சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி கழகத்தின் சார்பில் வீரத்திற்கு

சென்னையில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

கழகத்தின் சார்பில் வீரத்திற்கு வித்திட்டவரும்,இந்திய சுதந்திர
போராட்டத்திற்கு வித்திட்ட ,சுதந்திரப் போராட்டத்தின் முதல் வீரர் தீரன்
சின்னமலைக்கு இன்று நாங்கள் கழகத்தின் சார்பில் மரியாதை
செலுத்தியுள்ளோம்.

கேள்வி…..இடஒதுக்கீட்டிற்கு நாங்கதான் காரணம் என்று அதிமுகவும்
சொல்கிறது.திமுகவும் சொல்கிறது.உண்மையில் இதற்கு யார்தான் காரணம்.

உண்மையாக நாங்கள்தான் காரணம்.வரலாற்றில்  இட ஒதுக்கீடு என்று
எடுத்துக்கொண்டாலே அது நாங்கள்தான்.கழகம்தான்.

நான் கேட்கும் 5 கேள்விகளுக்கு திமுக பதில் சொல்லவேண்டும். 1980 ஆம்
ஆண்டு  30 சதவீதமாக இருந்த பிற்படுத்தப்பட்டவர்களுக்கான ஒதுக்கீடு 50
சதவீதமாக ஒதுக்கியது யார்?  திமுகவா…புரட்சித்தலைவர் எம்ஜிஆர்.
கழகம்.அதன்பிறகு 1990 களில்  மண்டல் கமிஷன் 50 சதவீத இட ஒதுக்கீடு
வழங்கலாம் என்ற பரிந்துரையை வழங்கியபோது அதன் அடிப்படையில்
சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசுக்கு அனுப்பிவைத்துப்,
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு,இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50
சதவீத இடஒதுக்கீடு கொடுக்கவேண்டும் என்று  சொன்னது  எந்த அரசு. அம்மாவின்
அரசு.புரட்சித்தலைவி அம்மா அவர்கள்.  அன்றைக்குத் தீர்மானத்தை
நிறைவேற்றினார்.தீர்மானத்தை நிறைவேற்றியதோடு மட்டுமல்லாமல் 2018 ம்
ஆண்டும் அதுபோல 2020 ஆம் ஆண்டும் மத்திய அரசுக்குக் கடிதம்
எழுதியதோடு,முதலமைச்சராக இருந்த எடப்பாடியார் டெல்லிக்குச் செல்லும்போது
எல்லாம்  பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கவேண்டும்
என்று வற்புறுத்தியது எந்த ஆட்சி.கழக ஆட்சி.அவர் தொடர்ந்து மத்திய
அரசுக்கு அழுத்தம் அளித்தார். அதுபோல வழக்கையும்  கழகம்தான்
போட்டது.கழகத்தின் சார்பில் அப்போதைய சட்ட அமைச்சர் வழக்குத்
தொடுத்தார்.அந்த வழக்குத் தொடுத்த பின்புதான் மற்ற கட்சிகளும் அந்த
வழக்கில் தங்களை  இணைந்துகொண்டது.முதலில் அவர்கள் யாரும் வழக்குப்
போடவில்லை.நாங்கள் வழக்குத் தொடுத்த பிறகு அவர்கள் வந்து
இணைத்துகொண்டார்கள்.அதற்கு
அதன்பிறகு உயர்நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.அந்த குழுவில் மாநில
அரசின் சார்பில் உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.( உமாநாத் ஐ.ஏ.எஸ்) குழு
அறிக்கையை அளித்தது.எங்களைப் பொறுத்தவரை அகில இந்திய அளவில் 27 சதவீதம்
இட ஒதுக்கீடு வழங்கவேண்டும் என்பதுதான் நிலைப்பாடு.சமூக நீதி என்றால் அது
கழகம்தான்.

69 சதவீத இடஒதுக்கீட்டை 9 வது அட்டவணையில் சேர்ந்த கட்சி கழகம்.இதற்குக்
காரணம்  புரட்சித்தலைவி அம்மா.இட ஒதுக்கீட்டில் இவ்வளவு பெரிய வரலாறு
உள்ளது.இதில் திமுக சிறு துரும்பைக்கூட எடுத்துப் போடாத நிலையிலே நாங்கள்
கொண்டுவந்த 27 சதவீதம் மற்றும் 69 சதவீதத்தைச் சொந்தம் கொண்டாடுவது
எப்படி.  மக்களைத் திசை திருப்பி ஏமாற்றுவதிலே  புத்திசாலிகள்
திமுகவினர்.வரலாறு  நிச்சயம் மக்களுக்குத் தெரியும்.இட ஒதுக்கீட்டை
அவர்கள்  கொண்டுவந்ததுபோல ஒரு மாயதோற்றத்தை உருவாக்கியுள்ளார்கள்.இதற்கு
ஊடகங்கள் துணை போகக்கூடாது என்பதுதான் எங்கள் கருத்து.

கேள்வி…இந்த இடஒதுக்கீடு தொடர்பாக பாஜகாவும் சொந்தம் கொண்டாடுகிறதே?

பதில்….முதலில் இதற்கான விதையைப் போட்டு அதன் அடிப்படையில்
தொடர்ச்சியாக நடவடிக்கை எடுத்தது யாரு?.உயர்நீதிமன்றத்தில் முதலில்
வழக்கு தொடுத்த கழகம்.

பாக்ஸ் நியுஸ்

இது என்ன புதுகணக்கு-?

கேள்வி….சட்டமன்ற நூற்றாண்டு விழாவில் உங்கள் கூட்டணி கட்சியினர்
கலந்துகொண்டுள்ளார்களே………

பதில்…..கூட்டணிக் கட்சிகளுக்குள் பொதுவாகக் கொள்கைகள்
மாறுபடும்.எங்கள் கூட்டணியில் தொடர்ந்து அவர்கள் இருக்கும் நிலையில் அந்த
கூட்டத்தில் கலந்துகொண்டது அவர்களின் கொள்கை முடிவு…அதில் நாங்கள்
தலையிட முடியாது.எங்கள் கோரிக்கை என்பது நூற்றாண்டை பொறுத்தவரை
சுதந்திரம் கிடைத்து இந்திய அரசியல் அமைப்பு சபை நிர்ணயம் செய்தபடி  1952
ஆண்டைதான்  கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.அந்த அடிப்படையில்தான் 60
ஆம் ஆண்டை நாங்கள் கொண்டாடினோம்.ஆனால் அவர்கள் தமிழ்நாடு சட்டமன்றம்
என்று விளம்பரம் தந்துள்ளார்கள்.தமிழ்நாடு சட்டமன்றம் எங்கு
இருந்தது.1921 ல் எங்கு இருந்தது.அப்போது ஒரு கவுன்சில்தான் இருந்தது.அது
சட்டமன்றம் கிடையாது.தமிழ்நாடு சட்டமன்றமே 1952ல் தான்
உருவானது.இப்படிப்பட்ட நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நூற்றாண்டு
விழா என்று சொன்னால்  எப்படிப்பட்ட குழப்பத்தை
ஏற்படுத்துகிறார்கள்.அவர்கள் இதில் மாட்டிக்கொண்டார்கள்.
தமிழக சட்டமன்ற நூற்றாண்டை  பொறுத்தவரையில் திமுக முன்னாள்  தலைவர்
கருணாநிதியின் கணக்கு 1937.தற்போதைய முதல்வர் ஸ்டாலின் எடுத்துக்கொண்ட
ஆண்டு 1921..இந்த இரண்டிற்கும் முரண்பாடு உள்ளது.இது என்ன புதுகணக்கு
என்று தெரியவில்லை….

எங்கள் ஆட்சிக்  காலத்தில் மீனவர்களுக்கு முழுமையான அளவிற்குப்
பாதுகாப்பு வழங்கப்பட்டது.நாங்கள் ஆட்சியிலிருந்து இறங்கும்போது ஒரு
மீனவர்கூட சிறைச்சாலையில் கிடையாது.ஆனால் இப்போது அதிக அளவில் மீனவர்கள்
தாக்கப்படுவது மிகவும் கண்டிக்கத்தக்கது.மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக
எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழகம் மத்திய அரசிடம்
வலியுறுத்தும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி அளித்தார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com