Pushpa sathyanarayanan judge and krishnan ramasamy judgeசிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் ஊதியக் குறைப்பு நடவடிக்கையில் தலையிட மறுத்த சென்னை உயர் நீதிமன்றம், ஊதிய குறைப்பு நோட்டீசுக்கு 2 வாரங்களில் பதிலளிக்கும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

அண்ணாமலை பல்கலைக்கழக நிர்வாகத்தை கடந்த 2013ம் ஆண்டு அரசு எடுத்தது. அப்போது பல்கலைக்கழகத்தில் 8443 ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் பணியாற்றி வந்தனர். கடந்த 2017ம் ஆண்டு நடந்த சிண்டிகேட் கூட்டத்தில் 1110 ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. அதேசமயம் மீதமுள்ள 7333 பணியாளர்களை உபரி ஊழியர்களாக அறிவித்தது.

மொத்தமுள்ள 8443 ஆசிரியர் அல்லாத ஊழியர்களையும் பணியில் நீடிக்கும் வகையில் அவர்களின் அவர்களின் ஊதியத்தை 21 ஆயிரம் ரூபாயில் இருந்து, 13,900 ரூபாயாக குறைக்க சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றியது. இந்த தீர்மானத்தின் அடிப்படையில், ஊதிய குறைப்பு தொடர்பாக விளக்கமளிக்க கோரி ஊழியர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப பல்கலைக்கழக துணைவேந்தர் உத்தரவு பிறப்பித்தார்.

இந்த நோட்டீஸ்களை எதிர்த்து ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு, நோட்டீஸ் மீது விளக்கங்கள் பெற்று விசாரணை நடத்திய பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் இதில் தலையிட முடியாது எனக் கூறி, மேல் முறையீட்டு வழக்குகளை தள்ளுபடி செய்தது.

மேலும், கடந்த 2018ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட நோட்டீஸ் இன்னும் நிலுவையில் உள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், இரண்டு வாரங்களில் அதற்கு பதிலளிக்க வேண்டும் என ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு உத்தரவிட்டுள்ளது.

You may also like...