திருப்போரூர் கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை, தர்கா ஆக்கிரமித்திருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இந்து அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருப்போரூர் கந்தசாமி கோவிலின் 2 ஏக்கர் நிலத்தை, தர்கா ஆக்கிரமித்திருப்பதாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க இருப்பதாகவும் இந்து அறநிலைய துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

திருப்போரூர் கந்தசாமி கோவில் நிலங்களை மீட்க கோரி ஜெகநாத், என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை மீட்க இந்து அறநிலைய துறைக்கு உத்தரவிட்டிருந்தது.

ஆனால் நீதிமன்ற உத்தரவின் படி நிலங்களை மீட்கப்படவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஸ்ரீராம், செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு, இந்து அறநிலைய துறை பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இந்து அறநிலைய துறை தரப்பில், திருப்போரூர் கந்தசாமி கோவில் செயல் அலுவலர் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், திருப்போரூர் கந்தசாமி கோவில் சொந்தமான அறக்கட்டளைக்கு கோவளம், நெமிலி, சாளுவன்குப்பம், கிருஷ்ணன் கருணை உள்ளிட்ட இடங்களில் 18.76 ஏக்கர் நிலங்கள் இருப்பதாகவும் அதில் ஆக்கிரமிப்பில் உள்ள 11.67 ஏக்கர் நிலங்களில் இருந்து ஆக்கிரமிப்பு அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலங்களை ஆக்கிரமித்துள்ள 184 பேரை வெளியேற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, அதன்படி மீனவர்கள், இறால் பண்ணை வைத்திருந்தவர்கள், தனி நபர் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு 2 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுகல்பாக்கம் பகுதியில் கோவில் நிலத்தில் இருந்த சிறுவர் பூங்கா, கிணறுகள், நீர் மேலாண்மை செய்யக்கூடிய அமைப்புகள் அனைத்தும் அகற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோவில் நிலங்களை பாதுகாக்கும் வகையில் 10.44 கோடி ரூபாய் செலவில் சுற்றுச் சுவர் எழுப்பி, இரும்பு கதவுகள் பொருத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் நிலத்தில் 2 ஏக்கர் பரப்பை தர்கா ஆக்கிரமித்துள்ளதாகவும் அதை மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்து அறநிலைய துறை தொடர்ந்த வழக்கு தமிழ் நாடு வஃக்பு தீர்ப்பாயத்தில் நிலுவையில் இருப்பதாகவும், அதுமட்டுமல்லாமல் 123 ஆக்கிரமிப்பாளர்கள் மீதான நடவடிக்கை தொடர்வதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பதில் மனுவை பதிவு செய்த நீதிபதிகள், இது தொடர்பாக பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கினை 2 வாரத்திற்கு தள்ளி வைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *