Smsj urgent letter to RG

சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தொழில் வரி வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற தலைமை பதிவாளருக்கு நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியம் கடிதம் அனுப்பி உள்ளார்.

அந்த கடிதத்தில், இந்திய ஊழல் எதிர்ப்பு குழுக்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் செல்வராஜ் என்பவர் பல ஆண்டுகளாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பணியாளர்களின் ஊதியத்தில் தொழில் வரி பிடித்தம் செய்யப்படுவதில்லை எனக்கூறி தனக்கு கடிதம் அனுப்பி உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தொழில் வழி வசூலிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்ற ஊழியர்கள் தொடர்ந்த வழக்கில் எந்த இடைக்கால தடையும் விதிக்கப்படாத நிலையில் சம்பள கணக்கு அலுவலகத்தில் தொழில் வெடித்தம் செய்யக்கூடாது என வற்புறுத்தி வருவதாகவும், அதனால் உயர்நீதிமன்ற ஊழியர்களுக்கு மட்டும் தொழில் வரி வசூலிக்கப்படவில்லை என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து அரசுத்துறை மற்றும் தலைமைச் செயலகத்தில் பணிபுரியும் 12 லட்சம் அதிகாரிகளும் ஊழியர்களும் தொழில்வரி செலுத்தி வரும் நிலையில் உயர்நீதிமன்ற ஊழியர்கள் தொழில் வரி செலுத்தாததால் அரசுக்கு ஆண்டுக்கு 59 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சுட்டி காட்டிய நீதிபதி சுப்ரமணியம், நீதிமன்ற பணியாளர்களுக்கான தொழில் வலியை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்டு 24 ஆண்டுகளாக நிலுவையில் இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் சுட்டிக்காட்டி உள்ளார்.

You may also like...