அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகும்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட அவதூறு வழக்குகளில் ஆஜராகும்படி தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முதல்வராக இருந்த பழனிசாமி ஆட்சி பற்றியும் (கவுண்டவுன் தொடங்கிவிட்டது, விவகாரத்தில் மீன்வளத்துறை அமைச்சராக இருந்த ஜெயக்குமார் குறித்தும் எதிர்க்கட்சி தலைவராக இருந்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கருத்து தெரிவித்திருந்தார்.

அவரது கருத்து, தங்களின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாக கூறி இருவர் சார்பில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஸ்டாலினுக்கு எதிராக 2 அவதூறு வழக்குகள் கடந்த மார்ச் மாதம் தொடரப்பட்டன.

அந்த வழக்குகளை விசாரித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்பி எம்எல்ஏ-க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், திமுக தலைவர் ஸ்டாலின் உள்ளிட்டோரை ஆஜராகும்படி சம்மன் அனுப்பி உத்தரவிட்டிருந்தது. மூன்று முறை சம்மன் அனுப்பியும் ஸ்டாலின் தரப்பில் பெற்றுக்கொள்ளவில்லை என கூறப்படுகிறது.

இந்த வழக்குகள் இன்று நீதிபதி டி.சிவக்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு பிறப்பிக்கப்பட்ட சம்மன் வழங்கப்படவில்லை என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆகஸ்ட் 16ஆம் தேதி ஆஜராகும்படி தமிழ்நாடு முதல்வரும், திமுக தலைவருமான ஸ்டாலினுக்கு மீண்டும் சம்மன் அனுப்ப உத்தரவிட்ட வழக்குகளின் விசாரணையை நீதிபதி தள்ளிவைத்துள்ளார்.

You may also like...