சென்னை சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு DOTCOM@DINAKARAN.COM(EDITOR) | NOV 20, 2020

  1. சென்னை
    சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50% இடஒதுக்கீடு விவகாரம் தமிழக அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மீண்டும் மறுப்பு
    DOTCOM@DINAKARAN.COM(EDITOR) | NOV 20, 2020

உச்ச நீதிமன்றம்அரசுதமிழ்நாடு
சென்னை: நடப்பு கல்வியாண்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி, டிப்ளமோ போன்ற மருத்துவ மேற்படிப்புகளில் 50% இடங்களை அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்க உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு மருத்துவர்கள் எம்.சையது பக்ரூதீன், ஜி.குமரவேல் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த நீதிமன்றம், இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என தமிழக அரசு தெரிவித்த கோரிக்கையை ஏற்று, வழக்கை முடித்து வைத்தது.இந்நிலையில், உயர் நீதிமன்ற உத்தரவிற்கு எதிராக மருத்துவர் அமித் மொகந்தி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா மற்றும் அஜய் ரஸ்தோகி அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. மூத்த வக்கீல் வில்சன் வாதத்தில், “இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதி கவுல் தெளிவாக ஒரு தீர்ப்பை வழங்கியுள்ளார். அதில் அரசு மருத்துவர்களுக்கான பிரச்னை அனைத்தும் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் திரும்ப திரும்ப தேவையில்லாமல் மீண்டும் நீதிமன்றத்தை சிலர் நாடி வருகின்றனர். அதனால் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ படிப்புக்கு 50 சதவீத இடஒதுக்கீடு என்ற அரசாணையை இந்த வருடமே நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்’’ என வாதிட்டார்.

தமிழக அரசு தரப்பில் ஆஜரான யோகேஷ் கண்ணா, அரசாணையை செயல்படுத்த எந்த தடையும் இல்லை. எங்களது கோரிக்கையை மற்றவைகளோடு ஒப்பிட முடியாது. முற்றிலும் வேறுபட்டதாகும் என்றார். மத்திய அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர், தங்களது தரப்பிலும் ஒரு எஸ்.எல்.பி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள், “இந்த வழக்கில் மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் அனைத்து ரிட் மனுதாரர்களும் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பப்படுகிறது என தெரிவித்து, வழக்கை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 50 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்தில் அரசாணைக்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

RELATED STORIES:

அறங்காவலர்களை நியமிக்கும் குழுவில் உள்ளவர்கள், கல்வி, ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்களா?: ஐகோர்ட் நீதிபதிகள் கேள்வி

வாஜ்பாய் அவர்களின் கனவுகளுக்கு பிரதமர் மோடி உத்வேகம் அளித்துள்ளார்: மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேச்சு

வங்க கடலில் நவ. 23-ம் தேதி உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி

லடாக்கில் உயிரிழந்த தமிழக ராணுவ வீரர் மரணத்திற்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்: குடும்பத்தினர் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் உத்தரவு!!

தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை மையம் தகவல்

பாஜக அரசின் இந்தி ஆதிக்க மொழிவெறி உணர்வை கண்டிக்கின்றேன்!: திமுக தலைவர் ஸ்டாலின் ட்விட்

பாஜக அரசின் மொழிவெறிப் போக்கினை வன்மையாகக் கண்டிக்கிறேன்…இந்தியில் பதில் அளிக்கும் மத்திய அமைச்சகங்களுக்கு மு.க.ஸ்டாலின் பாய்ச்சல்!!

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை மையம்

நெடுஞ்சாலைகளில் அதிவேக வாகனங்களை அடையாளம் காணும் கேமரா அமைக்கவும் டெண்டரில் முறைகேடு : டிடிவி தினகரன்

தமிழக போலீசுக்கு உபகரணங்கள் வாங்குவதற்கான டெண்டரில் ரூ.300 கோடிக்கு மேல் மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை தொடங்கியது

மாணவர்கள் இடையூறால் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நிறுத்தம்

அவதூறு வீடியோக்களை வெளியிடும் ஓய்வுபெற்ற நீதிபதி கர்ணன் மீது அரசு நடவடிக்கை எடுக்கவில்லை: ஐகோர்ட்டில் பார்கவுன்சில் குற்றச்சாட்டு..!!

நடிகை அமலா பாலின் நிச்சயதார்த்த புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட தடை: ஐகோர்ட்

தமிழக மருத்துவ சேர்க்கை தரவரிசையில் இடம்பெற்ற 34 வெளிமாநில மாணவரை தகுதிநீக்கம் செய்க!: வேல்முருகன்

தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இயக்கப்பட்ட 28,360 பேருந்துகள் வாயிலாக 13,24,553 பயணிகள் பயணம் : ரூ. 5.84 கோடி வருவாய்

அண்ணா பல்கலை. துணைவேந்தர் சூரப்பாவை தகுதி நீக்கம் செய்யக்கோரி இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

அரியர் வழக்கு விசாரணையை காண வீடியோ கான்பிரன்ஸில் ஏராளமானோர் நுழைந்ததால் இடையூறு: வழக்கு விசாரணை நிறுத்தம்!

புதுக்கோட்டை அரசு பள்ளிகளில் படித்து மருத்துவ இடம் பெற்ற 11 மாணவர்களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் உதவி!

7 பேர் விடுதலையில் நியாயமும் தர்மமும் உள்ளது: இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், நடிகர்கள் பார்த்திபன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் கோரிக்கை!!

அமித்ஷா வருகையை கண்டு எங்களுக்கு எந்த பயமும் இல்லை: கே.என்.நேரு

>
Copyright ©.
All rights reserved. Created by www.readwhere.comç

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME