மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ இது அரசியல் காழ்ப்புணர்சிக்காக தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்கூட அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி, (watchdog) கண்காணிக்கும் செயலை செய்து மக்களாட்சி மாண்பிணைக்க காப்பதும் அவர்களது கடமைதான் என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி விவாதம் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதியரசர் அமர்வு மேற்படி மனுவை அனுமதித்து தமிழக அரசு இம்மனுவுக்கு ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.

[1/4, 18:15] Sekarreporter1: தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் ஊழல் புகார்களை, ஊழல் தடுப்பு ஆணையர் விசாரணை செய்வது குறித்து மத்திய அரசு இயற்றியுள்ள ஊழல் தடுப்பு சட்டப்படி ஆளுநரிடம் புகார் அனுப்பி விசாரணை மேற்கொள்ள பூர்வாங்க அனுமதி பெறவேண்டும். ஆளுநருக்கு அனுப்பவேண்டிய புகார் மனுக்களை தடுக்கும்விதமாக, தமிழக அரசே மத்திய அரசின் சட்டத்துக்கு முரணாக அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையின்படி தமிழக அரசின் ஊழல் தடுப்பு ஆணையர், முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் போன்ற பொது ஊழியர்கள் மீது தொடுக்கப்படும் ஊழல் புகார்களை, தமிழக அரசின் கீழ் பணியாற்றும் அரசுச் செயலருக்கு அனுப்பி வைத்துள்ளார்.
இந்த அரசாணையின்படி, ஊழல் தடுப்பு ஆணையர், ஊழல் புகார்களை அரசு செயளாலரிடம் அனுமதி கேட்பது தவறு என்று தமிழக அரசாணையை எதிர்த்து திரு. அப்பாவு முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் திமுக அவர்கள் திரு. வி. அருண் வழக்கறிஞர் மூலமாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.
இந்த வழக்கு இன்று புதியதாக பதவியேற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதியரசர் சஞ்சிப் பானர்ஜி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
இவ்வழக்கில் மனுதாரர் சார்பாக வி. அருண் சார்பாக மூத்த வழக்கறிஞர் என். ஆர் இளங்கோ ஆஜராகி வாதிட்டார். மத்திய அரசு இயற்றியுள்ள ஊழல் தடுப்புச் சட்டம் 2018 -க்கு முரணாக தமிழ்நாடு அரசு இயற்றியுள்ள அரசாணை செல்லத்தக்கதல்ல என்றும் மத்திய அரசின் சட்டத்துக்கு எதிரானது என்றும், குற்றம் சுமத்தப்பட்டவர், தம் மீது கூறப்படும் ஊழல் புகார்களை தமிழ்நாடு அரசு அமைச்சரவைக்கு கீழ் பணியாற்றும் அரசு செயலாளர், மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்ய அனுமதி கொடுக்கும் அதிகாரத்தை அளிப்பது என்பது, குற்றவாளியே நீதிபதியாக செயல்படுவது சட்டவிரோதம் என்பதால் மேற்படி அரசாணைக்கு தடைவிதிக்குமாறு வாதிட்டார்.
அதற்கு நீதியரசர், அரசியல் சம்பந்தப்பட்ட வழக்குகளை அரசியல் ரீதியாக அணுகாமல் எதற்கு உயர்நீதி மன்றத்துக்கு கொண்டுவருகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பினார். அதற்கு மூத்த வழக்கறிஞர் என் ஆர் இளங்கோ இது அரசியல் காழ்ப்புணர்சிக்காக தொடுக்கப்பட்ட வழக்கு அல்ல என்றும் உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பு ஒன்றில் எதிர்க்கட்சிகள், மக்கள் பிரதிநிதிகளாக சட்டமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும்கூட அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பி, (watchdog) கண்காணிக்கும் செயலை செய்து மக்களாட்சி மாண்பிணைக்க காப்பதும் அவர்களது கடமைதான் என்ற தீர்ப்பை மேற்கோள் காட்டி விவாதம் செய்தார். இதனை ஏற்றுக்கொண்ட தலைமை நீதியரசர் அமர்வு மேற்படி மனுவை அனுமதித்து தமிழக அரசு இம்மனுவுக்கு ஆறு வார காலத்துக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கினை ஒத்திவைத்தனர்.
[1/4, 18:15] Sekarreporter1:

You may also like...