பத்திரிகையாளர் மீது போடப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் அரசு வக்கீல் தாமோதரன் பேட்டி

[7/30, 10:19] Sekarreporter: திமுக ஆட்சிக்கு வந்தால் பத்திரிகைகள், ஊடகங்கள் மீது கடந்த அதிமுக ஆட்சியின்போது,தொடர்ப்பட்ட அவதூறு வழக்குகள் ரத்து செய்யப்படும் என ஏற்கனவே திமுக தேர்தல் வாக்குறுதியில் தெரிவிக்கப்பட்டது..அதனடிப்படையில
தற்போது தமிழகத்தில் உள்ள அனைத்து பத்திரிகைகள்,ஊடகங்கள் மீது கடந்த அதிமுக அரசால் போடப்பட்ட அவதூறு வழக்குகளை ரத்து செய்து அதற்கான உத்தரவை தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் நேற்று பிறப்பித்திருந்தார் .எந்த நிலையில் உள்ள வழக்குகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து
சென்னை உயர் நீதிமன்ற அரசு குற்றவியல வழக்கறிஞர் ஏ.தமோதரனிடம் கேட்ட போது, தமிழக அரசின் உத்தரவின் பேரில் தொடரப்படும் அவதூறு வழக்குகள் முதற்கட்டமாக, முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் மூலம் தாக்கல் செய்யப்படும். அந்த வழக்குகள் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்…அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் அவதூறு வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும், வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று, சில பத்திரிகைகள் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி தடை கேட்கும் ..வழக்கை ரத்து செய்ய கோரிக்கை விடுக்கும்… சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தடை விதித்தாலும், ரத்து செய்தாலும் கடந்தகால அரசு அந்த உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. ஆனால் அனைத்து வழக்குகளையும் ரத்து செய்து அரசு உத்தரவிட்டதன் மூலம் , முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் உள்ள வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் ரத்து செய்யப்பட்ட வழக்குகள்,
கடந்த அரசு மேல்முறையீடு செய்ய இருந்த
வழக்குகள் என அனைத்து வழக்குகளுக்குமே இந்த உத்தரவு பொறுந்தும் என்று விளக்கம் தெரிவித்துள்ளார்….
[7/30, 10:20] Sekarreporter: 🙏💐

You may also like...