தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திரு.சு.முத்துராஜ் அவர்கள் பிறப்பித்த உத்தரவு :* மனுதாரர் கோரியுள்ள தகவல் தொடர்பான முன்பு மெட்ராஸ் மாகாணத்திலும் , தற்சமயம்

[12/20, 10:23] Sekarreporter1: *🔥 தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி ஆணை : 💥*

வழக்கு எண் : SA 7475/D/2019, ஆணை நாள் : 02.12.2020

*தமிழ்நாடு மாநில தகவல் ஆணையர் திரு.சு.முத்துராஜ் அவர்கள் பிறப்பித்த உத்தரவு :*

  • மனுதாரர் கோரியுள்ள தகவல் தொடர்பான முன்பு மெட்ராஸ் மாகாணத்திலும் , தற்சமயம் ஆந்திராவிலும் உள்ளது. மெட்ராஸ் மாகாண மக்கள் இப்பொது உலகில் பல பகுதிகளில் வாழ்கிறார்கள் அவர்கள் தங்களுக்கான ஆவணங்களை தகவலாக பெறுவதில் பெரும் சிரமப்படுகிறார்கள்.

தமிழ்நாடு தகவல் ஆணையம் பல்வேறு RTI மனுக்களை விசாரிக்கின்ற போது Madras Racord Office ( MRO ) பாதுகாக்கப்பட்ட 1864 முதல் 1898 வரை உள்ள Old Settlement Register ( OSR ) , 1901 முதல் 1938 வரை உள்ள Resettlement Register ( RSR ) , 1950 ஆம் ஆண்டு Survey Land Register ( SLR ) மற்றும் 1979 ஆம் ஆண்டிற்கான அ பதிவேடு ( ‘ A ‘ Register ) ஆகிய ஆவணங்கள் தமிழ்நாடு ஆவணக் காப்பகம் மற்றும் நில அளவை ( ம ) நிலவரித் திட்ட ஆணையரகம் ஆகிய அலுவலகங்களில் இருப்பது தெரிய வருகிறது . தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005 , பிரிவு 4 ( 1 ) – ன் படி அனைத்து ஆவணங்களும் கணினிமயமாக்கப்பட வேண்டும் . அதேபோல் தமிழ்நாடு அரசின் வருவாய்த்துறை கொள்கைக் குறிப்பேட்டிலும் ஆவணங்கள் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இ – சேவை மையங்கள் மூலம் கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால், இதுவரை ஆவணங்கள் கணினிமயமாக்கப்படாமல் இருப்பது தெரிய வருகிறது.

*இன்றைய விசாரணை மற்றும் ஆவணப் பரிசீலனையின் முடிவில்,*

அரசு செயலாளர் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தலைமைச் செயலகம் , சென்னை -9 ,

ஆணையர் , நில நிர்வாகம் , சென்னை -5 ,

ஆணையர் , தமிழ்நாடு ஆவணக் காப்பகம் ( ம ) வரலாற்று ஆராய்ச்சி நிறுவனம் , எழும்பூர் , சென்னை -4

மற்றும்

ஆணையர் , நில அளவை ( ம ) நிலவரித் திட்ட ஆணையரகம் , சேப்பாக்கம் , சென்னை -5

*ஆகியோர் கீழ்க்காணும் ஆவணங்களை இவ்வாணைக் கிடைக்கப் பெற்ற இரண்டு மாத காலத்திற்குள் கணினிமயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்து இ – சேவை மையங்கள் மூலமாக பொதுமக்கள் மற்றும் அரசு அலுவலகங்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்று இவ்வாணையம் உத்திரவிடுகிறது.*

*1)* 1864 முதல் 1898 வரை உள்ள Old Satement Register ( OSR )

*2)* 1901 முதல் 1938 வரை உள்ள Resettlement Register ( RSR ) ,

*3)* 1950 ஆம் ஆண்டு Survey Land Register ( SLR ) ,

*4)* 1979 ஆம் ஆண்டிற்கான ‘ அ ‘ பதிவேடு ( A Register )

மேலும், *இந்த உத்திரவு நடைமுறைபடுத்தியதற்கான அறிக்கையை மூன்று மாத காலத்திற்குள் இவ்வாணையத்திற்கு அனுப்பி வைக்க அரசு செயலாளர் , வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை , தலைமைச் செயலகம் , சென்னை அவர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்.*

என்று தமிழ்நாடு மாநில தகவல் ஆணையம் பிறப்பித்துள்ள உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.
[12/20, 10:23] Sekarreporter1: ☘️

You may also like...