எங்கே? எங்கே? எங்கே? எங்கே?* பனையோலை விசிறி எங்கே? பல்லாங்குழி எங்கே? கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே? கோகோ விளையாட்டு எங்கே? சாக்கு பந்தயம் எங்கே? Advt question

*எங்கே? எங்கே? எங்கே? எங்கே?*

பனையோலை விசிறி
எங்கே?

பல்லாங்குழி எங்கே?

கிச்சுகிச்சு தாம்பாளம் எங்கே?

கோகோ விளையாட்டு
எங்கே?

சாக்கு பந்தயம் எங்கே?

கில்லி எங்கே?

கும்மி எங்கே?

கோலாட்டம் எங்கே?

திருடன் போலீஸ் எங்கே?

ஆலமர விழுது ஊஞ்சல் எங்கே?

மரப்பாச்சி கல்யாணம் எங்கே?

மட்டை ரெயில் எங்கே?

கமர்கட் மிட்டாய் எங்கே?

குச்சி மிட்டாய் எங்கே?

குருவி ரொட்டி எங்கே?

இஞ்சி மொரப்பா எங்கே?

கோலி குண்டு எங்கே?

கோலி சோடா எங்கே?

பல்துலக்க ஆலங்குச்சி
எங்கே?

எலந்தை பழம் எங்கே?

சீம்பால் எங்கே?

பனம்பழம் எங்கே?

பழைய சோறு எங்கே?

நுங்கு வண்டி எங்கே?

பூவரசன் பீப்பி எங்கே?

கைகளில் சுற்றிய பம்பரங்கள்
எங்கே?

நடைபழக்கிய நடை வண்டி
எங்கே ?

அரைஞாண் கயிறு எங்கே?

அன்பு எங்கே?

பண்பு எங்கே?

பாசம் எங்கே?

நேசம் எங்கே?

மரியாதை எங்கே?

மருதாணி எங்கே?

சாஸ்திரம் எங்கே?

சம்பரதாயம் எங்கே?

விரதங்கள் எங்கே ?

மாட்டு வண்டி எங்கே?

மண் உழுத எருதுகள் எங்கே?

செக்கிழுத்த காளைகள் எங்கே?

எருமை மாடுகள் எங்கே?

பொதி சுமந்த கழுதைகள் எங்கே?

பொன் வண்டு எங்கே?

சிட்டுக்குருவி எங்கே?

குயில் பாடும் பாட்டு எங்கே?

அரிக்கேன் விளக்கு எங்கே?

விவசாயம் எங்கே?

விளை நிலம் எங்கே?

ஏர்கலப்பை எங்கே?

மண் வெட்டி எங்கே?

மண்புழு எங்கே?

வெட்டுமண் சுமந்த பின்னல்
கூடை எங்கே ?

பனை ஓலை குடிசைகள்
எங்கே ?

தூக்கனாங் குருவி கூடுகள்
எங்கே ?

குளங்களில் குளித்த
கோவணங்கள்
எங்கே?

அந்த குளங்களும் எங்கே?

தேகம் வளர்த்த சிறுதானியம்
எங்கே?

அம்மிக்கல் எங்கே?

ஆட்டுக்கல் எங்கே?

மோர் மத்து எங்கே?

கால்கிலோ கடுக்கன் சுமந்த
காதுகள் எங்கே ?

நல்லது கெட்டது சுட்டிக்காட்டும்
பெரியவர்கள் எங்கே?

தோளிலும் இடுப்பிலும் சுமந்த
பருத்தி துண்டு எங்கே ?

பிள்ளைகளை சுமந்த
அம்மாக்கள் எங்கே ?

தாய்ப்பாலைத் தரமாய்
கொடுத்த தாய்மை
எங்கே ?

மங்கலங்கள் தந்த
மஞ்சள்பை
எங்கே ?

மாராப்பு சேலை
அணிந்த பாட்டிகள்
எங்கே?

இடுப்பை சுற்றி சொருகிய
சுருக்கு பணப்பை
எங்கே?

தாவணி அணிந்த இளசுகள்
எங்கே ?

சுத்தமான நீர்
எங்கே ?

மாசு இல்லாத காற்று எங்கே ?

நஞ்சில்லாத காய்கறி எங்கே?

பாரம்பரிய நெல் ரகங்களும்
எங்கே?

எல்லாவற்றையும் விட
நம் முன்னோர்கள்
வாழ்ந்த முழுஆயுள் நமக்கு
எங்கே?

*”சிந்திக்க நமக்கு”*
*”நேரம்தான்எங்கே?”*
*எங்கே???”*

*”இத்தனையும் தொலைத்துவிட்டு”*
*”நாம் செல்கின்றஅவசரப்பயணம் தான்”* *எங்கே?”* 25 வருடங்களுக்கு முன்
.
1. செருப்பு அறுந்தால் தைத்து போட்டுக்
கொண்டோம்..!
.
2. காதலித்து திருமணம் செய்தாலும்
கணவனை “வாங்க, போங்க” என்று தான் மனைவி
அழைப்பாள்..!
.
3. ஆணியில் மாட்டி கிழிந்த துணியை
தைத்து உடுத்தி கொண்டோம்..!
.
4. முதல் நாள் கூட்டு பொறியல் ரசம்
சாம்பாரை சுண்ட செய்து பழங்கஞ்சியுடன்
பருகினோம்..!
.
5. எல்லா கல்யாணத்திலும் மத்திய உணவு
பிரதானமாக இருந்தது வடை பாயசத்துடன்..!
.
6. ரயில் பயணத்திற்கு புளிசாதமும்
எலுமிச்சை சாதமும் கட்டி சென்றோம்..!
.
7. பெரும்பாலும் பேருந்தில் தான்
போனோம்..!
.
8. பள்ளி மாணவர்கள் குழந்தைகளாக
இருந்தனர்..!
.
9. இளையராஜா தான் எங்கும் ஒலித்தார்..!
.
10. பாடல்களின் வரிகள் புரிந்தன..!
.
11. காதலிப்பவர்களுக்கும் உறவுகளுக்கும்
கடிதங்கள் எழுதினோம்..!
.
12. ரஜினி கமல் ‘பொங்கல்’ ‘தீபாவளி’ க்ரீடிங்க்ஸ்
கிடைத்தது..!
.
13. உண்டு களித்து தீபாவளிக்கு சினிமா
பார்த்தோம்..!
.
14. காணும் பொங்கலுக்கு உறுவுகளை
பார்த்தோம்..!
.
15. திருடனை பிடிக்க ஊரே ஓடியது..!
.
16. பாம்பு அடிக்க பக்கத்து வீட்டு மாமா
வந்தார்..!
.
17. பக்கத்து வீட்டு பெரியவர்களுக்கு
பயந்தோம்..!
.
18. கல்யாணத்திற்கு உறவுகள் இரண்டு நாள்
முன்னரே வந்தனர்..!
.
19. எல்லாவற்றையும் விட காலை
பொழுதுகள் ரம்மியமாக இருந்தது,
சுவாசிக்கவும் யோசிக்கவும்.
.
முன்னேற்றம் என்ற பெயரில் நல்லவற்றை
தொலைத்தோம்..!
“நாகரீகப் போா்வை” போா்த்தி நாசமாய் போனோம்..!
அன்றைய வாழ்க்கையில் பிரச்சனைகளும் இருந்தன!
இன்று பிரச்சனைகளே வாழ்க்கையாகிப் போனது!
இன்று என்ன தான் உலகம் நவீனமயம் ஆனாலும்
தொலைந்த வசந்தகாலத்தை இன்று யாராலும்
மீட்க முடியாது..

தமிழர்களின் பழக்க வழக்கத்தால் வந்தது அல்ல இவை அத்தனையும் வீரத்தமிழன் பாரம்பரியமே இதுதான் வீரத் தமிழர்களே எழுவோம் நமது கலாச்சாரத்தை பாதுகாக்க வில்லை என்றால் நம்மை நாமே காட்பது அரிதாகிவிடும் திராவிடத்தால் வீழ்ந்தோம் வீரத் தமிழர்களாய் எழுச்சி அடைவோம், நமது பண்பாட்டை நாகரீகத்தை கலாச்சாரத்தை பாரம்பரியத்தை பேணி காப்போம் அனைத்து உயிர்களையும் நேசிப்போம் இயற்கை வளங்களை சுவாசிப்போம்.

இவண்.
வழக்கறிஞர்.
ஏ.என்ஆர்.
சிவாசத்ரியா
சென்னை உயர்நீதிமன்றம்.

You may also like...