அரசியலமைப்பு திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 லிருந்து 70 ஆகவும் உயர்த்த வேண்டும் – அனைத்தும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம். d. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல் இந்த வேண்டுகோள்களை தாங்கள் சாதகமாக பரிசீலித்து செயலாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி பி.வில்சன் எம்.பி மாநிலங்களவை உறுப்பினர் தமிழ்நாடு

18.11.2024
பெறுநர் :
திரு.அர்ஜூன் ராம் மெக்வால்
மாண்புமிகு ஒன்றிய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் அவர்கள்,
இந்திய அரசு.

மதிப்பிற்குரிய
திரு.அர்ஜூன் ராம் மெக்வால் அவர்களுக்கு, வணக்கம்.

பொருள்: அ. டெல்லியில் உள்ள அரசியலமைப்பு அமர்வினைத் தவிர வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்.

ஆ.பிரதிநிதித்துவ நீதித்துறை – அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்தல்.

இ. அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டு வருவதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70 ஆகவும் உயர்த்துதல்.

ஈ. உச்சநீதிமன்றம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் உள்ள உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் விகிதாச்சாரத்திற்கேற்ப அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரித்தல்.

இந்த கடிதத்தின் வாயிலாக தங்களின் நலமறிய விழைகிறேன்.

உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுதல்.

1. நீதிக்கான அணுகல் கோட்பாடு நமது அரசியலமைப்பில் பொறிக்கப்பட்டுள்ளது. அத்தகைய நீதிக்கான அணுகல் சமூகத்தின் அடித்தட்டு வரை கிடைப்பதை உறுதி செய்ய, இந்திய உச்ச நீதிமன்றமானது இந்த நாடு முழுவதும் உள்ள ஏழை மற்றும் விளிம்பு நிலை சமூகங்களுக்கு எளிதில் அணுகக்கூடியதாகவும், கிடைக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.

2. உச்ச நீதிமன்றம் ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு பார்க்காவிட்டாலும், உச்ச நீதிமன்றத்திற்கான அணுகல் என்பது யாருக்கு மட்டுமே கிடைக்கிறது என்றால், (i) புவியியல் ரீதியாக உச்ச நீதிமன்றத்திற்கு நெருக்கமான குடிமக்கள் மற்றும் (ii) வழக்கு மற்றும் பயணச் செலவுகள் பொருட்டல்லாத நிதி வசதியுள்ள வகுப்பினர்..
பொருளாதார காரணிகள் காரணமாக இந்திய உச்ச நீதிமன்றத்திற்கான அணுகலை மறுக்க முடியாது, இது அரசியலமைப்பு ஆணைக்கு முரணானது. உச்ச நீதிமன்றம் புது தில்லியில் அமைந்திருப்பதாலும் (இது நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சமதூரத்தில் இல்லை) மற்றும் பல மாநிலங்களிலிருந்து, குறிப்பாக தெற்கு, தென்மேற்கு மற்றும் கிழக்கு மாநிலங்களிலிருந்து வெகு தொலைவில் இருப்பதாலும், இந்த மாநிலங்களில் உள்ள குடிமக்கள் தூரம் காரணமாக மட்டுமல்லாமல், செலவு காரணி காரணமாகவும் உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கான அடிப்படை உரிமையை இழக்கிறார்கள்.

3. இந்த நிலையை மாற்ற, சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழுக்கள், 2004, 2005, 2006 மற்றும் 2008 ஆம் ஆண்டுகளில் உச்சநீதிமன்றத்தின் மண்டல அமர்வுகளை அமைக்க பரிந்துரைத்தன. நான் அங்கம் வகிக்கும் பணியாளர், பொதுமக்கள் குறைதீர்ப்பு, சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 133வது அறிக்கையானது 7 ஆகஸ்ட் 2023 அன்று, உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவ பரிந்துரைத்தது. மேலும், பல்வேறு சட்ட ஆணைய அறிக்கைகளும் பிராந்திய அமர்வுகளை நிறுவ பரிந்துரைத்துள்ளன. சட்ட ஆணையம் தனது 229வது அறிக்கையில், உச்ச நீதிமன்றத்தை டெல்லியில் ஒரு அரசியல் சாசன அமர்வாகவும், டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பையில் உள்ள நான்கு மண்டலங்களில் உயர் நீதிமன்றங்களில் இருந்து மேல்முறையீட்டுப் பணிகளைக் கையாளும் அமர்வுகளாகவும் பிரிக்க வேண்டியதன் அவசியம் குறித்து ஒன்றிய அரசுக்கு ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. அத்துடன் உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விரிவாக விவாதித்தது. இருப்பினும் நாடாளுமன்ற நிலைக்குழு மற்றும் சட்ட ஆணைய அறிக்கைகளை சட்ட அமைச்சகம் புறந்தள்ளியுள்ளது.

4. உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை நிறுவுவதன் மூலம், நீதிக்கான கூடுதல் அணுகலை உருவாக்கி, அதை பலவீனப்படுத்தாமல் நீதித்துறை நிறுவனங்களை வலுப்படுத்துவோம்.
இது நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும், இதன் விளைவாக வழக்குகள் விரைவாக முடிக்கப்படும் மற்றும் நிலுவையில் உள்ள வழக்குகளின் தேக்கத்தை குறைக்கும். மாண்புமிகு உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்கும். எனவே, இதை எந்தக் கோணத்தில் இருந்து பார்த்தாலும், உச்ச நீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை அமைப்பது காலத்தின் தேவையாகும்.
பிரதிநிதித்துவ நீதித்துறை – உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமிக்கும் போது சமூக நீதி மற்றும் பன்முகத்தன்மையை உறுதி செய்தல்.

5. இரண்டாவதாக, உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளை நியமிப்பதில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மை இல்லை.
மேலும் ஒரு பரந்த பன்முகத்தன்மை பற்றாக்குறை உள்ளது. 2024 ஜூலையில் எழுப்பப்பட்ட எனது பாராளுமன்ற கேள்விக்கு மாண்புமிகு சட்ட அமைச்சர் எழுத்து மூலம் அளித்த பதிலில் உயர் நீதித்துறையில் பன்முகத்தன்மை பற்றாக்குறை குறித்த அதிர்ச்சியூட்டும் தகவல் வெளிப்பட்டது. ஜூலை 22, 2024 வரை பல்வேறு உயர் நீதிமன்றங்களுக்கு நீதிபதிகளாக நியமிக்கப்பட்ட 661 பேரில், தரவுகளின்படி, 21 பேர் எஸ்சி வகுப்பையும், 12 பேர் எஸ்டி வகுப்பையும், 78 பேர் ஓபிசி வகுப்பையும் மற்றும் 499 பேர் பொதுப் பிரிவையும் சேர்ந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. இந்தியாவில், அரசியலமைப்பு மௌனமாக இருக்கிறது என்ற போர்வையில் அரசியலமைப்பு இடஒதுக்கீட்டை செயல்படுத்தாத ஒரே அமைப்பு உயர் நீதித்துறை மட்டுமே. இருப்பினும், இந்த நியமனங்களில் சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதியை அமல்படுத்த எந்த தடையும் இல்லை. உயர் நீதித்துறையில் ஒரு சமூகம் மட்டுமே ஆதிக்கம் செலுத்துகிறது, இது சமூகத்திற்கு ஆரோக்கியமற்றது. காரணம், நீதித்துறையின் பன்முகத்தன்மை என்பது தீர்ப்பின் தரத்திற்கு அடிப்படையானதாகும். பல்வேறு சமூகங்களைச் சார்ந்தவர்கள் உயர் நீதித்துறையில் மோசமாக பிரதிநிதித்துவம் பெற்றுள்ளனர். உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்த மிகவும் குறுகிய, ஒருபடித்தான நீதிபதிகள் குழு மட்டுமே ஒட்டுமொத்த சமூகத்தின் கருத்துக்களையும் விழுமியங்களையும் பிரதிபலிக்க முடியாது என்று இந்த நாட்டு மக்கள் அஞ்சுகிறார்கள். குறிப்பாக பல்வேறு மொழி, கலாச்சார மற்றும் தலைமுறை விஷயங்களை உள்ளடக்கிய பிரச்சினைகளில், நீதிபதிகள் தங்கள் பின்னணியின் அடிப்படையில் சட்டத்தை விளக்கி அமல்படுத்துவதால் அவர்களுக்கு வேறுபட்ட கண்ணோட்டம் தேவைப்படும்.

6. பணியாளர்கள், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு நாடாளுமன்றத்தில் “நீதித்துறை செயல்முறைகள் மற்றும் அவற்றின் சீர்திருத்தம்” குறித்த தனது 133 வது அறிக்கையில் இந்த பிரச்சினைகளை எழுப்பியது. உயர் நீதித்துறைக்கான நியமனங்களுக்கான பரிந்துரைகளை வழங்கும்போது, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கொலீஜியம் போதுமான எண்ணிக்கையிலான பெண்கள் மற்றும் சிறுபான்மையினர் உட்பட விளிம்புநிலை சமூகத்தைச் சேர்ந்தவர்களை பரிந்துரைக்க வேண்டும் என்று நாடாளுமன்ற நிலைக்குழு வலியுறுத்தியது. தற்போது இறுதி செய்யப்பட்டு வரும் நடைமுறை குறிப்பாணையில் (Memoranda of Procedure – MoP) இந்த விதி குறிப்பிடப்பட வேண்டும். மேலும், தற்போது உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் பணியாற்றும் அனைத்து நீதிபதிகளின் இதுபோன்ற தரவுகளை சேகரிப்பதற்கான வழிவகைகளை கண்டறிய நீதித்துறைக்கு இக்குழு பரிந்துரைத்தது. அவ்வாறு செய்ய, நீதிபதிகளின்சேவைச் சட்டம் / சேவை விதிகளில் தேவையான திருத்தங்கள் செய்யப்படலாம்.

7. பல்வேறு சமூகங்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரைப் போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தும் மிகவும் மாறுபட்ட நீதித்துறை விரும்பத்தக்கது.. ஏனெனில் அவ்வாறு இல்லாத நிலையில் பிரதிநிதித்துவப்படுத்தப்படாத வகுப்புகளின் மீறலுக்கான வாய்ப்புகள் கணிசமாக அதிகரித்துள்ளது. இது மறைமுகமாக பாகுபாட்டைக் குறிக்கும். அமர்வுகளில் உள்ள பன்முகத்தன்மை நீதித்துறை நடுநிலைத்தன்மையை மேம்படுத்துகிறது மற்றும் நீதி நிர்வாகத்தில் பொதுமக்களின் நம்பிக்கையை அதிகரிக்கிறது. மேலும், சமூகத்தில் வளர்ந்து வரும் பன்முகத்தன்மையை ஈடு செய்ய நீதித்துறையிலும் பன்முகத்தன்மை தேவைப்படுகிறது, ஏனெனில் நமது இந்திய சமூகம் பல்வேறு மதங்கள், சமூகங்கள், சாதிகள், மொழிகள் மற்றும் கலாச்சாரங்களைச் சேர்ந்த மக்களின் கலவையைக் கொண்டுள்ளது. நன்கு செயல்படும் நீதித்துறைக்கு நடு நிலைத்தன்மை அவசியம் என்பது உண்மை. நீதிபதிகளின் நியமனங்களில் சமூக பன்முகத்தன்மையைப் பின்பற்றுவதில் வெளிப்படையான மீறல்கள் இருந்தபோதிலும், உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூக பன்முகத்தன்மை மற்றும் சமூக நீதியை அமல்படுத்துவது தொடர்பாக தேவையான அரசியலமைப்பு திருத்தங்களைக் கொண்டுவர சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் தயக்கம் காட்டுகிறது.

உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65 ஆகவும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70 ஆகவும் உயர்த்த கோரிக்கை

8. மூன்றாவதாக, நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் அதிக எண்ணிக்கையிலான நீதிபதிகளின் இடங்கள் காலியாக இருப்பதே வழக்குகளை தீர்ப்பதில் தாமதம் ஏற்படுவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். நீதிபதிகள் ஓய்வு பெறும்போது, புதிய நீதிபதிகள் உடனடியாக அவர்களின் இடங்களில் நியமிக்கப்படுவதில்லை என்ற சூழ்நிலை இந்த நிலைமையை மேலும் மோசமாக்குகிறது. உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்திற்கான நடைமுறைக் குறிப்பாணையில், உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஓய்வு பெற எதிர்பார்க்கப்படும் தேதிக்கு ஆறு மாதங்களுக்கு முன்னதாக அந்த காலியிடங்களை நிரப்பும் நடைமுறை தொடங்கப்பட வேண்டும் என்றும், இதனால் ஒரு நீதிபதி ஓய்வு பெற்றவுடன் அத்தகைய காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 01.11.2024 நிலவரப்படி, பல்வேறு உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட 1,114 பணியிடங்களில், சென்னை உயர்நீதிமன்றத்தில் 8 காலியிடங்கள் உட்பட அனைத்து உயர் நீதிமன்றங்களிலும் சேர்த்து மொத்தம் 352 க்கும் மேற்பட்ட நீதிபதிகளின் பணியிடங்கள் காலியாக உள்ளன.

9. இந்த நிலைமையை சீர்படுத்துவதற்கான உடனடி நடவடிக்கைகளில் ஒன்று என்னவென்றால், உயர்நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62-லிருந்து 65-ஆக உயர்த்துவதும், உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65-லிருந்து 70-ஆக உயர்த்துவதுமேயாகும்.

10. பணியாளர், பொது குறைகள் மற்றும் சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு 2018 – ல் தனது 96 வது அறிக்கையில், நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதை ஆதரித்தது. இது தற்போதுள்ள நீதிபதிகளைத் தக்க வைத்துக் கொள்ளவும், நீதித்துறை காலியிடங்களையும் நிலுவையில் உள்ள வழக்குகளையும் குறைக்கவும் உதவும் என்று கூறியது. மேலும், 16.03.2021 அன்று நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்யப்பட்ட பணியாளர், பொதுமக்கள் குறைகள், சட்டம் மற்றும் நீதித்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் 107வது அறிக்கை, உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை 62-லிருந்து 65-ஆக உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை முறையே 65 மற்றும் 70 ஆக உயர்த்தவும் அவர்கள் தொடர்ந்து பரிந்துரை செய்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரித்தல்

11. நான்காவதாக, உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்கள் போன்ற எந்தவொரு அமைப்பும் திறம்பட செயல்பட, வழக்குச் சுமையைக் கையாள்வதற்கும், தீர்வு விகிதத்தை மேம்படுத்துவதற்கும் போதுமான பலம் இருப்பது இன்றியமையாதது. ஏற்கெனவே, உச்சநீதிமன்ற திருத்தச் சட்டம் ( நீதிபதிகளின் எண்ணிக்கை ) , 2019-ன் மூலம் உச்சநீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 31-லிருந்து 33-ஆக (உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி நீங்கலாக) உயர்த்தப்பட்டது. இருப்பினும், 18.11.2024 நிலவரப்படி சுமார் 82247 வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை அதிகரிக்காவிட்டால் மற்றும் முழு எண்ணிக்கையில் செயல்படுவதை உறுதி செய்யும் அடுத்தடுத்த நியமனங்கள் முடிக்கப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் பல மடங்கு அதிகரிக்கும். ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பான தரவுகள் அச்சமூட்டுவதாக உள்ளன. இந்தியாவில் உள்ள 23 உயர் நீதிமன்றங்களில் சுமார் 6,20,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2019 ஆம் ஆண்டில் 4,68,000 ஆக இருந்த நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டில் 6,20,000 ஆக அதிகரித்துள்ளது. இது 33% க்கும் அதிகமாகும். உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றங்களில் நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை ஆய்வு செய்ய எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை மற்றும் உயர் நீதித்துறையில் நாளுக்கு நாள் விசாரணைக்காக தேங்கிகிடக்கும் வழக்குகளை சமாளிக்கவும், வழக்குகள் குவிந்து கிடப்பதை முடிவுக்குக் கொண்டு வரவும் சட்ட அமைச்சகம் ஆர்வம் காட்டவில்லை.

12. இந்தியாவில் மக்கள் தொகை விகிதாச்சாரப்படி 10 லட்சம் மக்கள் தொகைக்கு 21 நீதிபதிகள் உள்ளனர் என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகிறது. நிலுவையில் உள்ள ஏராளமான வழக்குகளுடன் சேர்த்து, பத்து லட்சம் மக்கள்தொகைக்கு 21 நீதிபதிகள் சேவை செய்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது என்பதை இது தெளிவாக நிரூபிக்கிறது.

13. அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்கள் ஒருபுறமிருக்க, சட்டங்களுக்கு விளக்கம் அளிப்பது, அரசியலமைப்புச் சட்ட விஷயங்களைத் தீர்ப்பது, சட்ட நீதித்துறைக்குப் பங்களிப்பது ஆகிய கடமைகளை மாண்புமிகு உச்ச நீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றங்கள் கொண்டுள்ளன. நீதிபதிகளின் எண்ணிக்கை விகிதாச்சாரத்திற்கேற்ப மாண்புமிகு உச்சநீதிமன்றம் மற்றும் மாண்புமிகு உயர்நீதிமன்றங்கள் கூடுதல் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையுடன் செயல்படுமானால், இப்பணிகள் திறம்பட மேற்கொள்ளப்படும்.
எனவே, பின்வரும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்:

a. டெல்லியில் ஒரு அரசியலமைப்பு அமர்வுடன், கூடுதலாக வடக்கு, தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு மண்டலங்களுக்கு உச்சநீதிமன்றத்தின் நிரந்தர பிராந்திய அமர்வுகளை டெல்லி, கொல்கத்தா, மும்பை மற்றும் சென்னையில் நிறுவுதல்.
b. இந்திய உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி மற்றும் சமூக பன்முகத்தன்மையை உறுதி செய்தல்.
c. அரசியலமைப்பு திருத்தங்களை செயல்படுத்துவதன் மூலம் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 62 லிருந்து 65 ஆகவும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை 65 லிருந்து 70 ஆகவும் உயர்த்த வேண்டும் – அனைத்தும் தேவையான அரசியலமைப்பு திருத்தங்கள் மூலம்.
d. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரித்தல்
இந்த வேண்டுகோள்களை தாங்கள் சாதகமாக பரிசீலித்து செயலாற்றுவீர்கள் என்று நம்புகிறேன்.

நன்றி

பி.வில்சன் எம்.பி
மாநிலங்களவை உறுப்பினர்
தமிழ்நாடு

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *