சுஷாந்த் சிங் மரணம் : ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமின் மறுப்பு

தலைப்புச்செய்திகள்சுருக்கம்தமிழகம்மாவட்டம்நகரம்தேசம்சிதாராபுகைப்படங்கள்காணொளிகுற்றம்சாம்பியன்வணிகம்சர்வதேசம்டெக்சுகிபவஎனது விருப்பம்கருத்து
img
INSTALL APP
img
CHANGE STATE
img
SEARCH
img
MORE
ETV
சுஷாந்த் சிங் மரணம் : ரியா சக்ரபோர்த்திக்கு ஜாமின் மறுப்பு

Published :2 hours ago
மும்பை : நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள நடிகை ரியா சக்ரபோர்த்தி, ஜாமின் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
நடிகர் சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக அவரது முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்ரபோர்த்தியை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் கடந்த செவ்வாய்கிழமை கைது செய்தனர்.

கடந்த மூன்று நாள்களாக அவரை போதைப்பொருள் தடுப்புப் பிரிவுனர் விசாரணை நடத்தி வந்தனர். அதைத்தொடர்ந்து இன்று (செப்.09) வீடியோ கான்பரன்ஸ் முறையில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது நடிகை ரியா சக்ரபோர்த்தி சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.ஆனால் அவரது ஜாமின் மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. அவருக்கு போதை மருந்து கும்பலுடன் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்த போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர், சுஷாந்த் சிங்கிற்காக அவர் போதை மருந்துகளை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.ஏற்கனவே மூன்று நாட்கள் அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவரது போலீஸ் காவலை நீட்டிக்க விரும்பவில்லை என்று போதைப்பொருள் தடுப்புப் பிரிவு தெரிவித்தது. இதையடுத்து அவரை 14 நாள்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரிவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து மும்பையிலுள்ள பைகுல்லா பெண்கள் சிறப்பு சிறைக்கு அவர் கொண்டு செல்லப்பட்டார்.நடிகை ரியாவின் ஜாமின் குறித்து, அமர்வு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளதாக அவரது வழக்கறிஞர் சதீஷ் மானேஷிண்டே தெரிவித்துள்ளார்.பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் கடந்த ஜூன் 14ஆம் தேதி மும்பை பாந்திராவில் உள்ள தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சுஷாந்தின் மரணம் குறித்து அவரது தந்தை அளித்த புகாரைத் தொடர்ந்து, சி.பி.ஐ., அமலாக்கத்துறை, போதைப்பொருள் தடுப்புப் பிரிவு ஆகிய மூன்று முகமைகள் இந்த வழக்கை விசாரித்து வருகின்றன.போதைப்பொருள் பயன்படுத்தியது, வாங்கியது, விற்றது தொடர்பாக சுஷாந்த் சிங்கின் முன்னாள் காதலியும், நடிகையுமான ரியா சக்கரபோர்த்தியின் தம்பி சோவிக், நடிகர் சுஷாந்த் சிங்கின் வீட்டு மேலாளர் சாமுவேல் மிரண்டா, வேலைக்காரர் திபேஷ் சாவந்த் உள்ளிட்ட எட்டு பேர் தற்போது வரை கைது செய்யப்பட்டுள்ளனர்.

You may also like...