அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, ராஜினாமா செய்து பணியிலிருந்து விலகிய பின், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியரின், முந்தைய பணிக்காலத்தை பணிப்பயன்களுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.* *மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பு.*

[7/8, 12:54] Sekarreporter: *அரசு உதவிபெறும் தனியார் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து, ராஜினாமா செய்து பணியிலிருந்து விலகிய பின், அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணி நியமனம் பெற்ற ஆசிரியரின், முந்தைய பணிக்காலத்தை பணிப்பயன்களுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது.*

*மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் தீர்ப்பு.*

பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (Addl.Advocate General) ஆர்.நீலகண்டன், ஆஜராகி வாதாடினார்.

தமிழ்நாடு அரசு மற்றும் துணைப்பணிகளுக்கான விதிகளில் உள்ள விதி எண்.41ன் படி, அரசுப்பணியாளர் ஒருவர் தான் பணிபுரிந்த பணியிலிருந்து தானே விலகினால் (Resignation), அந்த பணியின் பணிக்காலத்தையும் விட்டுக்கொடுத்து விட்டதாகத்தான் எடுத்துக்கொள்ளவேண்டும் என்றும்; தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளில் உள்ள விதி எண் 23ன் படியும், பணியிலிருந்து தானே விலகினால் (Resignation), அந்த பணிக்காலத்தை ஓய்வூதியத்திற்காக கணக்கில் எடுத்துக் கொள்ளக்கூடாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் வாதிட்டார்.

AAG ஆர்.நீலகண்டன் வாதங்களை ஏற்றுக்கொண்ட மாண்புமிகு நீதியரசர் எஸ்.எம்.சுப்ரமணியம், அரசுப்பணியாளர் ஒருவர் தான் பணிபுரிந்த பணியிலிருந்து தானே விலகினால் (Resignation), அந்த பணியின் முந்தைய பணிக்காலத்தை பணிப்பயன்களுக்காக கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது என்று வழக்கை தள்ளுபடி உத்தரவிட்டார்.

அரசுத்தரப்பில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் (Addl.Advocate General) ஆர்.நீலகண்டன் அவர்களுக்கு உதவியாக சிறப்பு அரசு வழக்கறிஞர் திருமதி. அனிதா சண்முகம் ஆஜரானார்.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் எஸ்.என்.ரவிச்சந்திரன் ஆஜரானார்.
[7/8, 12:54] Sekarreporter: ..

You may also like...