Sv Jayaraman

[5/12, 13:14] jp dmk: சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கத்தின் மிக மூத்த வழக்கறிஞர். நூற்றுக்கணக்கான மூத்த வழக்கறிஞர்கள் உருவாக்கிய சங்கத்தின் ஆலமரமாய் அதன் விழுதுகளை தாங்கியவர்.
நமது சங்க நூலகம் அவரின் சட்ட அறிவை பறைசாற்றும் கருவூலமாகும். ஆரவாரங்கள் அதிகமாக
இருக்கும் சங்க அரங்கில்
அமைதியாய்
தன் வழக்கு பணிகளை தொடர்ந்த நற்குணம் படைத்தவர். அரசு அதிகாரிகளாக
ஓய்வு பெற்ற பலரின் ஓய்வறையாய் இருக்கும்
சங்க அறையை அறிவரையாய் மாற்றியவர்.
சட்ட நோக்கம் குறித்து
யார் வந்து சந்தேகம் கேட்டாலும் உடனுக்குடன் பதில் கூறும் பேராசிரியர். வழக்கின் தன்மையை விட வழக்கை கொண்டு வரும் வழக்கறிஞரின்
நிலைமையை புரிந்துக்கொண்டு வழக்கிற்கான
தனது கட்டணத்தை தீர்மானிப்பவர்.
என்றும் போற்றுதலுக்குரிய ஐயா
S. V. ஜெயராமன்
அவர்களுக்கு எனது ஆழ்ந்த அஞ்சலி செலுத்திக் கொள்கின்றேன். நேரில் அவருக்கு இறுதி மரியாதை செய்ய முடியாததை எண்ணி மனம் வாடுகின்றேன்.
ஐயாவின் ஆன்மா நற்பேறு அடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றேன்.
[5/12, 21:23] jp dmk: இன்று தனது பிறந்தநாளை கொண்டாடும்
கழக சட்டத்துறையின் செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன்
இரா . கிரிராஜன் அவர்களுக்கு எனது நல்வாழ்த்துக்களை இவ்வாழ்த்து மடலின் வாயிலாக தெரிவித்துக் கொள்கின்றேன் .
💐💐💐💐💐
மாணவர்
பருவம் தொட்டு
கழக
பணியாற்றும் கலைஞரின் தொண்டரே !

கழகத் தலைவர் தளபதியின்
வழியில் கடமையாற்றும் கர்மவீரரே !

பைந்தமிழ் பாடும் பச்சையப்பன் கல்லூரியில்
அன்னை
தமிழ் காக்க
தமிழ் கொடியேந்தி இந்தி திணிப்பிற்கு எதிராக
மாணவர் படை தலைமையேற்று
சென்னை
மத்திய
ரயில்
நிலையத்தை முற்றுகையிட்ட மொழிப்போர்
வீரரே !

வணக்கத்திற்குரிய சென்னை
மாநகர
தந்தையாக
மாண்புமிகு
தளபதி அவர்கள் உள்ளாட்சியில்
நல்லாட்சி
செய்தபோது
அவர்தம்
கரம்பற்றி
மக்கள்
பணியாற்றிய
மாமன்ற
உறுப்பினரே !

அன்று
வடசென்னை
மாவட்ட
வழக்கறிஞர் துணை அமைப்பாளராக அரசியல் பொது வாழ்க்கை தொடங்கி

தலைமை
செயற்குழு
செயற்குழு உறுப்பினராக
வளர்ந்து

வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினராய் போட்டியிட
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால்
அரியவாய்ப்பு
வழங்கப்பட்டு படிப்படியாய்
தன் உழைப்பால் தன்னை
உயர்த்திக்
கொண்ட
உயர்ந்தவரே !

ஆயிரக்கணக்கான கழக
வழக்கறிஞர்களை அரவணைத்து
கழகத்திற்கு
அரண்
அமைக்கும்
எங்களின்
அணி
செயலாளரே !

கழக வழக்கறிஞர்களின் இன்ப துன்பங்களில் உற்ற தோழனாய்
உறு துணை
நிற்கும்
நண்பரே !

என்றும் என் அன்புக்குரிய
மூத்த
சகோதரரே !

உங்களின் பிறந்தநாளில்
உளமார வாழ்த்துகிறேன்… உங்களில் ஒருவனாக…
🙏🙏🙏🙏
என்றும்
அன்புடன்
செந்தமிழ்ச்செல்வன்
சி . ஜெயபிரகாஷ்
மாவட்ட துணை அமைப்பாளர், சென்னை மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி
💐💐💐💐💐

You may also like...