மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும், விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்

திருமணம் ஆசை காட்டி பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மோசடி செய்த இளம் மருத்துவரின் ஜாமின் மனுவை சென்னை மாவட்ட அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த நாவலூரை சேர்ந்த 28 வயதான மருத்துவர் தினேஷ் கார்த்திக் என்கிற கார்த்திக் ராஜ் என்பவரை அடையாறை சேர்ந்த பெண் மருத்துவர் தொடர்பு கொண்டு பழகி வந்துள்ளார். திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி,12 லட்சத்து 25 ஆயிரம் பணத்தையும், ஒன்றரை லட்சம் மதிப்புள்ள ஐபோனையும் வாங்கிய தினேஷ் கார்த்திக், திருமண பேச்சு வந்தபோது நேரில் சந்திப்பதை தவிர்ப்பதாக அடையாறு காவல் நிலையத்தில் பெண் மருத்துவர் புகா அளித்துள்ளார்.

அந்த புகாரில் ஆகஸ்ட்14ல் கைதாகி சிறையில் அடைக்கப்பட்ட மருத்துவர் தினேஷ் கார்த்திக் ஜாமின் கோரி சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

இந்த மனு, பொறுப்பு முதன்மை நீதிபதி வி.தங்கமாரியப்பன் முன் விசாரணைக்கு வந்தபோது, மாநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் ஜி.தேவராஜன் ஆஜராகி, புகார்தாரரான பெண் மருத்துவர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி, அவர்களிடமிருந்து 50 லட்சம் ரூபாய்க்கு மேல் மருத்துவர் மோசடி செய்துள்ளதாகவும்,
விசாரணை நடந்து வருவதால் ஜாமின் வழங்கக்கூடாது என்றும் வாதிட்டார்.

அதை ஏற்ற நீதிபதி, மருத்துவர் தினேஷ் கார்த்திக்கின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...