இப்படி வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்துவது மிகவும் வருத்தமான செயல்.

இப்படி வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கு தேர்தல்களை நடத்தாமல் காலம் தாழ்த்துவது மிகவும் வருத்தமான செயல்.

மேன்மைமிகு உயர்நீதிமன்றத்தின் உதவிகள் மற்றும் 2020-21 ஆண்டில் நீண்டகால அவகாசம் ஆகியவை தொடர்ந்து இருந்தது, அதனை முறையாக பயன்படுத்தி வாக்காளர் பட்டியலை தயாரித்து சமூக இடைவெளியோடு இந்நேரம் அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களுக்கும் இந்நேரம் தேர்தல்களை நடத்தி முடித்திருக்கலாம்.

வழக்கறிஞர்கள் சங்கங்களின் தேர்தல்களை விரைந்து நடத்தி முடித்தால் தான், வழக்கறிஞர்களின் வாழ்வாதாரம் பற்றிய கவனம் மற்றும் அதற்கான வழிமுறைகளை கண்டறிந்து உதவுதல், ஊரடங்கு பிறகான அடுத்த கட்ட நீதிமன்ற பணிகள், வழக்கு விசாரணைக்கான தொழில் நுட்ப வளர்ச்சி, வழக்கறிஞர்களுக்கு உதவிகள் என பல பணிகளை முடுக்கி விட இயலும்.

நான் கேட்பதெல்லாம், தேர்தல் நடத்த விருப்பம் இல்லையா அல்லது தேர்தலே வேண்டாம் என சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்போகிறார்களா??? என்பதுதான்.

மேற்கண்ட வரிகள் Law Association க்கும், WLA க்கும் பொருந்தாது. காரணம், அந்த சங்கங்கள் சரியான கால இடைவெளியில் முறையாக தேர்தல்களை நடத்துக்கின்றனர்.

தேர்தல்களை தள்ளிப்போடலாம், ஆனால், அதற்கும் ஒரு கால அளவு உண்டு, அந்த கால அளவினை தாண்டினால், நேரடியாக நாம் ஜனநாயகத்தை புறக்கணிக்கின்றோம் எனும் அர்த்தமாகி விடும். தயவு கூர்ந்து வழக்கறிஞர்கள் சங்கங்களின் தேர்தல்களை நடத்துங்கள், வழக்கறிஞர் நலம் பாதுகாப்போமாக, நன்றி 🙏, – முஸ்தகீம் ராஜா

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME
WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com