வழக்குகளில் தேவையில்லாமல் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

வழக்குகளில் தேவையில்லாமல் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க கூடாது என பதிவுத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அரசுத்தரப்பு வழக்கறிஞராக பணியாற்றிய ராமசாமி என்ற வழக்கறிஞர், தனக்கு உரிய கட்டணத்தை வழங்க ம்றுத்த அரசு உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி கோவிந்தராஜ் முன் விசாரணைக்கு வந்த போது, தலைமைச் செயலாளர் சம்பந்தப்பட்டுள்ளாரா, இல்லையா என்பதை கருத்தில் கொள்ளாமல் பல வழக்குகளில் அவரை எதிர்மனுதாரராக சேர்க்கல்லடுவதாகவும், முக்கியமான பதவியை வகிக்கும் அவருக்கு பெருத்த பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அரசுத்தரப்பு வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பட்டா கோரும் வழக்கு, பட்டா ரத்து கோரும் வழக்கு, மின் இணைப்பு கோரும் வழக்குகளில் கூட தலைமைச் செயலாளர் எதிர்மனுதாரராக சேர்க்கப்படுவதாக தெரிவித்தார்.

வழக்குகளில் தேவையில்லாமல் தலைமைச் செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்க அனுமதிக்க கூடாது என பதிவுத்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனுதாரருக்கு உரிய கட்டணத்தை வழங்க அறிவுறித்தி, அரசுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்களுக்கு உரிய மரியாதை வழங்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

அரசு வழக்கறிஞர்களுக்கான கட்டணத்தை மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்க வேண்டும் எனவும், இரண்டு மாதங்களில் அவர்களின் கட்டணங்களை வழங்க வேண்டும் எனவும் அரசுக்கு நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.

You may also like...