Senior Advt Wilson: மெட்ரோ ரெயில் திட்டம் : தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை ; வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு !!

[28/11, 09:45] Senior Advt Wilson: மெட்ரோ ரெயில் திட்டம் :

தமிழகத்திற்கு நியாயமான
நிதி கிடைக்கவில்லை ;

வில்சன் எம்.பி., குற்றச்சாட்டு !!

சென்னை,நவ.28-

மெட்ரோ ரெயில் திட்டத்தில்
தமிழகத்திற்கு நியாயமான
நிதி கிடைக்கவில்லை என்று
தி.மு.க. மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன் குற்றஞ்சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் கூறியதாவது :-

சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ரூ.85,395 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் சென்னை மெட்ரோ கட்டம் -1 விரிவாக்கம் உட்பட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.15,355.78 கோடி முழுவதையும் விடுவித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் டோகன் சாஹூ பதில் அளித்துள்ளார்.

ஆனால், தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.986.78 கோடி என்று அவரது எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது. இதில் எந்த எண்ணிக்கை சரியானது அமைச்சர் டோகன் சாஹூ அவர்களே ?

மேலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தது குறித்தோ அல்லது பெரும் பற்றாக்குறைத் தொகை தமிழக அரசுக்கு எப்போது ஈடு செய்யப்படும் என்பது குறித்தோ மனோகர் லால் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை. ஒன்று மட்டும் நிச்சயம்; தமிழகத்திற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

படம் :

வில்சன்
[28/11, 10:19] sekarreporter1: 👍

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *