டெல்லி உயர்நீதிமன்றம்:-* *இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இந்திய தலைமை தேர்தல்

*
*டெல்லி உயர்நீதிமன்றம்:-*

*இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திற்கு எதிராக டெல்லி உயர் நீதிமன்றத்தில் புகழேந்தி தொடர்ந்த வழக்கில் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல்*

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கட்சி சின்னம் ஒதுக்கீடு, கட்சிப் பெயர் மற்றும் கட்சிக் கொடியைப் பயன்படுத்துவது தொடர்பான விஷயத்தில் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது

அ.தி.மு.க.வின் கட்சி சின்னம் ஒதுக்கீடு, தலைமை மற்றும் அது தொடர்பான பிற விஷயங்கள் குறித்து, பல்வேறு நபர்களிடமிருந்து பெறப்பட்ட பல மனுக்கள் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தின் பரிசீலனையில் உள்ளன.

அனைத்து நடைமுறைகளும் கூட்டாகவும் முழுமையான முறையிலும் ஆராயப்படுகின்றன

அ.தி.மு.க சின்னம், தலைமை, கொடியை பயன்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்களில் தேர்தல் ஆணையம் விரைந்து முடிவு மேற்கொள்ளவில்லை என அ.தி.மு.க ஒருங்கிணைப்பு குழுவைச் சேர்ந்த புகழேந்தி தாக்கல் செய்துள்ள மனுவுக்கு தேர்தல் ஆணையம் பதிலளித்து பிரமாணம் தாக்கல் செய்துள்ளது

வழக்கு டெல்லி உயர்நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com