ரிட் மனு என்பது என்ன?

இந்திய அரசியலமைப்பு சாசனம் இந்தியர்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதம். சாதி, மொழி, இனம், மதம் போன்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் சட்டத்தின் முன்பு எல்லோரும் சமமானவர்கள். இதை உறுதி செய்ய உறுதுணையாக இருப்பதே ரிட் மனுக்கள்.

ரிட் மனு என்பது என்ன?

நீதிமன்றத்திடமிருந்து எழுத்து பூர்வமாக உத்தரவைப் பெறுவதையே ரிட்டன் ஆர்டர் என்கிறோம். இதன் சுருக்கமே ரிட்’ என்றழைக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்பு சாசனம் ஷரத்து 226-ன்படி உயர் நீதிமன்றத்திலும், ஷரத்து 32-ன்படி உச்ச நீதிமன்றத்திலும் ரிட் மனு தாக்கல் செய்து நிவாரணம் பெறலாம்.

சாமான்ய மனிதனின் அடிப்படை உரிமையை உறுதி செய்கிறதா ரிட் மனு?
ரிட் மனுக்களை எந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்?

பாதிக்கப்பட்டவர் அல்லது நிவாரணம் எதிர்பார்ப்பவர் வசிக்கும் பகுதிக்கு உட்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க வேண்டும் என்பது சிவில், குடும்பநலம், சொத்துரிமை ஆகிய இதர வழக்குகளுக்குப் பொருந்தும். ஆனால், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மட்டுமே ரிட் மனுக்களைத் தாக்கல் செய்ய முடியும்.

யார் தாக்கல் செய்யலாம்?

பாதிக்கப்பட்ட தரப்பு நீதிமன்றத்தை நாடுவது என்பது மற்ற வழக்குகளில் நிகழ்வது. ஆனால், ரிட் மனுக்களின் சில வகைகளில் உறவுகளுக்காகவோ, வேறு தரப்பினருக்காகவோ நீதிமன்றத்தை அணுகி நியாயம் கேட்கலாம்.

எப்போது, எந்தெந்த சூழ்நிலைகளில் ரிட் மனு தாக்கல் செய்யலாம்… அதற்குத் தகுதியானவர்கள் யார்?

ரிட் மனுக்களை ஐந்து வகையாகப் பிரிக்கலாம். 1. ரிட் ஹேபியஸ் கார்பஸ் (Habeas corpus), 2. ரிட் மாண்டமஸ் (Mandamus), 3. ரிட் செர்ஷியோரரி (Certiorari), 4. ரிட் புரபிசன் (Prohibition), 5. ரிட் கோவாரண்டோ (Quo-Warranto).

இவற்றைப் பற்றித் தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறோம் என்று நினைக்க வேண்டாம். ரிட் மனுக்கள் பற்றிய அடிப்படைத் தகவல்களை அனைத்து தரப்பினரும் அறிந்திருப்பது அவசியம். அதிகாரவர்க்கத்தினர் தங்கள் அதிகாரத்தை அவர்களின் சுயநலத்துக் காக உபயோகித்து, பொது மக்களுக்கு இடையூறு உண்டாக்கினால், அதனால் பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தில் மனு செய்து நிவாரணம் பெறும் உரிமையை உறுதிப்படுத்துகிறது ரிட் மனு.

ரிட் ஹேபியஸ் கார்பஸ்

இதையே ஆட்கொணர்வு மனு’ என்கிறோம். சட்டவிரோதமாகக் கைது செய்யப்பட்ட ஒருவரை அல்லது காணாமல் போன ஒருவரை நீதிமன்றத்தின் முன்பு கொண்டுவர (You may have the body) தாக்கல் செய்யும் மனு ரிட் ஹேபியஸ் கார்பஸ்’ எனப்படுகிறது. சிறைக்கைதிகள், பெண்கள், குழந்தைகள், பெற்றோர் என இதன் மூலம் பயனடையும் பயனாளிகளின் பட்டியல் நீளமானது.

எந்தத் தவறும் செய்யாத ஒருவரை, காவல்துறையினர் அத்துமீறி கைது செய்திருந்தால், கைது செய்யப்பட்டவரின் நிலையை அறிந்துகொள்ள அல்லது சட்ட விரோதமான கைது நடவடிக்கை தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள, சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் குற்றமற்ற வரை விடுவிக்க கைதானவரின் உறவுகள் அல்லது அவரைச் சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் மனு தாக்கல் செய்யலாம்.

காதல் திருமணங்கள் சகஜமாகி வரும் காலத்தில் பெற்றோர் விருப்பத்துக்கு மாறாக விரும்பியவரைத் திருமணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கும் தன் மகனை அல்லது மகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட வேண்டும் என்று பெற்றோர் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வார்கள்.

சில பெற்றோர் தங்களது விருப்பத்துக்கு மாறாகத் திருமணம் செய்துகொண்ட மகன் அல்லது மகளை அவர்களின் வாழ்க்கைத் துணையிடமிருந்து பிரித்து அழைத்து வந்து வீட்டுக் காவலில் வைத்திருப்பார்கள். நான் சட்டப்படி திருமணம் செய்துகொண்டேன்… வீட்டுக்காவலில் வைத்திருக்கும் என் மனைவியை/கணவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும்’ என்று பாதிப்புக் குள்ளான கணவனோ, மனைவியோ உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யலாம்.

சிறைக்கைதிகள், பெண்கள், குழந்தைகள், பெற்றோர் என ஹேபியஸ் கார்பஸ் ரிட் மனு மூலம் பயனடையும் பயனாளிகளின் பட்டியல் நீளமானது.
இந்த வழக்குக்குத் தொடர்புடைய காவல் துறைக்கு உத்தரவிட்டு சம்பந்தப்பட்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதிமன்றம் உத்தரவிடும்.

மேஜர் இருவர் திருமணம் செய்துகொண்ட விவகாரத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யும்போது, அவற்றை விசாரித்து நியாயமான காரணம் இருந்தால் மட்டும் ஆட்கொணர்வு மனு உத்தரவை நீதிமன்றம் பிறப்பிக்கும், சட்டத்துக்குப் புறம்பான, போதிய காரணமற்ற மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் நிராகரிக்கப்படுவதும் உண்டு.

கணவனும் மனைவியும் பிரிந்து வாழும்போது குழந்தையின் கஸ்டடியை வைத்துக்கொள்ள விரும்பும் தரப்பு, இன்னொரு தரப்புக்குத் தெரியாமல், தாங்கள் வசிக்கும் இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றுவிடுவர். சிலர் வெளிநாட்டுக்கே குழந்தையை அழைத்துச் சென்றுவிடுவர்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com