பெண் எஸ்பி பாலியல் தொல்லை அளித்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெண் எஸ்பி பாலியல் தொல்லை அளித்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத ஓய்வுப்பெற்ற ஐஜி முருகனை கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஈரோட்டில் அதிரடிப்படையில் பணிபுரிந்த ஐஜி முருகன், சென்னை ஆலந்துாரில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில், 2018 ம் ஆண்டில் இணை இயக்குனராக பணிபுரிந்த போது, பெண் எஸ்பிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அதிகாரி அளித்த புகாரின் அடிப்படையில், சிபிசிஐடி போலிசார் விசாரணை நடத்தி ஐஜி முருகன் மீது பெண் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கிழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது.
இந்நிலையில் இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி ஐஜி முருகன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீது விசாரணை நடத்திய சைதாப்பேட்டை நீதிமன்றம் கடந்த நவம்பர் 15 ம் தேதி பெண்களுக்கு எதிரானக் குற்றங்களில் பாதிக்கப்பட்ட
பெண்ணின் சாட்சியம் நம்பத்தகுந்ததாக இருப்பின் அதனை மட்டுமே
அடிப்படையாகக் கொண்டு எதிரியின் மீதான குற்றச்சாட்டானது நிரூபிக்கப்பட்டதாக
தீர்மானிக்கப்போதுமானது எனக் கூறி முருகனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது
மேலும் இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவு நடைமுறைக்காக முருகன் நேரில் ஆஜராக உத்தரவிட்டு வழக்கினை ஒத்தி வைத்திருந்தது.
இதனிடையே இந்த வழக்கு சைதாப்பேட்டை நீதிமன்ற நீதிபதி சுல்தாஜ் ஆரிபீன் முன் விசாரணைக்கு வந்த போது, குற்றச்சாட்டு பதிவிற்கு ஐஜி முருகன் ஆஜராகவில்லை,
இதையடுத்து, உத்தரவிட்ட நீதிபதி ஓய்வு பெற்ற ஐஜி முருகன் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பித்து வழக்கின் விசாரணையை 2025 ம் ஆண்டு ஜனவரி 2 ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.