Mhc today news கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு விதிமீறல் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் ல்

[9/12, 07:14] Sekarreporter: கல்வியைப் பொது பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு விதிமீறல் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் நடத்திவரும் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் ல் செய்யப்பட்டுள்ளது.

இம்மனுவில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றியது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரான விதிமீறலாகும். இந்தியாவில் 1975 முதல் 1977 வரையிலான எமர்ஜென்சி காலத்தில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. பல்வேறு விதிமீறல்களும் இந்த கால கட்டத்தில்தான் மேற்கொள்ளப்பட்டது. முக்கியமாக மாநில அரசுகளின் அதிகாரம் பறிக்கப்பட்டு மத்திய அரசுக்கு அதிகாரங்கள் பகிரப்பட்டது. மாநில அரசின் சில அதிகாரங்கள் பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது. 1976 மொத்தம் 5 முக்கியமான துறைகள் பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்டது. காடுகள் நிர்வாகம், கல்வி, எடை மற்றும் அளவிடல், விலங்குகள் மற்றும் பறவைகள் பாதுகாப்பு, நீதி நிர்வாகம் ஆகியவை மாநில கட்டுப்பாட்டில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.
மாநில அரசுகளின் அனுமதி இன்றி, முறையான சட்ட விதிகளை பின்பற்றாமல் எமர்ஜென்சி காலத்தில் சட்டம் இயற்றப்பட்டது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. இப்படி கல்வி பொதுப்பட்டியலுக்கு மாற்றப்பட்ட காரணத்தாலேயே தற்போது நீட் தேர்வுகள், புதிய தேசிய கல்விக்கொள்கை போன்ற சட்டங்கள் மத்திய அரசு மூலம் அமலுக்கு வந்துள்ளன எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆயிரம் விளக்கு தொகுதி திமுக எம்எல்ஏ டாக்டர் எழிலன் சார்பாக அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனத்தின் மூலமாக இந்த மனுதாக்கல் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இந்த அமைப்பில் முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள் சிடி செல்வன், அக்பர் அலி, மூத்த பத்திரிக்கையாளர் ஏஎஸ் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர்.
[9/12, 07:14] Sekarreporter: தென்னிந்திய மீனவர்கள் நலச்சங்கத்தின் தலைவரான கே.பாரதி சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவி்ல், கடலோர ஒழுங்குமுறை பாதுகாப்பு மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் ஆக்கிரமிப்புகளை தடுக்கும் வகையில் கடந்த 2011-ம் ஆண்டு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் புதிதாக விதிகளை உருவாக்கி மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவிப்பாணை வெளியிட்டதாகவும், அதன்படி மீனவர்களின் வாழ்வாதாரம் மற்றும் கடல் வளத்தை பாதுகாக்கும் வகையில் கடலோர பகுதிகளில் கடலோர சுற்றுச்சூழலையோ அல்லது இயற்கை வளங்களுக்கு தீங்கு விளைவிக்கும் வகையிலோ எந்தவொரு கட்டுமானங்களையும் அல்லது திட்டங்களையும் கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் முன்அனுமதியின்றி தொடங்கக்கூடாது என தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். முன்அனுமதியின்றி கட்டுமானங்களை மேற்கொண்டு இருந்தால் அவற்றை 3 மாதத்தில் வரண்முறைபடுத்த வேண்டும் என கடந்த 2018-ம் ஆண்டு மத்திய அரசு ஏற்கெனவே பிறப்பித்த உத்தரவில் திருத்தம் கொண்டு வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
.

இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசு பிறப்பித்துள்ள ஒரு உத்தரவில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்துக்குட்பட்ட பகுதிகளில் முன்அனுமதியின்றி கட்டுமானங்களையோ அல்லது புதிதாக திட்டங்களையோ தொடங்கி செயல்படுத்தியிருந்தாலும் அதை வரண்முறைப்படுத்திக் கொள்ள எந்தவொரு காலநிர்ணயமும் செய்யப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டுள்ளார். இதனால் கடலோர சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும் தற்போது மத்திய அரசு பிறப்பித்துள்ள இந்த உத்தரவு, ஏற்கெனவே கடலோர சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மத்திய அரசு பிறப்பித்துள்ள உத்தரவுக்கு விரோதமானது என குறிப்பிட்டுள்ளார

எனவே இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் மத்திய அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை பிறப்பித்துள்ள உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இந்த வழக்கு நிலுவையில் இருக்கும் வரை அதற்கு தடை விதிக்க வேண்டும், என அதில் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு முன்பாக நடந்தது. மத்திய அரசு மாநில அரசுகள் 3 வாரங்களில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும், என உத்தரவிட்டு விசாரணையை அக்டோபர்ப்21-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.
[9/12, 07:14] Sekarreporter: நாகூர் தர்கா வளாகத்திலுள்ள குளம் அமைந்துள்ள பகுதியில் ஆக்கிரமிப்பு கண்டறியப்பட்டால் சட்டப்படி தகுந்த நடவடிக்கையை நாகப்பட்டினம் வட்டாட்சியர் எடுக்க வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாகப்பட்டினம் மாவட்டம், நாகூரை சேர்ந்தவ எஸ்.சாஹா செய்து சாகிப் தாக்கல் செய்த பொது நல மனுவில், இஸ்லாமிய மதத்தினரின் புகழ்பெற்ற வழிபாட்டு தலமான நாகூர் தர்காவிலுள்ள நாகூர் தர்கா குளம் எனப்படும் “ஷிஃபா குந்தா’-வின் நீராடி வணங்கிச் செல்வதன் மூலம் அவர்களின் தீராத கஷ்டங்கள் நீங்கி விடுகிறது என்பது நம்பிக்கையாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

தற்போது நாகூர் தர்கா குளத்தின் சுற்றுச்சுவர் சீரமைக்கும் பணிகளின்போது, குளத்தின் அளவில் சுருக்கப்படுவதைத் தடுக்கும் விதமாக தகுந்த நடவடிக்கைகளை மாநில அரசு, தர்கா நிர்வாகம் எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு, புதிய மனுவை மனுதாரர் பதினைந்து நாள்களுக்கு அளிக்கவும், அதை
நாகப்பட்டினம் வட்டாட்சியர் ஆய்வு செய்து, ஆக்கிரமிப்பு இருந்தால் சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி புகாரை சட்டப்படி வட்டாட்சியர் விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர். வடிவத்திற்குத் திரும்புவதை உறுதி செய்யும் முயற்சியையும் வட்டாட்சியர் செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

மாநிலத்தில் இருக்கும் நீர்நிலைகள், காடுகள் இனிமேல் அழிக்கப்படவோ அல்லது குறைக்கப்படவோ இல்லை என்பதை தமிழ்நாடு அரசு அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...