நீர்நிலைகளை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் அவ்வையார் என்று சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்

நீர்நிலைகளை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை என்று

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் அவ்வையார்

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி பேச்சு

சென்னை, அக்.31-

நீர்நிலைகளை பாதுகாப்பது ஆட்சியாளர்களின் கடமை என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொன்னவர் அவ்வையார் என்று சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் கூறினார்

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்

சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ஜெ.ரவீந்திரன், சினேகா ஆகியோர் கொரோனா ஊரடங்கு அறிவிக்கப்பட்ட பின்னர் காணொலி காட்சி வாயிலாக கருத்தரங்கை நடத்தி வருகின்றனர். இந்த கருத்தரங்கில் சட்டம் மட்டும் அல்லாமல் பொதுவான தலைப்புகளிலும் பல முக்கிய பிரமுகர்கள் சொற்பொழிவு ஆற்றி வருகின்றனர்.
அந்த வகையில் சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், “அவ்வையார்” என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார்.

நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதாவது:-

அவ்வையின் பாடல்

அறம் செய விரும்பு, ஆறுவது சினம் என்று
ஒரு வரியில் மனித குலத்துக்கு பல கருத்துக்களை கூறியவர் அவ்வையார்.
பெரிய பதவியில் இருந்தாலும் அறத்துக்கு உட்பட்டே செயல்பட வேண்டும் என்றவர்.
ராஜேந்திர சோழன் தன் மகன் குலோத்துங்கனுக்கு முடி சூட்டுகிறான். புலவர்களை எல்லாம் அழைப்பிதழ் கொடுத்து அழைத்து வந்தான். நிகழ்ச்சியில் புலவர்கள் பலர் கவி பாடினர். அவ்வை மட்டும் “வரப்புயர” என்று சொல்லி அமர்ந்து விட்டார். யாருக்கும் புரியாத்தால், மன்னன் உள்பட அனைவருக்கும் புரியும் விதமாக அந்த பாடலை பாடினார்.

நீரின் முக்கியம்

வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும். கோல் உயரக் கோன் உயர்வான் என்ற அவ்வையின் இந்த பாடல் அனைவருக்கும் தெரியும். சோழனுக்கு மட்டுமல்ல இப்போது ஆட்சி செய்பவருக்கும் நீரின் பெருமையையும், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்துள்ளார்.
ஆட்சியாளர்கள், முதலில் பாதுகாக்க வேண்டியது நீர்நிலைகள் தான். அது அவர்களது கடமை. அவ்வாறு செய்தால்தான் நல்லாட்சி நடைபெறும் என்று பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சொல்லிச் சென்றுவிட்டார்.

சிரமத்துக்கு காரணம் என்ன?

அதுமட்டுமல்ல, தாய், தந்தை, மனைவி, பிள்ளை, நண்பன், குடும்பம் என்று பலவற்றை பற்றி பாடியுள்ளார்.
இப்போது நாம் எதிர்கொள்ளும் பல சிரமத்துக்கு காரணம் அறத்தை பிள்ளைகளுக்கு சொல்லி கொடுக்காத்து தான். அவ்வையின் அறநூலை நம் குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து விட்டாலே போதும், அவர்களை பற்றி கவலைப்பட தேவையில்லை. நாம் பிற மொழிகளை கற்பதில் தவறு இல்லை. ஆனால் அதன் காரணம் தெரிந்து கற்க வேண்டும். மொழி மீது எல்லோருக்கும் பற்று இருக்கவேண்டும். பிற மொழிகளை போல தமிழும் வளர வேண்டும்.
தமிழ் மீது நமக்கு பற்று இல்லை என்றால், நாம் தமிழன் என்று சொல்லவே முடியாது.
அவ்வையின் ஆத்திச்சூடி உள்ளிட்ட நூல்களை நம் குழந்தைகளுக்கு கற்றுக் கொடுப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.

நீதிபதி ஆர்.மகாதேவன்

இந்த நிகழ்ச்சி ஐகோர்ட்டு நீதிபதிகள், மூத்த வக்கீல்கள் என்று ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நீதிபதி எம்.எம்.சுந்தரேசின் சொற்பொழிவை கேட்ட ஐகோர்ட்டு நீதிபதி ஆர்.மகாதேவன், முன்னாள் நீதிபதி பி.ராஜேந்திரன், மூத்த வக்கீலும், ராஜ்யசபா எம்.பி. நவநீதகிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்தினர்.
,……..

You may also like...