Yamunadevi Advt: திரு சேகர் சார் அவர்களுக்கு வணக்கம்.! இந்த பதிவு கொஞ்சம் நீண்ட பதிவு தான். மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டதனால் , மிகவும் அவசியமானதால் பதிவிடுகிறேன். கடந்த 23.04.2022 (சனிக்கிழமை) அன்று உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவான அடிக்கல் நாட்டுவிழா

[4/25, 18:38] Yamunadevi Advt: திரு சேகர் சார் அவர்களுக்கு வணக்கம்.! இந்த பதிவு கொஞ்சம் நீண்ட பதிவு தான். மனதார நன்றி சொல்ல கடமைப்பட்டதனால் , மிகவும் அவசியமானதால் பதிவிடுகிறேன்.

கடந்த 23.04.2022 (சனிக்கிழமை) அன்று உயர்நீதிமன்றத்தில் நடைப்பெற்ற முப்பெரும் விழாவான அடிக்கல் நாட்டுவிழா , தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி பார் கவுன்சிலின் உதவித்தொகை வழங்குவது மற்றும் புதிய நீதிமன்ற வளாகம் திறந்து வைத்தல் ஆகிய மூன்று நிகழ்வுகளும் அருமையாக நடைப்பெற்றன. இந்த விழா ஒரு வரலாற்று நிகழ்வாகவே தோன்றுகிறது. விழாவில் பங்குப் பெற்ற அத்தனை சிறப்பு விருந்தினர்களும் தாங்கள் ஒருவருக்கொருவர் தமிழ்ப்புலமையில் சலைத்தவர்கள் அல்லர் என்று நிரூபித்து விட்டனர்.
முதலில் பேசிய உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.எம்.எம். சுந்தரேஷ் அவர்கள் அறம் கூறு அவையத்தின் (நீதிமன்றம்) மாண்பைப் பற்றி
நான்கே வரிகளில் எடுத்துரைத்தார்.

“அறம் கூறு அவையம்”

“அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கி
செற்றமும் உவகையும் செய்யாது காத்து
ஞெமன் கோல் அன்ன செம்மைத்து ஆகி சிறந்த கொள்கை
அறம் கூறு அவையமும்”

—மாங்குடி மருதனார்

இது, அறம் கூறு அவையம். வழக்குகளை ஆராய்ந்து நீதி சொல்லும் மன்றம்.

ஒரு பிரச்னையோடு இங்கே வருகிறவர்கள் ‘நமக்கு நீதி கிடைக்குமா?’ என்ற அச்சத்தோடு இருப்பார்கள், ‘ஒருவேளை நியாயம் கிடைக்காமல் போய்விடுமோ’ என்று சந்தேகம் / வருத்தம் கொள்வார்கள், ’ஒருவேளை நமக்குச் சாதகமாகத் தீர்ப்பு கிடைத்துவிட்டால் எல்லாச் சொத்துகளையும் ஆனந்தமாக அனுபவிக்கலாம்’ என்று ஆசைப்படுவார்கள், இப்படிப் பலவிதமான உணர்வுகள் அவர்களுக்குள் பொங்கும்.
ஆனால், இந்த நீதிமன்றத்துக்குள் நுழைந்துவிட்டால் அந்த உணர்வுகள் எல்லாம் நீக்கப்பட்டுவிடும். காரணம் இங்கே ஒருவர் சந்தோஷப்படும்படியும் இன்னொருவர் வருத்தப்படும்படியும் ஒருதலைப்பட்சமாகத் தீர்ப்புச் சொல்லும் வழக்கமே கிடையாது. தராசுக்கோலைப்போல் நடுநிலையில் நின்று சிறப்பான, சரியான நியாயத்தைச் சொல்லும் மன்றம் இது. இக்குணங்களால் சிறந்த விரதங்களையுடைய அறநூலைச் சொல்லும் சான்றோர்களும் மதுரை நகரில் வாழ்ந்தனர்.

 

அடுத்துப்பேசிய உச்சநீதிமன்ற நீதியரசர் திரு.வி.ராமசுப்பிரமணியம் அவர்கள் வழக்கறிஞர்களின் நிலையை எட்டே வரிகளில் அருமையாக எடுத்தியம்பினார்.

“கல்லைத்தான் மண்ணைத்தான்

….காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா?

இல்லைத்தான் பொன்னைத்தான்

….எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா?

அல்லைத்தான் சொல்லித்தான்

….ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும்

பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான்

….புவியில்தான் பண்ணினானே!

நூல்: தனிப்பாடல்

பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்”

சூழல் வறுமையில் வாடும் ஒரு புலவர். தன்னுடைய நிலைமையை எண்ணி வருந்திப் பாடுகிறார்

தாமரைப் பூவில் வாசம் செய்யும் பிரம்மா, என்னைப் படைத்தபோதே கையில் கொஞ்சம் தங்கத்தைக் கொடுத்துக் காப்பாற்றியிருக்கவேண்டும், இல்லாவிட்டால், கல்லையும் மண்ணையும் காய்ச்சிக் குடிக்கச் சொல்லித்தந்திருக்கவேண்டும்.

அந்தக் கடவுள் இந்த இரண்டையும் செய்யாததால் நான் படுகின்ற துன்பத்தை எங்கே சொல்லி நோவது? இப்படி எல்லாரிடமும் பல்லைக் காண்பித்துப் பிழைக்கும் வாழ்க்கையாகிவிட்டதே!

மூன்றாவதாக பேசிய நம் தாய் தமிழ்நாட்டின் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தமிழக பட்ஜெட்டில் நீதித்துறைக்குத் தேவையான நிதி ஒதுக்கீடு செய்தும், உயர்நீதி மன்றத்திற்கு அரசு சார்பாக நிலங்களை ஒதுக்கீடு செய்த அரசாணையும் வழங்கி, வழக்கறிஞர்களுக்குச் சேமநலநிதியை பத்து லட்சத்திற்கு உயர்த்தியும், தமிழக வழக்கறிஞர்களின் தேவைகளை அறிந்து தாயுள்ளத்தோடு வழக்கறிஞர்களுக்குக்காக முதலமைச்சரின் குரலில் முத்தான முன்று கோரிக்கைகளை உச்சநீதி மன்ற தலைமை நீதிபதி அவர்களிடத்தில் சேர்ப்பித்ததால் அந்த மூன்று கோரிக்கைகளும் கூடிய விரைவில் நடைமுறைப்படுத்தப்படும் என்று நூறு சதவிகிதம் நம்பிக்கையும் ஏற்பட்டதுள்ளது.
உயர்நீதிமன்ற நீதிபதிகளின் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றவும், உச்சநீதி மன்ற கிளையை தமிழகத்தில் அமைத்திடவும்,தமிழ் வழக்காடு மொழியாக வழக்காடவும் வேண்டுகோள் விடுத்தார்.
கடைசியாகப் பேசிய நம் பாரத இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் மூத்தாய்ப்பாக அய்யன் வள்ளுவரின் குறளை இரண்டே வரிகளில் கூறி நீதிவழங்கும் முறைமையை. மாண்பை அருமையாக கொஞ்சும் தமிழில் எடுத்துரைத்தார்.

செங்கோன்மை எனும் அதிகாரத்தில், நீதி எப்படி இருக்க வேண்டும் என்பதை வள்ளுவர்,

ஓர்ந்துகண் ணோடாது இறைபுரிந்து யார்மட்டும்
தேர்ந்து செய் வஃதே முறை. (குறள். 541)

யாரிடத்திலும் (குற்றம் இன்னதென்று) ஆராய்ந்து கண்ணோட்டம் செய்யாமல், நடுவு நிலைமை பொருந்தி (செய்யத் தக்கதை) ஆராய்ந்து செய்வதே நீதி முறையாகும்.

மேலும் மாண்புமிகு
தலைமை நீதியரசர் அவர்கள் அனைத்து பாராட்டுகளையும் மிகவும் மகிழ்வோடு ஏற்று அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்து விடைப்பெற்றார். இந்த அனைத்து நிகழ்வுகளையும் பொறுமையாக, அழகாக, சிறப்பாக அனைவரும் பிரமிக்கும் நிகழ்ச்சியைச் செவ்வனே நடத்திட்ட நம்முடைய வரலாற்றுச் சிறப்புமிக்க நீதிமன்றத்தின் நம்முடைய அன்புக்கும் பாசத்திற்கும் சொந்தக்காரரான நம் தலைமை நீதியரசர் உள்ளிட்ட அனைத்து நீதியரசர்களுக்கும் கோடானாகோடி நன்றிகளை உரித்தாக்குகிறேன். 🙏🙏
[4/25, 18:41] Sekarreporter: 💐🌹

You may also like...