Surplus teachers case status சுப்ரீம் கோர்ட்டில் அரசு அப்பீல் நிலை என்ன?

அரசு நிதியுதவி பெறும் தனியார் பள்ளிகளில் பணி ஓய்வு மற்றும் பதவி உயர்வு காரணமாக ஏற்படும் காலி பணியிடங்களில் (அரசின் அனுமதி பெற்றது) உரிய கல்வி தகுதி பெற்ற ஆசிரியர்களை பள்ளி நிர்வாகம் நியமனம் செய்வது வழக்கமான நடைமுறையாகும் அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்கி ஊதியம் அளிப்பது பள்ளிக்கல்வித்துறையின் பொறுப்பாகும்.
அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கையை விட ஆசிரியர்கள் கூடுதலாக பணிபுகின்றனர் என்ற கருத்தின் அடிப்படையில் கடந்த 2017ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் நியமனத்திற்கு ஒப்புதல் வழங்க பள்ளி கல்வித்துறை மறுத்து வருகிறது.
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சார்பில் பல்வேறு ரிட் மனுக்கள் தாக்கல் செய்து நியமன நாள் முதல் ஊதியம் வழங்குமாறு கல்வித்துறைக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டன. இந்த ரிட் மனுக்களின் தீர்ப்புகளுக்கு எதிராக பள்ளிக்கல்வித்துறை டிவிசன் பென்ச்சில் மேல்முறையீடு செய்தது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் 9-.4.-2019 அன்று பெறப்பட்ட டிவிசன் பென்ச் இடைக்கால தீர்ப்பின்படி பள்ளிக்கல்வித்துறை அரசு ஆணை எண். 165 நாள் 17.09.2019ஐ வெளியிட்டது. இதன்படி தனியார் பள்ளி ஆசிரியர்களின் பணி நியமனத்திற்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பி விட்டது.

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் அனைத்து மேல் முறையீட்டு வழக்குகளும் WA(MD) 76ன் கீழ் ஒன்றிணைக்கப்பட்டு நீதிபதிகள் சத்திய நாராயணண் மற்றும் சுரேஷ்குமார் அடங்கிய டிவிசன் பென்ச் 31.03.2021ல் 150 பக்கங்கள் அடங்கிய தீர்ப்பில் தெளிவாக வழங்கியுள்ளது. மேற்கூறிய தீர்ப்பாணையில் அரசாணை எண் 165 பிறப்பிக்கப்பட்டது செல்லாது எனவும் 2021 அக்டோபர் மாதத்திற்குள் ஆசிரியர், மாணவர் விகிதம் கணக்கிடப்பட்டு பணி நிரவல் முடித்து உபரி ஆசிரியர்கள் இல்லை என உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கும்படி அரசை பணித்துள்ளனர்.

மேற்படி உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக அரசு தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து காலதாமதம் செய்து வருகிறது. எனவே தமிழகத்தில் புதிதாக நியமனம் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் எந்தவித வாழ்வாதாரமும் இன்றி பள்ளிகளுக்கு சென்று பணிபுரிந்து வருகின்றார்கள். தற்போதைய தமிழக அரசு இவ்விவகாரத்தில் தலையிட்டு உச்சநீதிமன்ற வழக்கை வாபஸ் செய்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பாணையின்படி செயல்பட்டு ஆசிரியர்களுக்கு ஒப்புதலும் ஊதியமும் வழங்க தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது தனியார் பள்ளி ஆசிரியர்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.

இந்த தீர்ப்பு எதிர்த்து அரசு சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த்து ்அந்த அப்பீல் பல ஆண்டாக நிலுவையில் உள்ளது.

You may also like...