வெள்ளிங்கிரி மலை மீது ஏறி கார்த்திகை மாதம் 48 நாள்கள் பூஜை செய்து தங்குவதற்கு ஈஸ்வரமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று நீதியரசர் பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காலம் காலமாக கார்த்திகை மாதம் 48 நாள்கள் மலை மீது ஏறி செம்மேடு மக்கள்

வெள்ளிங்கிரி மலை மீது ஏறி கார்த்திகை மாதம் 48 நாள்கள் பூஜை செய்து தங்குவதற்கு ஈஸ்வரமூர்த்தி என்பவர் தாக்கல் செய்த மனு இன்று நீதியரசர் பரத சக்கரவர்த்தி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் காலம் காலமாக கார்த்திகை மாதம் 48 நாள்கள் மலை மீது ஏறி செம்மேடு மக்கள் பாரம்பரியமாக பூஜை செய்து வருவதாகவும் இதை அறநிலையத்துறை தடுப்பதாகவும் வாதிட்டார் அறநிலையத்துறை சார்பில் ஆஜரான சிறப்பு அரசு சிறப்பு வழக்கறிஞர் திரு.என்.ஆர்.ஆர்.அருண் நடராஜன் அவர்கள் காலம் காலமாக மகா சிவராத்திரிக்கு பிறகு பிப்ரவரி முதல் மே மாதம் வரை கோவில் நடை திறக்கப்படும். அப்போது லட்சக்கணக்கிலான மக்கள் அங்கு வழிபாடு செய்வார்கள். ஜூன் முதல் ஜனவரி மாதம் வரை அங்கு கடுமையான குளிரும் மலையும் இருப்பதால் பொதுமக்கள் யாருக்கும் மலை மீது சென்று சாமி வழிபாடு செய்வதற்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. காலம் காலமாக பிப்ரவரி முதல் மே மாதம் வரை மட்டுமே அங்கு மக்கள் வழிபாடு செய்கிறார்கள். இதுவே பழக்கவழக்கத்தில் உள்ளது. மனுதாரர் கூறும் கார்த்திகை மாதம் 48 நாள் சாமி வழிபாடு செய்வதற்கு இணை ஆணையர், கோவை முன்னிலையில் 63(e) மனு செய்து பரிகாரம் தேடிக்கொள்ளலாம் என்று வாதிட்டார். இதனை ஏற்ற நீதியரசர் மனுதாரரை இணை ஆணையர், கோவை முன்னிலையில் 63(e) மனு செய்து பரிகாரம் தேடிக்கொள்வதற்கு அனுமதி வழங்கினார். அந்த மனுவின் மீது இணை ஆணையர், கோவை 3 மாதங்களுக்குள் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். மேலும் இது போன்ற வழக்குகளில் உயர்நீதிமன்றம் எந்த தீர்ப்பும் வழங்க இயலாது. கோவிலின் பழக்கவழக்கங்கள் என்னவென்று அறிய இணை ஆணையர் முன்னிலையில் 63(e) மனு செய்து பரிகாரம் தேடிக்கொள்வதற்கு மனுதாரரை அறிவுறுத்தினார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com