நாளை நமதே – இந்த நாளும் நமதே!
நாளும் நமதே!
இன்று மே தினம்.
உழைப்பாளர் தினம்.
விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், உழைக்கும் வர்க்கத்தினரின் வியர்வையில்தான் இந்த பூமி புன்னகைக்கிறது.
கொடிய தொற்று நோய் காலத்திலும், உயிரை துச்சமென மதித்து, மருத்துவப் பணியாளர்களும், துாய்மைப் பணியாளர்களும் நம் உயிர் காக்க, களப்பணியாற்றுகிறார்கள். அவர்களின் தியாகத்துக்கு தலை வணங்குகிறேன்.
ஊரடங்கு காரணமாக, உழைக்கும் மக்கள், வேலையின்றி வீடுகளில் தனித்திருக்கின்றனர். தவித்திருக்கின்றனர்.
வாழ்வா? சாவா? என்று உலகமே தவிக்கிறது.
நாளைய சவால்களை எதிர்கொள்ள, நாம், இன்று தனித்திருந்து, உடலையும், மனதையும் தயார்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது.
வலிமையே வாழ்க்கை;
பலவீனமே மரணம்!
நம்பிக்கைகளும், மன உறுதியும்தான் நாளைய பொழுதை நல்ல நாளாக மலரச் செய்யும்.
நாளை நமதே – இந்த நாளும் நமதே என நம்பிக்கை கொள்வோம்.
ரத்தத்தின் ரத்தமாக நான் மதிக்கும், உழைக்கும் சகோதர, சகோதரிகள் அத்தனை பேருக்கும் மே தின வாழ்த்துக்கள்!
mayday RRGopalji sit