பெண் சுங்கத்துறை அதிகாரி மீதான புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என சுங்கத்துறை தலைமை அணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தங்கம் கடத்தி கொண்டு வருவதற்காகவே இஸ்லாமிய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக கூறிய
பெண் சுங்கத்துறை அதிகாரி மீதான புகார் மீது விசாரணை நடத்த வேண்டும் என சுங்கத்துறை தலைமை அணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்தாண்டு சென்னையை சேர்ந்த சபீனா என்பவர் தனது கணவர் முகமது உசேனுடன் மெக்கா சென்றிருந்தார். பின்னர், குவைத் ஏர்லைன்ஸ் விமானத்தில் முதல் வகுப்பில் பயணம் செய்து சென்னை விமான நிலையம் திரும்பிய சபீனாவை பெண் சுங்க அதிகாரி ஒருவர் சோதனையிட்டுள்ளார்.
சோதனையின் போது, இஸ்லாமிய உடையில் இருந்த சபினாவை பார்த்து ‘தங்கம் கடத்தி வருவதற்காகவே இஸ்லாமிய பெண்கள் வெளிநாடுகளுக்கு சென்று வருவதாக கூறி அவரை அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைத்தொடர்ந்து, இஸ்லாமிய பெண்களை அவமானப்படுத்தியாக கூறி, பெண் சுங்க அதிகாரிக்கு எதிராக சென்னை சுங்கத்துறை தலைமை ஆனையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.
இந்த புகார் மீது நடவடிக்கை எடுக்கப்படாததையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் சபீனா வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று நீதிபதி பரத சக்கரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது, பெண் சுங்க அதிகாரி இஸ்லாமிய பெண்களை அவமானபடுத்தியது மட்டுமல்லாமல், தன் மீது பொய் வழக்கு போடப்போவதாக மிரட்டியதாகவும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதை கேட்ட நீதிபதி, பெண் சுங்க அதிகாரி மீது கொடுக்கப்பட்ட புகார் மீது 8 வாரத்திற்குள் விசாரணை நடத்தி சட்டத்திற்கு
உட்பட்டு நடவடிக்கை எடுக்க சுங்கத்துறை தலைமை அணையருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
…..