மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும், மாவட்ட நீதிமன்றங்களில் கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபியுடன் ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒசூரில் நேற்று வழக்கறிஞர் கண்ணன் என்பவர் மீது அரிவாளை கொண்டு சரமாரியாக தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து வழக்கறிஞர்கள் மீதான தாக்குதலை தடுக்க நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்பில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி கே.ஆர்.ஶ்ரீராம், நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது மூத்த வழக்கறிஞர் எஸ்.பிரபாகரன் ஆஜரானார். அப்போது, தமிழகத்தில் வழக்கறிஞர்கள் கொலை செய்யப்படுவது மற்றும் தாக்கப்படுவது தொடர் கதையாகி வருவதாக கூறினார்.

தவறிழைக்கும் வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் சார்பில் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கூறிய அவர் இது போன்ற சம்பவங்களை தடுக்க மாவட்டங்களில் உள்ள நீதிமன்றங்களில் கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

நேற்று வழக்கறிஞர் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை தொடங்கிவிட்டதா? கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், நேற்றைய சம்பவம் தனிப்பட்ட காரணங்களுக்காக நடந்துள்ளதாக தெரிவித்த நீதிபதிகள் ஒவ்வொரு நபருக்கும் பாதுகாப்பு அளிப்பது இயலாத காரியம் எனவும் கூறினர்.

இதனையடுத்து, வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை தடுக்கவும் மாவட்ட நீதிமன்றங்களில் சிசிடிவி கேமிராக்கள் பொருத்துவது உள்ளிட்டவை தொடர்பாக உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி ஆலோசனை நடத்தி பரிந்துரைகளை அளிக்க தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *