A5 sheet in mhc

சென்னை ஐகோர்ட்டில் கால காலமாக இருந்து பச்சை நிற தாள்கள் முழுவதும் ஒழிக்கப்பட்டு விட்டது. இதுவரை வழக்குகளை லீக் சைசில் பச்சை நிறத்தில் நீதிபதிகளுக்கும் வெள்ளை நிறத்தில் அரசு வக்கீல்களுக்கும் என்று நகல்கள் வைத்து தாக்கல் செய்யப்பட்டு வந்தது. தற்போது கடந்த வாரம் முதல் வழக்குகளை ஏ4 அளவில் தான் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டப்பட்டுள்ளது.

இதன்படி ஏ4 தாளில் தான் வழக்குகளை தாக்கல் செய்வார்கள். இது ஏன் என்று கோர்ட் அதிகாரியிடம் கேட்ட போது, தற்போது ஏ4 அளவு பேப்பர் மூலம் வழக்குகள் தாக்கல் செய்தவுடன் அதை முதலில் தற்போது ஸ்கேன் செய்கிறோம். அதன்பிறகு அதற்கு உரிய எண் கொடுக்கப்பட்டு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த முறை அனைத்து வழக்குகளில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ளது. ஏ4 முறை மூலம் கோர்ட் வழக்குகள் அனைத்தும் கம்பூட்டர் மையம் ஆகிவிடும். பழைய முறைப்படி வழக்கு கோப்புகள் காணாமல் போனால் கண்டுபிடிக்க முடியாது. இது கடினம். தற்போது ஸ்கேன் செய்வதால் எந்த வழக்கும் காணாமல் போகாது. எந்த நேரம் வழக்குகளின் எண் தட்டினால் அதை கண்டுபிடிக்கலாம். இது நல்ல முறை என்று கூறினார்.

இதுபற்றி ஒருசில வக்கீல்களிடம் கேட்ட போது, கோர்ட் பிறப்பிக்கும் முறையை நாங்கள் எதிர்க்கவில்லை. இதை விரைவாக நிறைவேற்ற அதிகமாக ஆட்களை நியமித்து விரைவில் வழக்கிற்கான எண்ணை கொடுக்க வேண்டும். தற்போது ஸ்கேன் செய்வதால் புதிய வழக்குகளுக்கு புதிய எண் கொடுப்பதற்கு 3 நாள் ஆகிறது என்றார்.

You may also like...