சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.வைத்தியநாதன், இன்று ஹைதராபாத் போய்விட்டு மீண்டும் சென்னைக்கு இண்டிகோ ஏர்லைனில் திரும்பியபோது, அவரது லக்கேஜ் பையின் பூட்டு உடைக்கப்பட்டுப் பொருள்களைத் திருடும் முயற்சி நடைபெற்றுள்ளது.நீதிபதி அவர்களுடன், சென்னை நந்தனம் அரசு கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் சீ.ரகு அவர்களும், சென்னை அரசு போட்டித் தேர்வுகள் பயிற்சி மைய முதல்வர் முனைவர் இரா.இராமன் அவர்களும் பயணம் செய்துள்ளனர். நீதிபதியின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் ஒரு புகழ்பெற்ற தொழிற்சங்கவாதி ஆவார். அவரது வாழ்க்கை வரலாற்றைச் சான்றுகளுடன் எழுதுவதற்காகப் பல்வேறு ஊர்களுக்கு நீதிபதியும் பேராசிரியர்களும் தொடர்ந்து பயணித்து வருகின்றனர். இந்நிலையில், ஓர் அறிவுப் பயணத்தில், இத்தகைய சம்பவம் நிகழ்ந்தது மிகவும் வருத்தமளிப்பதாக உள்ளது என்று பேராசிரியர்கள் கூறினார்கள்

You may also like...