ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பாக மாநில செயலாளர் கு. பாரதி அவர்களின் தலைமை யில் 10கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மறைந்த வழக்கறிஞர் அருள் அவர்கள் வீட்டுக்கு சென்றோம்.

வழக்கறிஞர்களின் ஆதரவிற்கு நன்றி நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

இன்று 05.05.2020 மாலை 3.30 மணியளவில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் சார்பாக மாநில செயலாளர் கு. பாரதி அவர்களின் தலைமை யில் 10கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் மறைந்த வழக்கறிஞர் அருள் அவர்கள் வீட்டுக்கு சென்றோம்.

அவரது மனைவி கவிதா(39)

மற்றும் அவரது, மகன்கள்

அருள்ஆனந்த்(19) வயது (இரண்டாம் ஆண்டு) கந்தசாமி கல்லூரி
(அரசு உதவி பெரும் கல்லூரி )

ஜோஷ்வா( 10 Std)
(அரசு பள்ளி )

ஆகியோரிடம் அனைத்து தமிழக வழக்கறிஞர்கள் சார்பாக ஆறுதல் தெரிவித்தோம்.

மறைந்த வழக்கறிஞர் அருள் அவர்களின் வீடு சிமெண்ட் ஷீட் போட்ட வீடு தான்.

அவர்களிடம் பழைய இரு சக்கர வாகனம் ஸ்பிளெண்டெர் ப்ளஸ் வண்டி ஒன்று உள்ளது.

அவர்கள் இருக்கும் வீட்டிற்கு பட்டா கூட கிடையாது என்றனர்.

அவர்களிடம் மறைந்த வழக்கறிஞர் அருள் அவர்களின் குடும்பத்தினரிடம் கேட்ட போது அவர்கள்

அருள் அவர்களுக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் இருதய ஆப்ரேசன் நடந்தது அதற்காக வீட்டிலிருந்த நகைகளை அடமானம் வைத்து தான் ஆப்ரேசன் செய்யப்பட்டது.

அதற்கு முன்பு அவர் கராத்தே பயிற்சி அளித்து வந்தார்.

அவருக்கு ஒரே வருமானம் நீதிமன்றதிற்கு செல்வதன் மூலமாக தான் என்று கூறினார்கள்.

அவர்களின் பிள்ளை களின் எதிர்காலத்தை எண்ணி கவலை அடைந்தனர்.

மேலும் எங்களுக்கு கோடி கணக்கில் சொத்து உள்ளது என்றும், கணவன் மனைவி தகராறு காரணமாக தான் இறந்து விட்டார் என்றெல்லாம் தவறாக கூறி வருகிறார்கள் என்றும், கூறினர்.

மேலும் இந்த 144 உத்தரவால் அவர் வருமானம் இன்றி இருந்ததால் மன வருத்தமாக இருந்ததாக தெரிவித்தார்கள்

மேலும் அருள் அவர்களை பற்றி அங்கு இருந்த பொதுமக்கள் அவர் வக்கீல் பீஸ் கூட கம்மியா தான் வாங்குவாரு, ரொம்ப நேர்மையானவர் என்றும், அவரது இறப்பு மிகுந்த கவலை அளிக்கிறது என்றும் கூறினார்கள்.

பிறகு நாங்கள் இறந்த வழக்கறிஞர் அருள் குடும்பதினரிடம்

முடிந்த வரை தமிழக வழக்கறிஞர் உதவி வருகிறார்கள். மேலும் வழக்கறிஞர்கள் நிதி கொடுத்தால் அதனையும் உங்களிடம் சேர்க்க நாங்கள் தயாராக உள்ளோம்.

வழக்கறிஞர்கள் படிப்பு செலவுகளை ஏற்று கொள்ள கூட தயாராக இருக்கிறார்கள் என்றும் கூறினோம்.

பிறகு ஜனநாயக வழக்கறிஞர் சங்க சார்பாக தமிழக வழக்கறிஞர்களிடம் வசூல் செய்யப்பட்ட தொகை

முதல் தவணையாக
ரூ. 50,000/- நிதியை ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் மாநில செயலாளர் கு. பாரதி அவர்கள் அளித்து,

இறந்த வழக்கறிஞர் திரு. S.அருள்
அவர்களின்
மனைவி திருமதி. கவிதா அவர்கள்
பெற்றுக்கொண்டார்.

தற்போது இன்றைய ஊரடங்கு சூழ்நிலையில் கூட ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் வேண்டுகோள் ஏற்று நிதி மற்றும் ஆதரவு கொடுத்து வரும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும்
நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறோம். 🙏💐

மேலும் தற்போது வழக்கறிஞர் அருள் அவர்களின் குடும்பத்திற்கு வழக்கறிஞர்கள் நிதி கொடுத்து வருகின்றனர்.
வழக்கறிஞர்கள் கொடுக்கும் நிதியை நேர்மையாக கொண்டு போய் சேர்க்கபடும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.

இந்த விசயத்தில் ஒத்துழைப்பு கொடுத்த
வழக்கறிஞர்களின்
ஒற்றுமை வெல்லட்டும் !!

✊✊✊✊✊

மேலும் கீழ்க்கண்ட
வங்கி கணக்கிற்கு உங்களால் முடிந்தவரை
நிதி அனுப்புமாறு DAA சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.

வங்கி கணக்கில் பணம் போட்ட விவரத்தை யும் தெரிவிக்குமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

BHARATHI
Ac.No.777087444
IFSC.No.IDIB000M157
INDIAN BANK
MADRAS HIGH COURT BRANCH

K.BHARATHI
State secretary (DAA)
9710263648, 9841399900.

இச்செய்தியை வழக்கறிஞர் நண்பர்கள் Share செய்யவும்..

You may also like...