ஏற்புரை ஆற்றிய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, குடும்பத்தையும், பணியையும் சிறப்பாக நடத்துவது கயிறின் மேல் நடப்பது போன்றது என்று குறிப்பிட்ட அவர், அதில் திறம்பட செயல்பட்டுள்ளதாக பெருமைபட தெரிவித்தார்.

[2/25, 18:08] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1960ம் ஆண்டு பிறந்த அவர், 1985ல் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். அவரது தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்வி நிறுவன பணியாளர்ளுக்கு இ.எஸ்.இ. பொருந்தும் என மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு தலைமை வகித்தவர் இவர்.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கியது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என தீர்ப்பளித்தது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது.

அவர் பிப்ரவரி 27ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். 27ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் இன்று அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிலழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். அப்போது, ஹாக்கி விளையாட்டு வீராங்கனையான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, சிக்கலான வழக்குகளை விரிவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளாதாக குறிப்பிட்டார். 8 நீதிபதியாக பதவிவகித்த 8 ஆண்டுகள் 3 மாதங்களில் 38,206 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்த அரசு தலைமை வழக்கறிஞர், விரைவில் அதை எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரை ஆற்றிய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, குடும்பத்தையும், பணியையும் சிறப்பாக நடத்துவது கயிறின் மேல் நடப்பது போன்றது என்று குறிப்பிட்ட அவர், அதில் திறம்பட செயல்பட்டுள்ளதாக பெருமைபட தெரிவித்தார்.

அர்த்தமுள்ள வகையில் பணியாற்றி இருப்பது குறித்து திருப்தி அடைவதாகவும் தெரிவித்தார்.

நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவேன் என நினைத்து பார்த்திருக்கவில்லை என்றும், எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அனைத்து மகளிர் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் தன்னை இடம்பெறச்செய்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நன்றிகளை தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் 2 லட்சத்து 80 வழக்குகளை முடித்து, நாட்டிலேயே அதிக வழ்ககுகளை முடித்த இரண்டாவது உயர் நீதிமன்றம் என்ற பெருமைக்கு காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
[2/25, 18:08] Sekarreporter 1: நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா ஏற்புரை

25:55 நிமிடத்திலிருந்து 38:50 நிமிடங்கள் வரை உள்ளது
[2/25, 18:08] Sekarreporter 1: பத்திரிகையாளர்களுக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பாராட்டு, நன்றி….

நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுகளை செய்திகள் வாயிலாக மூலைமுடுக்கெல்லாம் மக்களிடம் கொண்டு சென்றதாக பத்திரிகையாளர்களுக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பாராட்டும், நன்றியும் தெரிவித்தார்.

You may also like...