17:02] K balu: டாஸ்மாக் வழக்கு பரபரப்பான வாதமும் தலைமை நீதிபதியின் அடுக்கடுக்கான கேள்விகளும்
டாஸ்மாக் வழக்கு சென்னை உயர்நீதிமன்ற 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு இன்று விசாரணை தொடங்கி முதல் நாள் வாதம் நிறைவு பெற்றது. எனது சார்பில் மூத்த வழக்கறிஞர் என் எல் ராஜா அவர்கள் ஆஜராகி மதுக்கடைகளை திறப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார் மருத்துவ துறை ஆலோசனை இல்லாமல் மதுக்கடைகளை திறப்பது நோய்த்தொற்று பரப்புவதற்கு வாய்ப்பாக அமைந்துவிடும், சட்டம் ஒழுங்கு பிரச்சனை தலைவிரித்தாடும், காவல்துறையினர் இரவு பகல் பாராமல் ஊரடங்கு காலத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் மதுக்கடைகள் திறக்கப்பட்டால் காவல்துறையினரும் நோய்தொற்றுக்கு ஆளாக நேரிடும். குடும்ப வன்முறை தமிழகத்தில் அதிகரிக்கும் எனவே மதுக்கடைகளை திறக்கும் அரசின் முடிவிற்கு நீதிமன்றம் அனுமதிக்கக் கூடாது என்று வாதிட்டார். அதேபோன்று மூத்த வழக்கறிஞர்கள் ஏ.ஆர.எல்.சுந்தரேசன், வைகை, வீர கதிரவன், பாலன் ஹரிதாஸ், கிரிதரன் உள்ளிட்ட வழக்கறிஞர்களும் வாதிட்டு இன்று தங்கள் வாதத்தை மாலை 4 மணிக்கு நிறைவு செய்தனர்,
அரசுத்தரப்பு சார்பில் தலைமை வழக்கறிஞர் விஜய நாராயணன் வாதிட துவங்கும்போது இன்றைக்கு என்னுடைய வாதத்தை நிறைவு செய்ய முடியாது நாளையும் தொடர வேண்டும் என்று சொன்னார். அப்போது குறுக்கிட்ட தலைமை நீதிபதி மனுதாரர் தரப்பு வழக்கறிஞர்கள் சிறப்பாக தங்களுடைய வாதங்களை முன் வைத்துள்ளனர் என்று கூறியதோடு சரமாரியான கேள்விகளை தலைமை வழக்கறிஞர் முன்வைத்து இதற்கெல்லாம் விரிவான பதில் மற்றும் தெளிவான பதில் மனுவுடன் நாளை உங்களுடைய வாதத்தை துவங்குங்கள் அதற்கு முன்பாக எங்கள் கேள்விகளுக்கும் தகுந்த பதிலோடு நாளை வாருங்கள் என்று அடுக்கடுக்கான கேள்விகளை தொடுத்தார்
மகாத்மா காந்தியை கொன்ற கோட்சே வழக்கு நடைபெற்றபோது நாட்டில் இருந்த மக்கள் அனைவரும் கோட்சே விற்கு தண்டனை வழங்க வேண்டும் என்று கூறினர். அதேபோன்று அவருக்காக ஆஜரான வழக்கறிஞர் நிலையை போல் உங்களது நிலையை பார்க்கிறேன்.
ஒரு அரசின் முக்கிய நோக்கம் மக்கள் நலனா அரசின் வருவாயா
தமிழகத்தில் ஏறக்குறைய 50 ஆண்டுகாலம் மதுவிலக்கு நடைமுறையில் இருந்துள்ளது ராஜாஜி இரண்டு முறை சுதந்திரத்திற்கு முன்பும் சுதந்திரத்திற்குப் பிறகும் மதுவிலக்கை அறிவித்தார். 1948ஆம் ஆண்டு ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் மதுவிலக்கை கொண்டு வந்தார என்பதை நாங்கள் அறிந்துள்ளோம்
நீதிமன்றம் பூரண மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்பதையும் நாங்கள் உணர்கிறோம் ஆனால் மதுவின் பயன்பாட்டை கட்டுப்படுத்த அரசு தவறுகின்ற பொழுது அரசியல் சாசனத்தின் காப்பாளராக இருக்கும் நீதிமன்றம் இதில் தலையிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது
மதுக்கடைகள் திறப்பதால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்று வழக்கறிஞர்கள் வாதிடுகின்றனர் ஆனால் அதையும் தாண்டி பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது என்பதை தற்போதைய செய்திகள் நமக்கு உணர்த்துகிறது
சாதாரண சிறிய கிராமங்களில் 400, 500 பேர் மதுக்கடைகள் முன்பு குவிந்து நிற்கின்றனர். இதனால் பொது அமைதியோடு குடும்ப அமைதியும் பாதிக்கப்படும் அதை எப்படி அரசு தடுக்கப் போகிறது. இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டு இருக்க முடியாது.
நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் சில தளர்வுகள் வேண்டுமென அரசு கேட்கிறது
வழக்கில் வாதிட்ட வழக்கறிஞர்கள் பலர் ஊரடங்கு அமலில் உள்ளவரை மதுக்கடைகளை மூட வேண்டும் என்று வாதிட்டனர் ஆனால் நாங்கள் அதற்கு மேலும் மதுக்கடைகள் திறப்பதற்கு தடைவிதிக்க வேண்டுமா என சிந்தித்து வருகிறோம்.
மீண்டும் சொல்கிறோம் பூரண மதுவிலக்கை நாங்கள் தீர்ப்பாக வழங்கமுடியாது. மதுவின் பயன்பாட்டை கட்டுப்படுத்த தேவையான நிபந்தனைகளை நீதிமன்றத்தால் விதிக்க முடியும். தமிழகத்தின் முக்கிய பிரச்சனையாக இருக்கும் இந்த வழக்கை நாங்கள் விசாரிக்க மிகுந்த ஆர்வத்தோடு உள்ளோம். இதனை மனதில் கொண்டு தேவையான அனைத்து ஆதாரங்களுடன் உங்களுடைய வாதத்தை நாளை தொடங்குங்கள் என்று தலைமை வழக்கறிஞரிடம் தெரிவித்து நாளை வழக்கை ஒத்திவைத்தார்
நீண்ட காலத்திற்குப் பிறகு தமிழகத்தின் பெரும் பிரச்சனையாக இருக்கும் டாஸ்மாக் வழக்கு சரியான நீதிபதியின் கையில் தற்போது உள்ளது என்பதை உணர்கிறேன். தீர்ப்பு எப்படி இருந்தாலும் ஏற்றுக் கொள்ளப் போகிறோம் ஆனால் நிச்சயமாக இந்த வழக்கில் ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை 3 நீதிபதிகள் வழங்குவார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன் .
[5/14, 17:06] Sekarreporter 1: Tks sir
[5/14, 17:18] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1260899737638596608?s=08