இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

 

[1/20, 13:45] Sekarreporter 1: இயக்குநர் சுசி கணேசனுக்கு எதிராக உண்மைக்கு புறம்பான, ஆதாரமற்ற கருத்துக்களை வெளியிட கவிஞர் லீனா மணிமேகலைக்கும், பின்னணி பாடகி சின்மயிக்கும் சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.

நடிகைகள், பாடகிகள் என சினிமா பிரபலங்கள் தங்கள் மீதான பாலியல் தொந்தரவுகள் குறித்து கடந்த 2018ஆம் ஆண்டு ‘‘மி டூ’’ ஹேஷ்டேக் மூலம் டிவிட்டரில் பதிவு செய்தனர். அதன் ஒரு பகுதியாக இயக்குனர் சுசிகணேசனுக்கு எதிராக கவிஞர் லீனா மணிமேகலையும் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார்.

இதுதொடர்பாக லீனா மணிமேகலைக்கு எதிராக சென்னை சைதாபேட்டை நீதிமன்றத்தில் சுசி கணேசன் அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இதற்கிடையில் லீனா மணிமேகலையின் முடக்கப்பட்ட பாஸ்போர்ட் விடுவிக்கபட்டது மற்றும் தனது அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் சுசிகணேசன் இணைவது போன்ற விவகாரங்கள் கடந்த மாதம் சமூக வலைதளங்களில் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், சுசி கணேசன் குறித்து லீனா மணிமேகலையும், சின்மயியும் கருத்துக்களை பதிவிட்டனர்.

உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை தனக்கு எதிராக லீனா மணிமேகலையும், பின்னணி பாடகி சின்மயியும் பரப்பி வருவதாகவும், அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல் ஃபேஸ்புக், கூகுள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களும், ((தி நியூஸ் மினிட்)) இணையதள செய்தி நிறுவனமும் பரப்பி வருவதால், தன்னைப் பற்றிய அவதூறு கருத்துக்களை வெளியிடுவதற்கும், பரப்புவதற்கும் நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும் என்றும், ஒரு கோடியே 10 லட்ச ரூபாய் இழப்பீடு தர உத்தரவிட வேண்டுமெனவும்
இயக்குனர் சுசி கணேசன், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, சுசி கணேசன் தரப்பில், லீனா மணிமேகலைக்கு எதிராக தொடரப்பட்ட கிரிமினல் அவதூறு வழக்கு சைதாபேட்டை நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளாதாகவும், தன்னை பழிவாங்கும் நோக்கத்துடன் லீனா மணிமேகலை, சின்மயி உள்ளிட்டோர் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அடுத்த படத்தில் இசையமைப்பாளர் இளையராஜாவுடன் இணையவுள்ள நிலையில் திரைத்துறையில் தனது நற்பெயரை கெடுக்கும் வகையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் பரப்பப்படுவதாகவும் குற்றம்சாட்டப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, மனுதாரரின் குற்றச்சாட்டில் முகாந்திரம் இருப்பதாக கூறி, சுசி கணேசனுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை வெளியிட லீனா மணிமேகலை மற்றும் சின்மயி ஆகியோருக்கு இடைக்காலத் தடை விதித்துள்ளார்.

மேலும் வழக்கு குறித்து லீனா மணிமேகலை, சின்மயி, கூகுள், பேஸ்புக், டிவிட்டர், தி நியூஸ் மினிட் ஆகியவற்றிற்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளார்.
[1/20, 13:45] Sekarreporter 1: பாடகி சின்மயி மீது ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் இயக்குனர் சுசிகணேசன்

 

மீடூ குற்றச்சாட்டை எதிர்த்து ,2019 ஆம் ஆண்டு லீனா மணிமேகலை மீது சுசிகணேசன் சைதாப்பேட்டை மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் . வழக்கை இழுத்தடித்து லீனா மணிமேகலை தொடர்ந்து காலதாமதம் ஏற்படுத்தி வந்த நிலையில் , நான்கு மாதத்திற்குள் சைதாப்பேட்டை நீதிமன்றம் வழக்கை முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது . அடுத்த நாள் , தன் உயிருக்கு ஆபத்து இருப்பதாக டுவிட்டரில் பதிவிட்டார் . தவறான தகவல்களை ப்ரப்புவதாகவும் , உண்மையில் அவரது உயிருக்கு யாரால் ஆபத்து என்பதை கண்டறிந்து , தனக்கு பாதுகாப்பு வழங்குமறு சென்னை காவல் துறையில் சுசி கணேசன் புகார் அளித்திருந்தார் .

இன்னிலையில் தனது அடுத்த தமிழ் படமான “வஞ்சம் தீர்த்தாயடா” அறிவிப்பினையையும் வெளியிட்டிருந்தார் சுசி கணேசன் . இதனைத் தொடர்ந்து ,பாடகி சின்மயி தானாக முன்வந்து சுசி கணேசனுக்கு எதிராகவும் , அவரது படத்தைப் பற்றியும் பணியாற்றும் கலைஞரிகள் பற்றியும் அவதூறு கருத்துக்களை ட்விட்டர் பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.
அதனை சில பத்திரிக்கைகளும் பிரசுரம் செய்தன. தன்னோடு எந்த விதத்திலும் தொடர்பில்லாத நிலையிலும் சின்மயி தன் மீது அபாண்டமான பழிகளை சுமத்தி அவதூறு பரப்புவதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சுசி கணேசன் ஒரு கோடியே பத்து லட்சத்திற்கு மான நஷ்ட வழக்கு தொடர்ந்தார் .

லீனா மணிமேகலை , சின்மயி ,தன்யா ராஜேந்திரன் உள்ளிட்டோர் தவிர ஃபேஸ்புக் , டுவிட்டர் கூகுள் – இணைத்து சுசி கணேசன் தொடர்ந்த மான நஷ்ட வழக்கு இன்று நீதி அரசர் அப்துல்லா குஸ்க் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது . சுசிகணேசன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் இளையபாரதி “அவதூறு வழக்கு சுசி கணேசன் அவர்களால் போடப்பட்டது .ஆனால் தொடர்ந்து சோசியல் மீடியாவில் அவர் குற்றவாளி என்பது போல தொடர்ந்து அவதூறு செய்யப்படுவதாகவும் தொழிலுக்கும் பெயருக்கும் தொடர்ந்து லீனா மணிமேகலையும் , சின்மயி- , டுவிட்டர் , பேஸ்புக் தளங்களை பயன்படுத்தி – தொடர்த்து களங்கம் ஏற்படுத்துவதாக முறையிட்டார் .

இந்த வழக்கை விசாரித்த நீதி அரசர் லீனா மணிமேகலை சின்மயி உட்பட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கமீடியாவில் பேசுவதற்கும் சோசியல் மீடியாவில் அவதூறு பரப்புவதற்கும் தற்காலிக தடை விதித்து ஃபேஸ்புக் ட்விட்டர் கூகுள் நிறுவனங்களுக்கும் சின்மயி லீனா மணிமேகலை லீனா மணிமேகலை பேட்டியை ஒளிபரப்பிய தனியார் யூ டியூப் சேனல் தன்யா ராஜேந்திரன் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார் . மேலும் இவ்வழக்கு தொடர்பாக இரு தரப்பும் பத்திரிக்கைகளிலும் , சோசியல் மீடியாகளிலும் பேசுவதற்கு தடை விதித்து உத்தரவிட்டார் .

You may also like...

4 Responses

 1. Zelma says:

  Wonderful views on that!

 2. hi says:

  What’s up to every , since I am in fact keen of reading this website’s post to be updated daily. It contains pleasant data.|

 3. Marylin says:

  That’s an awesome point

 1. May 19, 2022

  … [Trackback]

  […] Find More here on that Topic: sekarreporter.com/இயக்குநர்-சுசி-கணேசனுக்க/ […]

Leave a Reply

Your email address will not be published.

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Call Now ButtonCALL ME