Nov 7 madras high court orders

[11/7, 11:40] Sekarreporter 1: Five-judge Constitution bench of the Supreme Court upholds the validity of the Constitution’s 103rd Amendment Act 2019, which provides for the 10 per cent EWS reservation amongst the general category.

Four judges uphold the Act while one judge passes a dissenting judgement.
[11/7, 11:40] Sekarreporter 1: BIG BREAKING: SUPREME COURT UPHOLDS 10% RESERVATIONS FOR ECONOMICALLY WEAKER SECTIONS (EWS)
[11/7, 11:40] Sekarreporter 1: Five-judge Constitution bench of the Supreme Court upholds the validity of the Constitution’s 103rd Amendment Act 2019, which provides for the 10 per cent EWS reservation amongst the general category.

Four judges uphold the Act while one judge passes a dissenting judgement.
[11/7, 11:41] Sekarreporter 1: போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தமிழகத்தில் போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரித்து, அரசு, அக்டோபர் 19ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணை ரத்து செய்ய வேண்டும் என்றும் அதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரி மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

போக்குவரத்து விதிமுறைகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம், தினக்கூலிகள், ஆட்டோ டிரைவர்கள், பிற பயணிகள் கடுமையாக பாதிக்கபடுவார்கள் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், இயந்திர கோளாறு, கவனக்குறைவுடன் வாகனம் இயக்குவது, குடிபோதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துகளுக்கு முக்கிய காரணிகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய மனுதாரர், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக அதை அமல்படுத்துவதற்கு காவல்துறையினர், அப்பாவி மக்களை துன்புறுத்துவர் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அபராத தொகையை உயர்த்தும் முன் பொதுமக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் அவகாசம் கோரப்பட்டதை அடுத்து, விசாரணை தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
[11/7, 12:57] Sekarreporter 1: செருப்பில் மகாத்மா காந்தி படமும், உள்ளாடைகளில் கடவுளர் படங்களையும் அச்சிட்டு விற்பனை செய்யும் அமேசான் உள்ளிட்ட ஆன் லைன் வர்த்தக நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரிய மனுவுக்கு நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமேசான் உள்ளிட்ட ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், செருப்புகள், உள்ளாடைகளில் மகாத்மா காந்தி மற்றும் கடவுளர் புகைப்படங்களை அச்சிட்டு விற்பனை செய்து வருவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரி மதுரையைச் சேர்ந்த முத்துகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

அதில், சர்வதேச ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களின் இந்த செயல்பாடு இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் தலையிடும் வகையில் உள்ளதாகவும், மக்களின் மத நம்பிக்கைகளை புண்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் செயல்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களிடையே விரோதத்தை தூண்டு வகையில் செயல்படும் இந்த நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி மத்திய – மாநில அரசுகளுக்கு மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்கவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் கிருஷ்ணகுமார் அமர்வு, மகாத்மா காந்தி புகைப்படத்தை செருப்புகளில் அச்சிட்டுள்ளதாக மனுவில் கூறியுள்ளதைச் சுட்டிக்காட்டி, நான்கு வாரங்களில் பதிலளிக்கும்படி மத்திய – மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[11/7, 14:17] Sekarreporter 1: விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு பின்னர் அவற்றை வரைமுறை செய்வதற்கு பதிலாக, நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தை திரும்பப் பெற்று விடலாம் என சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு, விதிகளை மீறி கட்டிய கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி, அந்த குடியிருப்பில் தரைதளம் மற்றும் முதல்மாடி உரிமையாளர் விஜயபாஸ்கர் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், விதிமீறல்களை கட்டுப்படுத்துவது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டிருந்த நிலையில், மனுதாரருக்கு சொந்தமான தரைதளத்தை வணிக பயன்பாட்டுக்கு பயன்படுத்தியதாக கூறி, குடியிருப்புக்கு மாநகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.

இந்த சீலை அகற்றக் கோரி விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் குமரேஷ்பாபு அடங்கிய அமர்வு, மாநகராட்சி ஆணையரை ஆஜராக உத்தரவிட்ட பின், நடவடிக்கை எடுத்ததற்கு கண்டனம் தெரிவித்ததுடன், கட்டிடத்தை சீல் வைத்த போது இருந்த மாநகராட்சி அதிகாரிகள் யார் யார்? காவல் துறை அதிகாரிகள் யார் யார்? என்ற விவரங்களை நவம்பர் 7ம் தேதி தாக்கல் செய்ய மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டது.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, கட்டிடத்துக்கு சீல் வைத்த நேரத்தில் அங்கிருந்த மாநகராட்சி மற்றும் காவல் துறை அதிகாரிகள் பட்டியல் தாக்கல் செய்யப்பட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட கட்டிடத்துக்கு சீல் வைப்பது என ஏற்கனவே முடிவெடுக்கப்பட்டு, அக்டோபர் 28ம் தேதியே நோட்டீஸ் அனுப்பப்பட்டு விட்டதாகவும், ஆணையரை ஆஜராக உத்தரவிட்டதால் நடவடிக்கை எடுத்ததாக கூறுவது தவறு எனவும் மாநகராட்சி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், மாநகராட்சி ஆணையர் தாக்கல் செய்த அறிக்கையில், விதிமீறல் கட்டிடங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் நடைமுறைகளும் விளக்கப்பட்டிருந்தன.

அப்போது, சென்னையில் வி.ஐ.பி.கள் வசிக்கும் கிரீன்வேஸ் சாலையின் அருகில் விதிமீறல் கட்டிடங்கள் பல ஆண்டுகளாக இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள், விதிமீறல் கட்டிடங்களை அனுமதித்து விட்டு, அவற்றை வரைமுறை செய்வதாகத் தெரிவித்தனர்.

இதற்கு பதில், விருப்பம் போல் கட்டுமானங்களை மேற்கொள்ளும் வகையில் நகர் மற்றும் ஊரமைப்பு சட்டங்களை திரும்பப் பெற்று விடலாம் எனத் தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை பொறுத்தவரை, விதிமீறல்களை சரி செய்ய மனுதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதால், அதுவரை இந்த வழக்கை தள்ளிவைக்கலாம் எனக் கூறி, இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[11/7, 15:14] Sekarreporter 1: பிற மாநிலங்களில் பதிவு செய்து, அந்த பதிவை இடமாற்றம் செய்யாமல் தொழில்புரியும் வழக்கறிஞர்களின் பட்டியலை தாக்கல் செய்யும்படி வழக்கறிஞர் சங்கங்களுக்கு
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆர் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற மாநில பார் கவுன்சில்களில் வழக்கறிஞராக பதிவு செய்து, அந்த பதிவை 6 மாதங்களுக்கு மேலாக இடமாற்றம் செய்யாமல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள நீதிமன்றங்களில் தொழில்புரியும் வழக்கறிஞர்களை பட்டியலை அனைத்து வழக்கறிஞர் சங்கங்களில் தலைவரும், செயலாளரும் வழங்கும்படி அறிவித்துள்ளார்.

அதேபோல வேறு தொழில் அல்லது முழு நேர பணியில் ஈடுபட்டிருப்பவர் வழக்கறிஞர் பதிவை தாங்களாகவே பதிவு இடைநீக்கம் செய்திருக்க வேண்டுமென விதிகள் உள்ள நிலையில், அவ்வாறு இடைநீக்கம் செய்யாதவர்களின் பட்டியலை வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
[11/7, 16:58] Sekarreporter 1: மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருவதாகவும், மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும் என்பதால் கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.

கடந்த 1975 – 1977ல் நெருக்கடி நிலை அமலில் இருந்த போது, மாநில பட்டியலில் இருந்த
கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றி கொண்டு வரப்பட்ட அரசியல் சாசனத்தின் 42வது திருத்தத்தை எதிர்த்து ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலனின் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அரசியல் சாசன முக்கியத்துவம் வாய்ந்த இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய முழு அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் எழிலன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, மத்திய அரசு, நெருக்கடி நிலை காலகட்டத்தில் கொண்டு வந்த இந்த அரசியல் சாசன திருத்தம், மாநில அரசின் தன்னாட்சி அந்தஸ்தை பறிக்கும் வகையில் உள்ளதால், இது கூட்டாட்சி கொள்கையை பாதிக்கிறது என வாதிட்டார்.

கல்வியை பொது பட்டியலுக்கு மாற்றி அரசியல் சாசன திருத்தம் கொண்டு வரப்பட்டு, 46 ஆண்டுகளுக்கு பின் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த வழக்கு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் குறிப்பிட்டார்.

எந்த அரசியல் காரணங்களுக்காகவும் இந்த வழக்கு தாக்கல் செய்யப்படவில்லை என்றும், வழக்கு தொடர்ந்த அறக்கட்டளை அரசியல் சார்பற்றது எனவும் விளக்கினார்.

வழக்கில் மேற்கோள்காட்டும்,
தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்ட சட்டங்களை எதிர்த்து இந்த வழக்கை தாக்கல் செய்யவில்லை எனவும், 42 வது அரசியல் சாசன திருத்தம் விஷமரம் போன்றது எனவும், அதை வேரோடு அகற்றவே இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

நாட்டின் கூட்டாட்சி கொள்கை, மத்திய – மாநில அரசுகளின் அதிகாரங்கள் குறித்து உச்ச நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்புகளை மேற்கோள்காட்டி வாதிட்ட மூத்த வழக்கறிஞர் என் ஆர்.இளங்கோ, கூட்டாட்சி கொள்கைகளுக்கு விரோதமாக திருத்தங்கள் மேற்கொள்ள முடியாது எனவும், அரசியல் சாசன நிர்ணய சபையில் கல்வியை பொது பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், மத்திய அரசு பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும், மாநில பட்டியலில் சேர்க்க வேண்டும் எனவும் விவாதங்கள் நடந்தன எனவும் சுட்டிக்காட்டினார்.

மத்திய அரசை விட, மாநில அரசுகளே எப்போதும் கல்விக்காக அதிகளவில் செலவு செய்து வருவதாகவும், மாநில அரசுகளால் மட்டுமே கல்வியை திறம்பட நிர்வகிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றுவதற்கு ஆதரவாக 20 மாநிலங்கள் கையெழுத்திட்டதாகவும், தமிழகம் மற்றும் மேகாலயாவில் குடியரசுத்தலைவர் ஆட்சி அமலில் இருந்ததால் கையெழுத்திடவில்லை என்றும் தெரிவித்தார்.

எந்த காரணமும் இல்லாமல் நெருக்கடி நிலை காலத்தில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் இந்த சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டதாக சுட்டிக்காட்டினார். கடந்த 1978ம் ஆண்டு ஆகஸ்டில் கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்ற சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு, லோக்சபாவில் நிறைவேற்றப்பட்ட போதும், ராஜ்யசபாவில் நிறைவேற்றப்படவில்லை எனத் தெரிவித்தார்.

வாதங்கள் முடிவடையாததால் விசாரணை நாளைக்கு தள்ளிவைக்கப்பட்டது.
[11/7, 18:10] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேவையில்லாமல் டெல்லியில் உள்ள உயர் அதிகாரியை சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜராக செய்த நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையத்தில் இய்ம்க்கிவரும் சேலம் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில் நிதி கழகத்திடம் பெற்ற கடனை, ஒரு முறை செட்டில்மெண்ட் என்ற அடிப்படையில் திருப்பி செலுத்துவதாக கூறி கடிதம் அனுப்பியது.

அந்த கடிதம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை நான்கு மாதங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அவமதித்ததாக நிதி நிறுவனத்தின் சென்னையில் உள்ள துணைப் பொது மேலாளருக்கு எதிராக சேலம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டெல்லியில் உயர் அதிகாரியாக இருந்த மனோஜ் மிட்டல் என்பவரையும் நீதிமன்ற அவமதிப்பாளராக சேர்த்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ் குமார், சென்னையில் இருக்கக்கூடிய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேவையில்லாமல் டெல்லியில் உள்ள உயர் அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பாளராக சேர்த்து நீதிமன்றத்திற்கு வரவழைத்த மனுதாரரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், அவரது செயலுக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/7, 18:19] Sekarreporter 1: தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யக்கோரி என்று விசிக கட்சியை சேர்ந்த வழ்க்கறிஞர் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பிரதமராக மோடி பதவியேற்ற எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு தமிழக பாஜக மாநில தலைவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்தார். அதில் பறையரிலிருந்து விஷ்வ குருவாக உயர்ந்தவர் என அண்ணாமலை குறிப்பிட்டிருந்தார். பறையர் என்ற சொல்லை அவர் பயன்படுத்தியது பெரும் சர்ச்சை ஏற்படுத்தியுள்ளது. அவரின் இந்த கருத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. இந்தநிலையில், சென்னை காவல்துறை ஆணையரிடம் அண்ணாமலைக்கு எதிராக விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் புகார் கொடுக்கப்பட்டது.

அதில், தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது பதிவால் சாதி மத கலவரத்தை தூண்டும் வகையில் செயல்பட்டு வருவதாகவும்,அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் வலியுறுத்தப்பட்டிருந்தது. ஆனால் காவல்துறை வழக்கு பதிவு செய்யவில்லை எனக் கூறி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் காசி என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.அந்த மனுவில் பாஜக தலைவர் அண்ணாமலை மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, மனுவில் எந்தவித முகாந்திரம் இல்லை என கூறி, காசியின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/7, 18:19] Sekarreporter 1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தேவையில்லாமல் டெல்லியில் உள்ள உயர் அதிகாரியை சேர்த்து நீதிமன்றத்தில் ஆஜராக செய்த நிறுவனத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த சென்னை உயர் நீதிமன்றம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சேலம் மாவட்டம் செல்லியம்பாளையத்தில் இய்ம்க்கிவரும் சேலம் டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனம், சென்னையில் உள்ள இந்திய தொழில் நிதி கழகத்திடம் பெற்ற கடனை, ஒரு முறை செட்டில்மெண்ட் என்ற அடிப்படையில் திருப்பி செலுத்துவதாக கூறி கடிதம் அனுப்பியது.

அந்த கடிதம் முறையாக பரிசீலிக்கப்படவில்லை என கூறி தொடரப்பட்ட வழக்கில், மனுதாரரின் கோரிக்கையை நான்கு மாதங்களில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை அவமதித்ததாக நிதி நிறுவனத்தின் சென்னையில் உள்ள துணைப் பொது மேலாளருக்கு எதிராக சேலம் டெக்ஸ்டைல்ஸ் நிறுவனம் தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், டெல்லியில் உயர் அதிகாரியாக இருந்த மனோஜ் மிட்டல் என்பவரையும் நீதிமன்ற அவமதிப்பாளராக சேர்த்திருந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர். சுரேஷ் குமார், சென்னையில் இருக்கக்கூடிய அதிகாரிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தேவையில்லாமல் டெல்லியில் உள்ள உயர் அதிகாரியை நீதிமன்ற அவமதிப்பாளராக சேர்த்து நீதிமன்றத்திற்கு வரவழைத்த மனுதாரரின் நடவடிக்கைக்கு அதிருப்தி தெரிவித்ததுடன், அவரது செயலுக்காக 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[11/7, 21:30] Sekarreporter 1: செங்கல்பட்டு மாவட்ட பதிவாளர் ராஜா மீதான முறைகேடு புகார்கள் குறித்து விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்ட பதிவாளரான ராஜா, நில அபகரிப்பாகர்கள், ரியல் எஸ்டேட் அதிபர்களுடன் கைகோர்த்து சட்ட விரோதமாக செயல்படுவதாகவும், கையெழுத்து ஏதுமில்லாத மொட்டை கடிதங்களை விசாரணைக்கு எடுத்து, பத்திர பதிவுகளை ரத்து செய்தும், நிலங்களை விற்பனை செய்ய முடியாது அளவிற்கு உத்தரவு பிறப்பிப்பதாகவும் லஞ்ச ஒழிப்புத்துறை மற்றும் பத்திரவு பதிவு துறையில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த புகாரின் அடிப்படையில், பதிவாளர் ராஜாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யக் கோரி பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரான ராயப்பேட்டையை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி டீக்காராமன், புகார் குறித்து முறையான விசாரணை நடத்தினால் மட்டுமே முறைகேடு குறித்த முழு விவரங்களும் வெளியில் வரும் எனவும் ராஜா மீது பல புகார்கள் வந்துள்ளதால் பெரிய ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், முறைகேடு நடைபெற்றதற்கான போதிய முகாந்திரம் உள்ளதால், சட்டப்படி அரசிடம் அனுமதி பெற்று விசாரணை நடத்தி, ராஜா சட்டப்படி நடவடிக்கை எடுக்க லஞ்ச ஒழிப்பு துறைக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...