நீதிபதிகளின் பரபரப்பு பேச்சு
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம், தலைமை உரை
நாட்டின் மிகவும் பழமையான, 160 ஆண்டுகால சட்டப் பாரம்பரியம் கொண்டது மெட்ராஸ் பார் அசோசியேசன் என பெருமிதம்
[15/03, 18:07] 75 ஆண்டுகளுக்கு முன் அரசியல் சட்டத்தை வகுத்தார்கள். அனைவருக்கும் நீதி, உரிமைகளை வழங்க வேண்டும்
-தலைமை நீதிபதி ஸ்ரீராம்
[15/03, 18:07] அரசியல் சட்டத்தின்படி அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்
-தலைமை நீதிபதி ஸ்ரீராம்
[15/03, 18:07] T சைபர் கிரைம், சுற்றுச்சூழல், உள்ளிட்டவை தொடர்பான சட்டங்களில் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. இதை சட்டத்துறை மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த மெட்ராஸ் பார் அசோசியேசன் நடவடிக்கை எடுக்க வேண்டும் – தலைமை நீதிபதி கே.ஆர் ஸ்ரீராம்
[15/03, 18:14] உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் பேச்சு
இந்தியா பன்முக கலாச்சாரங்களை கொண்ட நாடு, அரசியமைப்பால் தான் இந்திய வலுவாக கட்டமைப்பட்டுள்ளது
அரசியல் சட்டம் வெறும் சட்ட ஆவணம் அல்ல. அனைத்து உரிமைகளின் பாதுகாவலர். ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இருந்து விடுதலையான போது இந்தியா எப்படி ஜனநாயக நாடாக இருக்க போகிறது என்ற சந்தேகத்தை உடைத்து கடந்த 75 ஆண்டுகளாக ஜனநாயக பாதையில் நடைபோடுகிறது.
-உச்ச நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன்
[15/03, 18:14] Tகட்டாய கல்வியை அரசியலமைப்பு வலியுறுத்துகிறது
வாக்களிக்கும் உரிமை, பெண்களுக்கும் வாக்களிக்கும் உரிமை என்பதை அரசியலமைப்பு வலியுறுத்திகிறது
பாலீன சமத்துவம் வலியுறுத்துகிறது
அரசியலமைப்பு சட்டம் வெறும் காகிதம் அல்ல…
[15/03, 18:17160 ஆண்டை நிறைவு செய்து சாதனைகளை படைத்து வரும் மெட்ராஸ் பார் அசோசியேசன் எனது மனமார்ந்த பாராட்டுகள்
வாழ் நாள் சாதனையாளர்கள் விருது பெற்ற மூத்த வழக்கறிஞர்கள் கேசவ பராசுரன், கே.கே வேணுகோபால் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள் – நீதிபதி மகாதேவன்
[15/03, 18:25] உச்ச நீதிமன்ற நீதிபதி கே. வி விஸ்வநாதன் பேச்சு
160 ஆண்டுகளை சிறப்பாக பூர்த்தி செய்த மெட்ராஸ் பார் அசோசியேசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
நான் நீதிபதியாக பதவி ஏற்கும் போது தொலைப்பேசியில் மூத்த வழக்கறிஞர் வேணுகோபால் வாழ்த்து பெற்றேன்
40 வயது எனக்கும் அவருக்கும் வயது வித்தியாசம், நீதித்துறையின் மாண்பையும், கண்ணியத்தையும் இன்று வரை காப்பாற்ற கூடியவர்களில் முக்கியமானவர் மூத்தவழக்கறிஞர் கே.கே வேணுகோபால்
கே.கே வேணுகோபால் என் தந்தை போன்றவர், என்னுடைய குரு, தலை சிறந்த வழக்கறிஞர், என் வாழ்க்கையில் எந்த முக்கிய முடிவு எடுத்தாலும் அவரிடம் கலந்து ஆலோசித்து தான் முடிவெடுப்பேன்
1996 ல் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போது, அவரிடம் தான் முதலில் ஆசி பெற்றேன், அப்போது என் மனைவியிடம் வழக்கறிஞர் என்று தெரிந்தும் தான் இந்த முடிவை எடுக்கீறார்களா என்று கேட்டார்.
2023 ம் நீதிபதியாக பொறுப்பேற்கும் முன்னரும் அவரிடம் தான் முதலில் ஆலோசித்தேன்.
[15/03, 18:30] இளம் வழக்கறிஞர்களை, மூத்த வழக்கறிஞர்கள் தங்களிடம் பணியாற்ற அனுமதிக்க வேண்டும்
இந்த முன்னெடுப்பை சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கங்கள் மேற்கொள்ள வேண்டும் –
உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி விஸ்வநாதன் பேச்சு
[15/03, 18:34] Tதொடர் வாசிப்பு, தொடர் கல்வி ஆகிவை வழக்கறிஞர்களுக்கு இருக்க வேண்டும் –
சட்ட மாணவர்கள் சட்ட இதழ்களை வெளியிட மெட்ராஸ் பார் அசோசியேசன் உதவ வேண்டு
வழக்கறிஞர் தொழில் சார் விதிமுறைகளை இளம் வழக்கறிஞர்கள் பின்பற்ற வேண்டும் அதை மூத்த வழக்கறிஞர்கள் இளம் வழக்கறிஞர்களுக்கு சொல்லி கொடுக்க வேண்டும் – உச்ச நீதிமன்ற நீதிபதி கே.வி விஸ்வநாதன் பேச்சு
[15/03, 18:36: உடல் நலம் மட்டுமல்ல, மனநிலை பற்றியும் வழக்கறிஞர்கள் விவாதிக்க வேண்டும் – கே.வி விஸ்வநாதன் பேச்சு
[15/03, 18:38] சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி, மும்பையில் பணியாற்றிவர், அவருக்கு பங்கு சந்தை பற்றி தெரியும், முதலீடு செய்து வைத்திருப்பார். ஆனால் வழக்கறிஞர்களுக்கு இது தொடர்பாக அறியும் வகையில் விவாதங்களை நடத்த வேண்டும் – கே.வி விஸ்வநாதன்
[15/03, 18:55] உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எம் எம் சுந்தரேஷ் உரை
தமிழர்களின் நீதியை விளக்குவது தான் சிலப்பதிகாரம் நூல்
நீதி தவறியதால் பாண்டியன் இறந்தான். அவனது மனைவியும் இறந்தார். அதனால் தான் தமிழகம் நீதியின் நிலமாக இருந்து வருகிறது. சிலப்பதிகாரம் தமிழர் நீதியை வலியுறுத்துகிறது
தமிழர்கள் நீதியை தங்கள் வாழ்வியலோடு இணைத்தே வாழ்ந்து வருகின்றனர்..
நீதி என்றால் முதலில் சமூக நீதி தான் எனவும், பொருளாதார நீதி தானாக வந்து விடும் என சட்டமேதை அம்பேத்கர் தெரிவித்துள்ளார்
[15/03, 19:01] சட்டங்கள் மாறுகின்றன. எதிர்காலத்தில் மாற்றங்கள் இன்னும் அதிகமாக இருக்கும்
அதற்கேற்ப வழக்கறிஞர்களும், இளம் வழக்கறிஞர்களை தங்களின் திறமைகளை வாசிப்பை அதிகப்படுத்த வேண்டும், மாற்றங்களுக்கு வழக்கறிஞர்கள் தயாராக வேண்டும் – எம் எம் சுந்தரேஷ் பேச்சு
[15/03, 19:18] நீதித்துறைக்கான வசதிகளை மேம்படுத்த 6 மாவட்டங்களில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது
கூடுதலான நீதிமன்றங்கள் உள்ளிட்ட 73 புதிய நீதிமன்றங்கள் 1289 புதிய பணியிடங்கள் 151 கோடியே 68 லட்சத்து 48 ஆயிரத்து 99 அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டு இருக்கு
புதுசா நீதிமன்றம் கட்டப்பட்ட கட்டுதல் நீதிபதிகளுக்கான குடியிருப்பு கட்டுதல் மற்றும் புதுப்பித்தல் ஆகிய பணிகளுக்கு அரசு 851 கொடிய 43 லட்ச ரூபாய் கடன் இருக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளை நீதிமன்றங்களுக்கு கணினி தொடர்பான கட்டமைப்புக்கு உருவாக்க 37 கோடியே 92 ரூபாய் அரசு வழங்கிருக்கு
மாவட்ட மற்றும் கிழமை நீதிமன்றங்களுக்கு கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்க 66 கூடிய 66 லட்சம் ரூபாய் அரசு வழங்கிருக்கு சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் அதன் மதுரை கிளைக்கு பல்வேறு பணிகளை
நான் வெளியிடங்களை உருவாக்கி ஆணையர் வெளியிடப்பட்டு மாவட்ட மற்றும் கீழமே நீதிமன்றத்திற்கு பல்வேறு நிலையான 244 கூடுதல் பணியிடங்களை உருவாக்கி ஆணைகளுக்கு வெளியிடப்பட்டிருக்கு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் சட்டக் கல்லூரியில் தொடங்கப்பட்டிருக்கு
அந்த கல்லூரிக்கு விடுதிகளுடன் கூடிய கட்டடம் கட்டுவதற்கு செய்யப்பட்டு இருக்கு
நாமக்கல் அரசு சட்டக் கல்லூரிக்கு விடுதிகள் கூடிய கட்டிடம் கட்டுவது கட்டுவதற்கு 102 கோடி ஏற்பட்டு கட்டுமான பணிகள் கலந்து கொண்டிருக்கிறது
மதுரை அரசு சட்ட கல்லூரிக்கு புதிய கட்டிடம் பணிகளுக்கு ஏற்கனவே ஒப்படைக்கப்பட்ட 40 படி எட்டு லட்ச ரூபாய் 61 லட்சம் வழங்கி கட்டுமான பணிகள் நடந்து கொண்டிருக்கிறது 450 மாணவர்களை கூடுதலாக அனுமதிக்க ஆணை வெளியிடப்பட்டு இருக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையுடன் தெரிவு செய்யப்பட்ட 12 நபர்கள் அரசு சட்டக் கல்லூரிகளில் விளையாட்டு மற்றும் உடற்கல்வி இயக்குனர்களாக நியமிக்கப்பட்டிருக்காங்க ஆசிரியர் தேர்வு வாரியம் நேரடி நிறுவனம் முறையில தெரிவு செய்யப்பட்ட 12 உதவி பேராசிரியர்கள் அரசு சட்டக் கல்லூரியில் தற்காலிகமா செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது முதலமைச்சர் மு க ஸ்டாலின்
[15/03, 20:18] உச்ச நீதிமன்ற கிளையை சென்னையில் அமைப்பது,தென்மாநில மக்களுக்கு பயனளிக்கும் என தமிழக முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசியல் சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட 75 வது ஆண்டு மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் உள்ள பழமையான வழக்கறிஞர்கள் சங்கமான, மெட்ராஸ் பார் அசோசியேஷனின் 160 வது ஆண்டு கொண்டாட்டம் சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இவ்விழாவில், முன்னாள் அட்டர்னி ஜெனரல்கள் கே.பராசரன் மற்றும் கே.கே.வேணுகோபால் ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தமிழக முதல்வர் ஸ்டாலின், தமிழில் பேசுவார் என எதிர்பார்த்த உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் ஆங்கிலத்திலும், ஆங்கிலத்தில் பேசுவார் என நினைத்த நீதிபதி கே.வி.விஸ்வநாதன் தமிழில் பேசியதால் இக்கட்டான நிலையில் இருப்பதாக நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பேசியதைச் சுட்டிக்காட்டி, இது தான் இருமொழிக் கொள்கை எனவும், இதுதான் தமிழ்நாடு எனவும், இக்கட்டான நிலை தமிழகத்தில் இல்லை எனவும் குறிப்பிட்டார்.
சட்டத்தின் ஆட்சியை நிலை நாட்டுவதிலும், அநீதி எனும் நோய்க்கான மருத்துவர்களாகவும், சமூக நீதியை பாதுகாப்பவர்களாகவும் வழக்கறிஞர்க்ள் இருப்பதாகக் குறிப்பிட்ட முதல்வர் , வெவ்வேறு மதம், இனம், பண்பாட்டு முறைகள் இருந்தாலும், இந்தியாவை மதச்சார்பற்ற குடியரசாக நீடிக்கச் செய்வதில் இந்திய அரசியல் சட்டம் உயிர்ப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அரசியல் சட்டத்தின் முக்கிய கட்டமைப்பான கூட்டாட்சி தத்துவம் பாதிக்கச் செய்யும் நிலை சமீபகாலமாக நிலவுவதாகக் கூறிய முதல்வர், கல்வி, நிதி போன்றவற்றில் மாநில அரசுகளின் உரிமைகள் பாதிக்கபடுவதாகவும், அந்த பாதிப்புகளில் இருந்து மாநில உரிமைகளை நீதிமன்றங்கள் பாதுகாக்கின்றன எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும், வழக்கறிஞர்கள் சேமநல நிதி உயர்த்தப்பட்டது, புதிதாக 73 நீதிமன்றங்கள் அமைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, சென்னை உயர் நீதிமன்றம், மதுரை அமர்வு மற்றும் மாவட்ட நீதிமன்றங்களில் கணினி வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது, சிவகங்கை, நாமக்கல்லில் புதிய சட்டக் கல்லூரிகள் அமைக்கப்படுவது நீதித்துறை கட்டமைப்பை மேம்படுத்த எடுத்த நடவடிக்கைகளைப் பட்டியலிட்ட முதல்வர் ஸ்டாலின், ஏற்கனவே ஒரு நிகழ்ச்சியில் முன் வைத்த கோரிக்கையான, உச்ச நீதிமன்றத்தின் கிளையை சென்னையில் அமைக்க வேண்டும் என இன்று மீண்டும் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சியில், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.மகாதேவன், கே.வி.விஸ்வநாதன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் ஆகியோர் அரசியல் சட்டம் குறித்து விளக்கி பேசினர்.
(( மு.க.ஸ்டாலின், தமிழக முதல்வர்))