லயாலோ கல்லூரியில், 2010ல் பணியில் சேர்ந்த ஆசிரியை ஒருவர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கல்லூரியில் பணியாற்றிய போது, கல்லூரி அலுமினி

https://youtu.be/4QJuNYXZkYQ

லயாலோ கல்லூரியில், 2010ல் பணியில் சேர்ந்த ஆசிரியை ஒருவர், சென்னை உயர்நீதிமன்றம் மற்றும் மாநில மகளிர் ஆணையத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில், கல்லூரியில் பணியாற்றிய போது, கல்லூரி அலுமினி அசோஷியேஷன் தலைவராக இருந்த, பாதிரியார் சேவியர் அல்போன்ஸ், கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் செலுத்திய நிதி மற்றும் உதவித் தொகையில்
கையாடல் செய்தது தொடர்பாக நிர்வாகத்திற்கு தெரியப்படுத்தினேன். அதன் காரணமாக, 2013 – 2014ல் தன்னை பழிவாங்கும் நோக்கில், பாலியல் ரீதியாக என்னை துன்புறுத்தினார்; வெவ்வேறு துறைக்கு மாற்றி வந்தனர். கல்லுாரியின் உள்மட்ட அளவில் உள்ள, புகார் கமிட்டியிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை எனவும் புகார் அளித்திருந்தார்.

இது தொடர்பாக, மாநில மகளிர் ஆணைய தலைவராக இருந்த கண்ணகி பாக்கியநாதன் உத்தரவு பிறப்பித்தார். அதில், 2014 ஏப்ரல் முதல் தற்போது வரை, அவருக்கு தர வேண்டிய, 81 மாதத்திற்கான சம்பள பாக்கி 24 லட்ச ரூபாய் மற்றும் இத்தனை ஆண்டுகளில், அவர் சந்தித்த மன ரீதியான வேதனைகள், தகாத வார்த்தைகள், பாலியல் ரீதியான துன்புறுத்தல்கள் ஆகியவற்றுக்கு, 39 லட்ச ரூபாய் என, மொத்தம் 64.30 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட ஆசிரியைக்கு, லயோலா கல்லுாரி நிர்வாகம் இழப்பீடாக வழங்க உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து, லயோலா கல்லுாரி நிர்வாகம் சென்னை உயர் நீதின்றத்தில் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்துாஸ், மகளிர் ஆணையம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்து, பிப்ரவரி 11க்கு வழக்கை ஒத்தி வைத்தார்.

You may also like...