பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

*பீட்டர் அல்போனஸ் எப்பொழுது இந்தியாவின் ஆளுமை ஸ்டாலின் எனக் கூறினரோ அப்பொழுதே காங்கிரஸ் கட்சி ஒரு செயலிந்த கட்சி என்று பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்*

பிரதமர் நரேந்திர மோடி 71 வது பிறந்தநாளை முன்னிட்டு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திற்கு முன்பு பாஜக கட்சியின் வழக்கறிஞர்கள் பிரிவு சார்பில் 0 மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் இனிப்புகளை வழங்கியும், கொண்டாடினர்கள் இந்நிகழ்ச்சியில் மாநில வழக்கறிஞர் பிரிவு தலைவர் பால்கனகராஜ், மாநில பொதுச் செயலாளர் கருநகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை

எப்பொழுது காங்கிரஸ் கட்சியின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் முரசொலி பத்திரிகையில் இந்தியாவின் அடுத்த ஆளுமை நம்முடைய தளபதி என்று சொன்னாரோ!! அப்போது தமிழக
காங்கிரஸ் கட்சி செயலிழந்து விட்டது.
டயர், டியூப், கூட இல்லாதக் கட்சியாக உள்ளது.

பீட்டர் அல்போன்ஸ் திராவிட முன்னேற்றக் கட்சியின் நாளிதழில் ஸ்டாலின் தான் அடுத்த இந்தியவின் ஆளுமை என்று சொல்கிறாரோ அப்போது அவரே ராகுல் காந்தியை ஏற்றுக் கொள்ளவில்லை என தெரிகிறது.

எங்களுக்கு உண்மையான சமூக நீதி என்றால் பாரத பிரதமர் நரேந்திர மோடி தான்.

உண்மையான சமூக நீதிக்கு வித்திட்டவர் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி. அவர் பிறந்த நாளை நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.

அதிமுக மற்றும் பாஜக கூட்டணியில் எந்த குழப்பமும் இல்லை. பாமக அவர்களின் கட்சியின் வளர்ச்சிக்காக தனித்துப் போட்டி இருப்பதாக தெரிவித்துள்ளனர். 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொய்யான தானத்தையும் தேர்தல் வாக்குறுதிகளையும் மக்களுக்கு எடுத்துரைப்போம்.
பாஜக கண்டிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் என்றார்

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
CALL ME