Sethu Sir Dinamalar: தெய்வத்துள் தெய்வம் * ஆர். சுப்புலட்சுமி அம்மாள். தெய்வமே நேரில் வந்ததுபோன்ற தோற்றம். பார்வையில் கனிவு. பாசத்தில் பசு. அம்மா என்றாலே பேரன்பு. தாய் மட்டுமே, நம் வாழ்வில் நேரில் உணரும் தெய்வம். தெய்வத்துள் தெய்வம்.

[2/28, 10:47] Sethu Sir Dinamalar: தெய்வத்துள் தெய்வம்
*
ஆர். சுப்புலட்சுமி அம்மாள்.
தெய்வமே நேரில் வந்ததுபோன்ற தோற்றம்.
பார்வையில் கனிவு. பாசத்தில் பசு.
அம்மா என்றாலே பேரன்பு.
தாய் மட்டுமே, நம் வாழ்வில் நேரில் உணரும் தெய்வம். தெய்வத்துள் தெய்வம்.
நான் சென்னை வந்த புதிது. தினமலர் பங்குதாரர் தெய்வத்திரு ஆர்.ராகவன் அவர்களின் ஆழ்வார்பேட்டை வீட்டில் நடைபெறும் நவராத்திரி கொலு உற்சவங்களுக்கு குடும்பத்துடன் இரண்டு முறை சென்றிருக்கிறேன். அந்த கொலுவில் என் மகள் பாடி இருக்கிறார். அம்மா, ஆசிர்வாதம் செய்திருக்கிறார்.
இன்னொரு நாள், ஆர்ஆர் அவர்களின் பிறந்தநாளுக்கு, ஆசி பெற, தினமலர் ஊழியர்கள் அனைவரும் சென்றிருந்தோம்.
அடுத்தடுத்த முறை வீட்டுக்கு சென்றபோதெல்லாம், ‘‘மகள் எப்படி இருக்கா? அழைச்சுட்டுவா…’’ என்று அன்போடு சொல்வார்.
ஆர்.ராகவன் – ஆர். சுப்புலட்சுமி தம்பதியர், ஒரு உதாரண தம்பதியர்.
இருவர் முகத்திலும், உள்ளத்திலும் தெய்வம் குடிகொண்டிருக்கும்.
அவர்களின் பிள்ளைகளான திரு. ஆர். ராமசுப்பு, திரு. ஆர்ஆர். கோபால்ஜி மட்டுமல்லாமல், தினமலர் என்ற ஆல விருட்சத்தின் அடையாளமாக திகழும் தினமலர் குடும்பங்களில் வளர்ந்து ஆளான எல்லா பிள்ளைகளுக்கும் அவர் செல்ல அன்னையாக திகழ்ந்திருக்கிறார்.
கணவரின் அண்ணன்கள், தம்பி பிள்ளைகள் எல்லாரையும் அரவணைத்தவர். பேரன்பு காட்டியவர்.
கோடை விடுமுறைதோறும், அம்மாவின் சமையல் ருசிக்க, பிள்ளைகள் திருச்சி வந்துவிடுவார்கள் என்று அறிந்திருக்கிறேன்.
திரு. சுரேஷ், திரு.மகேஷ், திரு. ரமேஷ், திரு. வெங்கடேஷ் அனைவரும் ‘சின்னம்மா’ ஆர். சுப்புலட்சுமி குறித்து பெருமிதப்பட்டிருப்பதை கண்டிருக்கிறேன்.
மராட்டிய மாமன்னர், வீர சிவாஜியை, அவரது தாயார், புராண கதைகள் சொல்லி வளர்த்ததுபோலவே, புராண, இதிகாச கதைகள் சொல்லி, தன் பிள்ளைகளையும் அம்மா வளர்த்திருக்கிறார்.
என்னைப்போலவே, திரு. ஞானவேல், திரு.கணேசன், திரு.குணசேகரன், திரு. பக்கிரிசாமி, திரு.அரியசாமி, திரு.கோவிந்தசாமி, திரு.கார்த்திக் போன்று நுாற்றுக்கணக்கான திருச்சி பதிப்பு தினமலர் ஊழியர்கள், அம்மாவின் பேரன்பை உணர்ந்திருக்கிறார்கள்.
ஆர்ஆர் அவர்களின் குழந்தை சிரிப்பும், அம்மாவின் தெய்வீக பார்வையும் பட்டால், யாரும் எழுந்து நின்று வணங்கி மகிழ்வார்கள்.
தன் தாயின் பாசம் குறித்து திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்கள் நிறைய கூறக் கேட்டிருக்கிறேன். எதற்கும் கலங்காத அவர், கலங்கிய குரலில் நேற்று தன் தாயார் மறைந்த தகவல் சொன்னார்.
தாயின் மறைவுக்கு ஆறுதல் கூற வார்த்தைகள் இல்லை.
தாயிற்சிறந்த கோவிலுமில்லை; தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்று வாழ்ந்த திரு. ஆர். ராமசுப்பு, திரு. ஆர்ஆர். கோபால்ஜி வாழ்வு சொற்களில் அடங்காதது.
தந்தை மறைவுக்குப்பிறகு, திரு. ஆர். ராமசுப்பு, திரு. ஆர்ஆர். கோபால்ஜி அன்னையை கண் போல் கவனித்துக்கொள்ள, இன்னொரு தாயாக, கூடவே இருந்து பாட்டியை பார்த்து வந்தார் பேத்தி அபர்ணா.
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்துசென்ற பேரன்பு கொண்ட ஆர்ஆர் தம்பதியர், வானுலகில் தெய்வமாக திகழ்ந்து, தன் பிள்ளைகளையும், தினமலரையும், தினமலர் குடும்பத்தினரையும், ஊழியர்களையும் காப்பாற்றுவார்கள். கருணை செய்வார்கள். ஆசி வழங்குவார்கள்.
மீண்டும் புது அத்தியாயம் மலரட்டும்!.
மலரின் மணம் திசை எட்டும் பரவட்டும்!
–அன்புடன் சேது!
28 பிப்ரவரி 2020
[2/28, 10:50] Sekarreporter 1: Super sir
[2/28, 10:54] Sekarreporter 1: அருமை சார்
சேது சார. அருமை சார்

You may also like...