துறையின் சார்பாக என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் அவர்கள் வாதிட்டு நிர்வாகத்திட்டத்தின்படி செயல் அலுவலரை நியமனம் செய்தது செல்லும் என்ற வாதத்தினை ஏற்று இவ்வழக்கில், மாண்பமை நீதியரசர்கள் திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் திரு.கே.இராஜசேகர் அவர்கள் செயல் அலுவலரை நியமனம் செய்தது செல்லும்
மதிப்பிற்குரிய அய்யா வணக்கம்,
11-03-2025 அன்று – இந்து சமய அறநிலையத்துறை ஆணையரால் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கு எண்.1699 / 2024 – சென்னை உயர்நீதிமன்றத்தில் (செங்கோல் மடம், தூத்துக்குடி திருக்கயிலாய பரம்பரை ஸ்ரீ-ல-ஸ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பண்டார சன்னிதி சுவாமிகளை எதிர்த்து) விசாரணைக்கு வந்திருந்தது. நிர்வாகத்திட்டத்தின்படி, 1960-ல் இருந்து இந்த மடத்திற்கு துறையின் செயல் அலுவலர் மற்றும் மடமும் சேர்ந்தே இந்த மடத்தை நிர்வாகம் செய்து வந்துள்ளனர். இந்த வழக்கில் ஏற்கெனவே உள்ள நீதிமன்ற அவமதிப்பு வழக்கின்படி செயல் அலுவலர் இம்மடத்தை விட்டு வெளியேற வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பினை இரத்து செய்யக்கோரி துறை சார்பின் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கில், துறையின் சார்பாக என்.ஆர்.ஆர். அருண் நடராஜன் அவர்கள் வாதிட்டு நிர்வாகத்திட்டத்தின்படி செயல் அலுவலரை நியமனம் செய்தது செல்லும் என்ற வாதத்தினை ஏற்று இவ்வழக்கில், மாண்பமை நீதியரசர்கள் திரு.எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் திரு.கே.இராஜசேகர் அவர்கள் செயல் அலுவலரை நியமனம் செய்தது செல்லும் என்று துறைக்கு ஆதரவாக இடைக்கால தடை வழங்கியுள்ளனர்.