திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருப்போரூர் துப்பாக்கி சூட்டுக்கு காரணமான நில விவகாரம் தொடர்பான
திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் தாலுகாவில் செங்காடு மற்றும் இள்ளளூர் கிராமத்தில் உள்ள நில விவகாரம் தொடர்பாக திமுக முன்னாள் எம்.எல்.ஏ. இதயவர்மனுக்கும், குமார் என்பவருக்கும் இடையில் பிரச்னை இருந்து வந்தது.
கடந்த 2020 ம் ஆண்டு மார்ச் மாதம் இந்த நில விவகாரம் தொடர்பாக இரு தரப்பினருக்கும் இடையில் நடந்த மோதலில் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டதாக இதயவர்மன் கைது செய்யப்பட்டார். பின் அவருக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில், 2019 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட போது இதயவர்மனுக்கு பணம் கொடுத்து உதவாததால்,
 கோவில் நிலத்தை தான் ஆக்கிரமிக்கவுள்ளதாக பொதுமக்களிடையே
அவதூறு பரப்பி,தனது நிலத்துக்குள் அத்துமீறி நுழைந்த இதயவர்மன் ஆட்கள் நிலத்தை  சேதப்படுத்தியதாக  தொடர்பாக குமார் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து 
விசாரிக்க, செங்கல்பட்டு மாவட்ட வருவாய் கோட்டாட்சியருக்கு, திருப்போரூர் தாசில்தாரர் பரிந்துரைத்ததை
எதிர்த்து குமார்  சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு  தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில், திருப்போரூர் தாசில்தார் விசாரணையில் சம்மந்தப்பட்ட இடம் ஆக்கிரமிப்பும் அல்ல… கோவிலுக்கு சொந்தமான இடமும் அல்ல என தெரிய வந்த போதும், இந்த விவகாரத்தில் முடிவெடுக்க அவருக்கு அதிகாரம் இருந்தும் இதயவர்மனின் அரசியல் செல்வாக்கால் பொறுப்பை தட்டி கழிக்கும் விதமாக செங்கல்பட்டு வருவாய் கோட்டாட்சியருக்குருக்கு பரிந்துரைத்த  உத்தரவை ரத்து செய்து,  தாசில்தாரரே விசாரிக்க  உத்தரவிட   வேண்டுமெனவும், இதயவர்மனோ அவரது ஆட்களோ தன்னுடைய நிலத்திற்கு சென்று வர இடையூறு ஏற்படுத்தக் கூடாதென உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம்,
வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைத்த தாசில்தாரின்  உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும்
இந்த நில விவகாரத்தில் தலையிட கூடாது என அப்போதைய திமுக எம்.எல்.ஏ இதய வர்மன் தரப்பினருக்கும் உத்தரவிட்டிருத்த து. இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை நீதிபதி தண்டபாணி முன்பு பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி இது சிவில் வழக்கு என்றும் சிவில் நீதிமன்றத்தை தான் அணுக முடியும் என்றும் உயர் நீதிமன்றம் தலையிட முடியாது கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME