Sc judge mmsj full speech in bar council felecitation function

[12/18, 10:05] Sekarreporter 1: [12/18, 10:05] Sekarreporter 1: https://youtube.com/shorts/jVRHdXXoCG4?feature=share
[12/18, 10:05] Sekarreporter 1: https://youtube.com/shorts/SJ6A4ldB33c?feature=share
[12/18, 10:05] Sekarreporter 1: https://youtube.com/shorts/aQibVTVRpZI?feature=share
[12/18, 10:47] Sekarreporter 1: [12/18, 10:27] Sekarreporter 1: https://youtu.be/v4tIeMnRF0o
[12/18, 10:47] Sekarreporter 1: https://youtu.be/FUmfg32KZXs
[12/18, 10:47] Sekarreporter 1: https://youtu.be/FUmfg32KZXs
[12/18, 13:39] Sekarreporter 1: [12/18, 13:38] Sekarreporter 1: https://youtu.be/Ve-rZA3gWI4
[12/18, 13:38] Sekarreporter 1: sc judge mm sundaresh judge kirubakaran சந்திப்பு நண்பர்கள் கட்டி பிடித்து மகிழும் வீடியோ காட்சி
[12/18, 14:23] Sekarreporter 1: [12/18, 14:23] Sekarreporter 1: https://youtu.be/cg2k3n3xlAo
[12/18, 14:23] Sekarreporter 1: Bar council chairman Amalraj speech in mmsj function விழாவுக்கு வந்தவர்கள் வீடியோ காட்சி
[12/18, 14:47] Sekarreporter 1: [12/18, 14:45] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1472133483057205248?t=bmsM_fK_NAI7Lbn-n8vhYQ&s=08
[12/18, 14:46] Sekarreporter 1: [12/18, 14:44] Sekarreporter 1: 🙏🏼
[12/18, 14:45] Sekarreporter 1: Whether North Pole – South pole or Double Barrel Gun by justice suthanthiram
[12/18, 15:15] Sekarreporter 1: [12/18, 15:13] Sekarreporter 1: https://youtu.be/vd2BUKz0Oyg
[12/18, 15:13] Sekarreporter 1: சமூக வலைத்தளங்களில் நீதித்துறை பற்றி அவமதிப்பு நடவடிக்கை தேவை மூத்த வில்சன் பேச்சு
[12/18, 18:11] Sekarreporter 1: [12/18, 18:10] Sekarreporter 1: https://youtu.be/blgXlU6umrs
[12/18, 18:10] Sekarreporter 1: sc judge mmsj functionல் எடுக்கப்பட்ட 150 புகைப்படங்கள் more photos in the video sekarreporter
[12/18, 19:47] Sekarreporter 1: [12/18, 19:46] Sekarreporter 1: https://youtu.be/UFX9Pgtxz8E
[12/18, 19:46] Sekarreporter 1: சுப்ரீம் கோர்ட் நீதிபதி எம்எம் சுந்தரேஷ் சூப்பரான பேச்சு full வீடியோ bar council sekarreporter

 

வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது எனவும், பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமெனவும் உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றம் மூத்த நீதிபதியாக இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்றுள்ள நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ்-க்கு தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தரப்பில் பாராட்டு விழா நடைபெற்றது

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற பார் கவுன்சில் தலைவர் அமல்ராஜ் தலைமையில் நடைபெறும் பாராட்டு விழாவில் உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம்.துரைசாமி, டி.ராஜா, வி.பாரதிதாசன், ஆர்.சுரேஷ்குமார், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி, கிருஷ்ணன் ராமசாமி, சி.சரவணன், எம்.கோவிந்தராஜ், ஜி.கே.இளந்திரையன், ஜெ. சத்திய நாராயண பிரசாத், உள்ளிட்ட நீதிபதிகள், ஓய்வுபெற்ற நீதிபதி என்.கிருபாகரன், மத்திய மாநில அரசு வழக்கறிஞர்கள், இந்திய, மாநில பார் கவுன்சில் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த விழாவில் வரவேற்புரை ஆற்றிய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், உச்ச நீதிமன்றத்தின் கிளையை தமிழகத்தில் அமைப்பதற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கோரிக்கை வைத்தார்.

திமுக எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான பி.வில்சன், எவ்வளவு சிக்கலான வழ்க்காக இருந்தாலும் எளிதில் தீர்வு காணக்கூடியவர் நீதிபதி சுந்தரேஷ் என பாராட்டு தெரிவித்தார். நீதிமன்றம் மற்றும் நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் பதிவிடும் வழக்கறிஞர்கள் மீது இந்திய பார் கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

பார் கவுன்சில் உறுப்பினரான ஆர்.விடுதலை பேசியபோது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் காவலர் என அனைவராலும் போற்றப்பட்டவர் என பாராட்டு தெரிவித்தார்.

இந்திய பார் கவுன்சில் துணை தலைவர் எஸ்.பிரபாகரன் பேசியபோது, சச்சினும், கோலியும் சேர்ந்த.ஒரு மனிதராக நீதிபதி சுந்தரேஷ் வழக்குகளை கையாண்டதாக தெரிவித்தார். நீதிபதிகள் மீது அவதூறு பரப்பும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை எடுப்பதில் பார் கவுன்சில் எப்போதும் தயங்காது என உறுதியளித்தார்.

மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஆர்.சங்கரநாராயணன் பேசிய, வழக்கறிஞர் சமூகம் கற்று தங்களை மேம்படுத்திக்கொள்ளும் வகையில் பல்வேறு தீர்ப்புகளை வழங்க வேண்டுமென விருப்பம் தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சி.சரவணன், கூடுதல் நீதிபதியாக பதவியேற்றவுடன் நீதிபதி சுந்தரேஷ் தலமையிலான அமர்வில் இருந்தது மிகவும் பயனுள்ளதாக அமைந்ததாக தெரிவித்தார்.

நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி பேசியபோது இளம் நீதிபதிகளுக்கு கற்றுக்கொடுப்பதுடன், தீர்ப்புகள் எழுதவும் ஊக்குவித்தார் என தெரிவித்தார். MMS என்பதை Man of Marvelous Sundresh என்பது தான் சரியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

நீதிபதி என்.சேஷசாயி பேசியபோது, பின் வாச்ல வழியாக வந்த ஆங்கிலம், முன் வாசலில் தமிழை மறக்கத் தொடங்கிவிட்டதாக தெரிவித்தார். பதவி என்னும் உடையை மாட்டிக்கொண்டு கழற்ற மறுப்பவர்கள் உள்ள நிலையில், அந்த உடையை அணிந்திருக்கிறோம் என்ற எண்ணமே இல்லாதவர் நீதிபதி சுந்தரேஷ் என பாராட்டு தெரிவித்தார்.

நீதிபதி என்.சதீஷ்குமார் பேசியபோது, அனைத்து துறை சார்ந்த வழக்குகளிலும் முக்கிய தீர்ப்புகளை வழங்கி நீதித்துறையும், வழக்கறிஞர்களும் பலனடைய உதவிபுரிய வேண்டுமென விருப்பம் தெரிவித்தார். நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் பார் கவுன்சிலுக்கு வலியுறுத்தினார்.

நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் பேசியபோது, நீதிபதி என்பதை தாண்டி மனிதம் என்ற உள்ளார்ந்த பண்பின் அடிப்படையில் மனிதராக நீதிபதி சுந்தரேஷ் கொண்டாடப்படுவார் என தெரிவித்தார். அவர் நேசிக்கும் தமிழ் கூறும் அறத்தையும், நீதியையும் கற்றுக்கொண்டு பேசுவதுடன் நிறுத்திவிடாமல் வாழ்விலும் பின்பற்றுபவர் நீதிபதி சுந்தரேஷ் என பெருமைபட தெரிவித்தார். தன்னுடன் 2009ல் பதவியேற்றவர்களை எப்படி சகோதரனாக நினைத்தாரோ, அதேபோலத்தான் சமீபத்தில் பதவியேற்ற இளம் நீதிபதிகளையும் சகோதரத்துடன் பழகுவார் என நீதிபதி சுந்தரேஷ் பின்பற்றும் அறநெறியை புகழ்ந்து பேசினார்.

நீதிபதி வி.பாரதிதாசன் பேசியபோது, மன எண்ணங்களுக்கு ஏற்ற உயர்வு, பிறருக்கு தீங்கிழைக்கக்கூடாது போன்ற வள்ளுவரின் வார்த்தைகளுக்கு ஏற்ப வாழும் நீதிபதி சுந்தரேஷ், மேலும் மேன்மையடைய வேண்டுமென வாழ்த்தினார்.

நீதிபதி டி.ராஜா பேசியபோது, சிறந்த தமிழாற்றல், சிறந்த நீதிபதி, சிறந்த மனிதநேயம் ஆகியவைத்தான் உச்ச நீதிமன்ற நீதிபதியாக சுந்தரேஷ் உயர காரணம் என தெரிவித்தார். மத்திய அரசும் , ராணுவமும் குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று செயல்பட வேண்டிய நிலையில், குடியரசு தலைவருக்கு எழும் சட்ட சிக்கல்களை போக்கக்கூடிய உச்ச நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை உயர் நீதிமன்ற மூத்த நீதிபதி எம்.துரைசாமியும் தனது வாழ்த்துகளை தெரிவித்தார்.

விழாவில் ஏற்புரையாற்றிய உச்ச நீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், டெல்லியில் உள்ள குளிரை காட்டிலும், இங்குள்ள பாச மழையால் உடல் நடுங்குவதாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

வழக்கறிஞர்கள் தவறிழைத்தாலும் நீதிபதிகள் கோபப்படக்கூடாது என தெரிவித்ததுடன், பதவி ஆடை மாதிரிதான் என்றும், ஆனாலும் பதவியில் இருக்கும்போது செருக்கில்லாமல் இருக்க வேண்டுமென என குறிப்பிட்டார்.

நிலுவை வழக்குகள் இருந்தாலும், தாக்கலாகும் வழக்குகள் எண்ணிக்கை குறைந்து வருவதாக சுட்டிக்காடியதுடன், வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்தால் தான் நீதிமன்றங்கள் மீது மக்களின் நம்பிக்கை அதிகரிக்கும் என தெரிவித்தார்.

எனவே மக்களை தேடிச்சென்று நீதி வழங்க வேண்டுமென தெரிவித்தார். உச்ச நீதிமன்ற கிளை அமைக்கும் விவகாரத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதாக தெரிவித்தார்.

 

 

You may also like...