலுவலக அதிகாரி எவரோ பேசுகிறார் என்று நினைத்து தங்களது நிலைமையை அந்த இளம்பெண் விவரிக்கத் துவங்க அனைத்தையும் அந்த நள்ளிரவு 1.30 மணிக்கும் அமைதியாக கேட்ட அந்தக் குரல் தமிழக முதல்வர் எடப்பாடியாரோட குரல்.!

“ஒன்னும் பயப்படாத கண்ணு, நானு பழ்னிசாமிதான் பேசுறேன், இப்போ நானு ஒரு நெம்பரு கொடுகுறேன், அதுல கால் பண்ணி முதல்வரு கொடுத்தாருன்னு சொல்லுங் அம்ணி, எல்லாத்தையும் அவங்க பாத்துப்பாங், நீங்க கவலையே பட தேவையில்லைங் கண்ணு” என்று தைரியமூட்டினார்.!

முதல்வர் கொடுத்த நம்பரில் தொடர்பு கொள்ள மறுமுனையில் வந்தவர் திருவள்ளூர் எஸ்.பி.. நள்ரவிலும் விபரங்களை கவனமாக கேட்டவர் வேன் விபரங்களை குறித்துக்கொண்டார்.!

அடுத்த ஒரு மணி நேரத்தில் வேன் ஆந்திர எல்லையில் கும்மிடிப்பூண்டி அருகில் தமிழக சோதனைச் சாவடியருகே வர, அங்கே உதவி ஆய்வாளர் மாற்று வாகனத்தோடு தயாராக நின்றிருந்திருக்கிறார்.!

வாழ்துக்கள் #எடப்பாடியார்💖💐

கேரள, ஆந்திர முதல்வர்களை கொண்டாடும் நம் மக்கள் மண்ணின் மைந்தனின் பெருமையை ஷேர் செய்யலாமே…

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME