Smsj வுக்கு பாராட்டு [5/21, 12:35] Sekarreporter: [5/21, 12:31] Sekarreporter: Super congrats lady advocate [5/21, 12:31] Sekarreporter: இந்த வாரம் (மே 18 மற்றும் 19ந்தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் நீதியரசர். திரு. S.M.சுப்பரமணியம் அவர்கள் இரண்டு நாட்கள் முழுவதும் இன்முகத்தோடு நீதி பரிபாலனம் செய்யும் மாண்பை காணும் வாய்ப்பைப் பெற்றேன்.

[5/21, 12:35] Sekarreporter: Smsj வுக்கு பாராட்டு
[5/21, 12:35] Sekarreporter: [5/21, 12:31] Sekarreporter: Super congrats lady advocate
[5/21, 12:31] Sekarreporter: இந்த வாரம் (மே 18 மற்றும் 19ந்தேதி) சென்னை உயர்நீதிமன்றத்தின் விடுமுறைக்கால நீதிமன்றத்தில் நீதியரசர். திரு. S.M.சுப்பரமணியம் அவர்கள் இரண்டு நாட்கள் முழுவதும் இன்முகத்தோடு நீதி பரிபாலனம் செய்யும் மாண்பை காணும் வாய்ப்பைப் பெற்றேன்.

நீதி பரிபாலனம் செய்யும் போது தங்கத்தை நிறுத்த பயன்படும் தராசு போல மிகத்துல்லியமாக இருக்க வேண்டும் என்று கம்பராமாயணத்தில் கூறப்பட்டுள்ளதாக படித்துள்ளேன்.

இதே கருத்தை அய்யன் வள்ளுவரும் திருக்குறளில் இரண்டே வரிகளில் எழுதியுள்ளார்.

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால்
கோடாமை சான்றோர்க் கணி.

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.. .

இறுதி நாளில் நிறைய வழக்குகள் விசாரிக்கப்பட்டன. அதில் முக்கியமானத மூன்று முக்கியமான வழக்குகளைக் கூறலாம். அனைத்து இந்து அறநிலைத்ததுறை வழக்குகளில் கோவில்களின் நில குத்தகை வருமானச் சம்மந்தம் மற்றும் கோவில்களின் சொத்து பாதுகாப்பு வழக்குகளில் நீதி பரியாலனம் செய்யும் போது மிகவும் பொறுப்பாகவும் கவனமாக செயல்படுவது நேர்த்தியாக இருந்தது. இது அனைத்து சென்னை உயர்நீதி மன்ற நீதிபதிகளுக்கும் பொருந்தும்.

மற்றொரு வழக்கில் நீதியரசர். திரு.S.M.சுப்பரமணியம் மற்றும் நீதியரசர்.திரு.சத்தியநாராயண பிரசாத் அமர்வு நீண்ட கால சட்டப்போராட்ட வழக்கை விசாரித்து முடித்து வைத்தனர். தாய் தன் இரண்டுப் பெண்க் குழந்தைகளைப் பெறவேண்டி தாக்கல் செய்த குடும்பநல வழக்கு. இரண்டு நாளும் நேரம் பாராமல் குழந்தைகளை வரவழைத்து அவர்களிடம் பேசி இரண்டு குழந்தைகளும் அழுது தந்தையிடமிருந்து தாயிடம் சேர விருப்பந்தெரிவித்து குழந்தைகளையும் தாயையும் சேர்த்து வைத்தார். அந்தத் தாய் நன்றி கூறி விடைபெறும் போது நீதிமன்றத்தில் உள்ள பெரும்பாலன வழக்கறிஞர்களின் மனங்களும் நெகிழ்ச்சியடைந்ததை காணமுடிந்தது.

மூன்றாவதாக பிரிதொரு வழக்கில்
மனுதாரர் குன்னூர் இளைஞர் வாரத்தில் மூன்று நாள் டாயாலில் செய்து கொள்ளும் நோயாளி. இரத்த பந்த உறவு இல்லாதவரிடமிருந்து சிறுநீரகத்தை தானமாக பெற அனுமதியளிக்க வேண்டீய வழக்கில் கூடுதல் தலைமை வழக்கறிஞர்ர திரு.இரவீந்திரன் அவர்களும் உடனனடியாக செயல்பட்டு அறுவை சிகிச்சை அங்கீகார குழுத் துறையுடன் தொலை பேசியில் கலந்து ஆலோசனைப் பெற்று மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக நாளையே முடிவெடுக்க, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை அங்கீகார குழுவுக்கு உத்தரவிட்டார்.

தமக்கென வாழாமல் பிறருக்கென வாழ்கின்ற சான்றோர்களாலும்தான் இந்த உலகம் அழியாமல் இருக்கிறது என நமது முன்னோர் களின் மனித நேயம் குறித்துக் கூறுகிறது புறநானூறு.

“யாதும் ஊரே, யாவரும் கேளிர்”

கனியன் பூங்குன்றனாரின் மனித நேயம் எல்லைகள் தாண்டிய மனித நேயம்.
வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினார் வள்ளலார்.

உலகம் அழியாமல் உயிரோடும், உயிர்ப்போடும் இருக்க வேண்டுமானால், அறிவாற்றல், ஆளுமை, அதிகாரம் கொண்ட மனிதர்களைவிட அன்பு, கருணை, இரக்கம் கொண்ட மனிதர்களே தேவை.

மனித நேயத்தின் மூலமே இறைவனை காண முடியும்.

அந்த விடுமுறை கால நீதி மன்றத்தின் நேரம் கடந்துக் கொண்டேச் சென்றாலும் கடைசியாக பேசிய வழக்கறிஞரின் வழக்கையும் இன்முகத்தோடு விசாரித்து தீர்ப்பு வழங்கி முடித்ததும் அந்த வழக்கறிஞர் மனதார பாராட்டி மனநெகிழ்ச்சியோடு நன்றிகூறியதை நீதிபதியாக அதை சற்றும் கண்டு கொள்ளாமல் அது தன்னுடைய கடைமை என்று பணியாற்றி சென்றக்காட்சி மனதை மிகவும் தொட்டது. நம் உயர்நீதி மன்றத்தில் இது போன்ற நிகழ்வுகள் எப்பொழுதும் தொடர வேண்டும் என்பதே என் விருப்பம்.

You may also like...