கோவிலுக்குள் நைட்டி அணிந்து வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கோவிலுக்குள் நைட்டி அணிந்து வந்த திமுக பெண் கவுன்சிலரை தடுத்ததாக பணி இடைநீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து அர்ச்சகர் தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் அம்மாபேட்டையில் உள்ள சீதா ராமசந்திரன் கோவிலில் அர்ச்சராக பணியாற்றுபவர் கண்ணன். சேலம் மாநகராட்சி 40வது வார்டு கவுன்சிலர் மஞ்சுளா ராஜ்மோகன் நைட்டி உடை அணிந்து கோவிலுக்கு வந்ததாகவும், கோவிலுக்குள் இது போன்று உடை அணிந்து வரக்கூடாது எனவும் முறையான உடை அணிந்து வர வேண்டும் என அர்ச்சகர் கூறியதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து கவுன்சிலரின் ஆதரவாளர்கள் தாக்கவும் முயற்சி செய்துள்ளனர்.

இந்தநிலையில், ஆகம விதிகளுக்கு முரணாக கோவிலை 12 மணி வர திறந்திருந்தாகவும், பெண்களிடன் முறையாக நடந்து கொள்ளவில்லை எனக் கூறி, அர்ச்சகர் கண்ணனுக்கு எதிராக குற்றப்பத்திரிகை அளிக்கப்பட்டதுடன், பணி இடைநீக்கமும் செய்யப்பட்டார்.

சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி அர்ச்சகர் கண்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தனக்கு எதிராக கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் எப்போது நடைபெற்றது என்பதற்கான விவரங்கள் இல்லை எனறும், யாருக்காக இரவு 12 மணி வரை கோவிலை திறந்திருந்தேன் என கூறவில்லை என்பதால், தனக்கு எதிரான குற்றப்பத்திரிகை மற்றும் சஸ்பெண்ட் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், மனு தொடர்பாக ஜூன் 1ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, கோவில் செயல் அலுவலர் மற்றும் திமுக கவுன்சிலர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டார்.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME