தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இகாப அவர்கள் 31.08.2025 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி இன்று (30.08.2025) மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் காவல்துறை

செய்தி வெளியீடு
தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு. சங்கர் ஜிவால், இகாப அவர்கள் 31.08.2025 அன்று பணியிலிருந்து ஓய்வு பெறுவதையொட்டி இன்று (30.08.2025) மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்தில் பிரிவு உபசார விழா தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் காவல்துறை தலைமை இயக்குநர் (நிர்வாகம்) திரு. ஜி. வெங்கட்ராமன், இகாப அவர்கள் கலந்து கொண்டார்கள்.
அரசு குற்றவியல் வழக்குரைஞர்கள் திரு.கோகுலகிருஷ்ணன் வரவேற்புரையும் திரு. பிரதாப் நன்றியுரையும் மற்றும் திரு. ராஜ்திலக் நிகழ்ச்சி தொகுப்பும் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சியில் பேசிய தலைமைச் செயலர் அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு அரசு முதலமைச்சர் அவர்களின் சீரிய தலைமையில் தமிழ்நாடு தொழில் துறை மட்டுமல்ல, மற்ற எல்லா துறைகளிலும் அசுர வளர்ச்சி அடைந்துள்ளது என பெருமிதத்துடன் கூறினார். மேலும் கோவிட் பெருந்தொற்றால் பிற மாநிலங்கள் வளர்ச்சியில் முன்னெடுக்க தவறியபோது, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் சீரிய நடவடிக்கைகளால் 2021ம் ஆண்டு அரசு பொறுப்பேற்ற நாள் முதல் முனைப்புடன் செயல்பட்டதால் இரட்டை இலக்கு வளர்ச்சியை பெறமுடிந்தது என பெருமிதத்துடன் தெரிவித்தார். இது ஒட்டு மொத்த நமது நாட்டு வளர்ச்சியை விட கூடுதல் வளர்ச்சியாகும்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களான “தமிழ் புதல்வன்”, “புதுமைபெண்”மற்றும் “நான் முதல்வன்” போன்ற முன்னோடி திட்டங்களை அறிமுகம் செய்து கல்வித் துறையில் இம்மாநிலம் பெரும் வளர்ச்சியை கண்டுள்ளது. இதனால் 48% மாக இருந்த Gross Enrollment Ratio 75% மாக உயர்ந்துள்ளது. இதே போன்று தூத்துக்குடி போன்ற பின்தங்கிய தென் மாவட்டங்களில் உள்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட்டு அங்கும் அபரீத தொழில் வளர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.

ஒரு மாநிலத்தில் தொழில் வளர்ச்சி ஏற்பட சட்டம் ஒழுங்கு சீராக இருக்க வேண்டும். தமிழகத்தை பொறுத்தமட்டில் திரு.சங்கர் ஜிவால் அவர்கள் தலைமையில் காவல் துறை சிறப்பாக பணியாற்றியதால் மற்ற மாநிலங்களை போல் பெரிய சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படவில்லை. எனவே மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சீராக இருந்ததால் அனைத்து துறைகளிலும் குறிப்பாக தொழில் துறையில் சிறப்பான முன்னேற்றத்தை அடைய முடிந்தது.
அதே போன்று அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞரும் இக்கட்டான சூழல்களில் சமயோசிதமாக கையாள்வதற்கு உரிய ஆலோசனைகளை வழங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது என பேசினார்.
காவல்துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் பேசும்போது “அரசு குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகத்துடன் காவல் துறை ஒன்றிணைந்து பணியாற்றியதை நினைவு கூர்ந்தார். காவல்துறைக்கு என்றென்றும் அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அலுவலகம் உதவியாக இருந்தமைக்கு நன்றி தெரிவித்தார்“.
இந்நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்றிய மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்குரைஞர் அவர்கள் காவல் துறையில் புலன் விசாரணை ஒரு முக்கிய அம்சமாக திகழ்கிறது. எனவே, புலன் விசாரணைகென்று காவல் துறையில் ஒரு தனிப்பிரிவு உருவாக்க வேண்டும் என்று கூறியதையடுத்து காவல் துறை தலைமை இயக்குநர் அவர்கள் அத்திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றினார். எதிர்காலத்தில் இத்திட்டம் மாநிலத்தில் அனைத்து பகுதிகளிலும் விரிவாக்கம் செய்ய வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இதை போன்று மிகவும் தேவையான வழக்குகளில் மட்டுமே குண்டர் சட்டத்தை பயன்படுத்த வேண்டும். என்பதை சுட்டிக்காட்டியதை அடுத்து குண்டர் சட்டம் போடுவதை வெகுவாக குறைக்க ஆவன செய்ததோடு இது குறித்து அனைத்து காவல் துறை அதிகாரிகளுக்கும் திரு. சங்கர் ஜிவால் அவர்கள் சுற்றறிக்கை அனுப்பியதையும் நினைவு கூர்ந்தார்.
மேலும் மகளிர் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்கள் குறித்த ஆண்டறிக்கையில் திரு.சங்கர் ஜிவால் அவர்களின் கீழ்கண்ட பதிவு
“Helping a person might not change the whole World, but it could change the World for the person”
“ஒரு நபருக்கு உதவி செய்வதால் மட்டுமே இந்த உலகத்தையே மாற்ற முடியாது.
ஆனால் அந்த நபரால் வேறு உலகத்தை பார்க்க முடியும்“
இவரது தலைமை பண்பின் உயர்ந்த குணத்தை வெளிச்சம் போட்டு காட்டுகிறது என தெரிவித்தார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com