Mhc sept 16th order round up

[9/16, 12:37] Sekarreporter1: தமிழகத்தில் உள்ள அரசு போக்குவரத்து கழகங்களில் பணியை முறையாக செய்யாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தின் சைதாப்பேட்டை பணிமனையில் நடத்துனராக பணியாற்றி வந்த பாலச்சந்தர் என்பவர் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டு, பணிநீக்கம் செய்யப்பட்டர். பணி நீக்கத்துக்கு ஒப்புதல் கோரி, தொழிலாளர் நலத்துறை துணை ஆணையரை, சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அணுகிய போது, விசாரணை குறித்து தகவல்கள் முறையாக இணைக்கப்படாததால் பணி நீக்கத்துக்கு ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார்.

இதை எதிர்த்து சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், இந்த விவாகரத்தை மீண்டும் விசாரிக்குமாறு தொழிலாளர் நலத்துறை துணை ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தனது உத்தரவில், போக்குவரத்து கழகங்களில் தவறிழைக்கும் ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரிகள், ஊழல் உள்ளிட்ட சில காரணங்களுக்காக நடவடிக்கை எடுப்பதில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

இது போன்ற விவகாரங்களில், அதிகாரிகள், உரிய முறையில் பணிகளை செய்யாததால் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாகக் குறிப்பிட்ட நீதிபதி, தங்களது பணிகளை முறையாக மேற்கொள்ளாமல் அரசுக்கு இழப்பை ஏற்படுத்தும் அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு அனைத்து போக்குவரத்து கழகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்ப போக்குவரத்து துறை செயலாளருக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் உத்தரவிட்டுள்ளார்.
[9/16, 15:43] Sekarreporter1: மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாக சென்னை பல்கலைக்கழக பேராசியருகு எதிராக புகார் அளித்த பேராசிரியை மீது வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு உத்தரவிட சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

சென்னை பல்கலைக்கழக பேராசிரியர் ஆர். ராதாகிருஷ்ணன் என்பவர், மாணவிகளிடம் தவறாக நடந்து கொள்வதாகவும், மாந்திரீகங்கள் செய்வதாகவும் கூறி மற்றொரு பேராசிரியையான ரீட்டாஜான் என்பவர், பல்கலைக்கழக பதிவாளரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையடுத்து, பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால் தனக்கு எதிராக புகார் அளித்துள்ளதாகவும், பல்கலைக்கழகம் தனக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத நிலையில் பொய் புகார் அளித்த பேராசிரியை ரீட்டா ஜானுக்கு எதிராக வன்கொடுமை தடைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யக் கோரி ராதாகிருஷ்ணன், சென்னை அமர்வு நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை முறையாக விசாரிக்காமல் தள்ளுபடி செய்து விட்டதாக கூறி, பேராசிரியை ரீட்டாவுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய போலீசாருக்கு உத்தரவிடக் கோரி ராதாகிருஷ்ணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மாணவிகளிடம் தவறாக நடந்து கொண்டதாகவும், மாந்திரீகம் செய்வதாகவும் துறை தலைவர் என்ற முறையில் பேராசிரியை ரீட்டா புகார் அளித்தது வன்கொடுமை தடைச் சட்டப்படி குற்றமாகாது என்பதால், அவர் வழக்குப்பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட முடியாது எனக் கூறி, பேராசிரியர் ராதாகிருஷ்ணனின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
[9/16, 17:00] Sekarreporter1: புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் சம்பளத்தை மறைத்ததாக கூறி நடிகர் விஜய்க்கு 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்த வருமான வரித்துறை உத்தரவுக்கு விதிக்கபட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை நடிகை விஜய் தாக்கல் செய்த போது, அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக குறிப்பிட்டிருந்தார்.

அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் கடந்த 2015ம் ஆண்டு நடத்திய சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் ஒப்பிட்டு பார்த்தது. அதன்படி, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என கண்டறிந்தது.

வருமானத்தை மறைத்ததற்கான ஒன்றரை கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது.

தனக்கு அபராதம் விதிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து நடிகர் விஜய் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

அபராதம் விதிப்பதாக இருந்திருந்தால், 2019ஆம் ஆண்டிலேயே உத்தரவு பிறப்பித்திருக்க வேண்டும் என்றும், காலதாமதமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வருமான வரித்துறை உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தும், மனுவுக்கு வருமான வரித்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டார்.

இந்த வழக்கு மீண்டும் நீதிபதி அனிதா சுமந்த் முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஏற்கனவே பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்ட நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 26ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.
[9/16, 17:27] Sekarreporter1: கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடத்தில் சட்டவிரோதமாக செயல்படும் செங்கற்சூளைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

கோவை மாவட்டத்தில் யானைகள் வழித்தடமான தடாகம் பள்ளத்தாக்கு பகுதியில் செயல்பட்டு வந்த 134 செங்கற்சூளைகள் உயர் நீதிமன்ற உத்தரவின்படி மூடப்பட்டன.

இந்த செங்கற்சூளைகள், ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் உள்ளிட்ட யானைகள் வழித்தடத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், அரசின் அனுமதியின்றி செயல்படும் இந்த செங்கற்சூளைகளை மூட உத்தரவிட வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வு, ஆனைகட்டி, பெரியநாயக்கன் பாளையம் போன்ற யானைகள் வழித்தடத்தில் செயல்படும் செங்கற்சூளைகள் அரசு அனுமதி பெற்று செயல்படுகின்றனவா என ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்யவும், செங்கற்சூளைகள் மூடப்பட்ட தடாகம் பகுதிகளில் மண் எடுத்ததால் ஏற்பட்ட குழிகளை மூடவும் உத்தரவிட்டது.

அப்போது குறிக்கிட்ட தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரவீந்திரன், கோவையில் யானைகள் வழித்தடத்தில் உள்ள செங்கற்சூளைகள் மூட உத்தரவிடப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து, இந்த வழக்கின் விசாரணை அக்டோபர் 17ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
[9/16, 17:33] Sekarreporter1: காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பான வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், மாநிலம் முழுவதும் இத்திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக விளக்கமளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது.

ஆனால் மாநிலம் முழுவதும் அமல்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாக தமிழக அரசு விளக்கமளித்திருந்தது. இருப்பினும், காலி மதுபான பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் அமல்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகள் வழங்கும்படி வழக்கறிஞர்களை உயர் நீதிமன்றம் கேட்டுக் கொண்டிருந்தது.

இந்த பின்னணியில், இதுகுறித்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, காலி மது பாட்டில்களை திரும்பப் பெறும் திட்டத்தை மாநிலம் முழுவதும் எப்படி அமல்படுத்தலாம் என்பது குறித்த வழக்கறிஞர்களின் ஆலோசனைகளை பெற்றுள்ளதாகவும், அவற்றை பரிசீலித்து அறிக்கை அளிப்பதாகவும் தமிழக அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

அதை ஏற்று, தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கில் அக்டோபர் 11ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் எனத் தெரிவித்தனர்.
[9/16, 17:51] Sekarreporter1: வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் என். சுப்ரமணியன் மீதான புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டும் என சேலம் மாநகர காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2011-2015ம் ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சராக இருந்த சுப்ரமணியன் வேலை வாங்கி தருவதாக கூறி 65 லட்சம் ரூபாய் மோசடி செய்துள்ளதாக கூறி அதுதொடபான புகாரில் வழக்கு பதிவு செய்ய உத்தரவிடக் கோரிய சேலம் ஜான்சன் பேட்டையை சேர்ந்த கே. முனுசாமி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், வேலையும் வாங்கி தராமல், பணத்தையும் திருப்பி அளிக்காமல் அலைகழித்ததாகவும், சேலம் மாநகர காவல்துறை மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். பணத்தை கேட்டபோது அடியாட்களை வைத்து முன்னாள் அமைச்சர் சுப்ரமணியன் மிரட்டியதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

சுப்ரமணியன் மீதான புகாரை முறையாக விசாரிக்கவும், வழக்குப் பதிவு செய்து வழக்கை விரைவாக விசாரித்து முடிக்கவும் உத்தரவிட வேண்டுமெனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், முன்னாள் அமைச்சர் ந.சுப்ரமணியனுக்கு எதிராக மனுதாரர் அளித்த புகாரை இரண்டு வாரங்களில் விசாரித்து முடிவு எடுக்க வேண்டுமென சேலம் மாநகர காவல்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.
[9/16, 17:51] Sekarreporter1: தமிழக வனப்பகுதிகளில் உள்ள அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டி நடவடிக்கை எடுக்காவிட்டால், அன்னிய மரங்கள் வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வனப்பகுதிகளில் பரவும் அன்னிய மரங்களை அகற்றுவது தொடர்பான வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, முதுமலை வனப்பகுதியில் அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான கருத்துரு, நிதித்துறை பரிசீலனைக்கு அனுப்பபட்டுள்ளதாக கூறி, தமிழக அரசு சார்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற ஏன் தீவிரம் காட்டவில்லை எனவும், தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியை ஏன் பயன்படுத்தக் கூடாது எனவும் கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், அன்னிய மரங்களை அகற்ற தமிழ்நாடு காகித நிறுவனத்தை நியமிப்பது தொடர்பான உத்தரவை பிறப்பிக்க அரசுக்கு அக்டோபர் 11ம் தேதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டனர்.

மேலும், அன்னிய மரங்களை அகற்றும் பணிகளை மெதுவாக செயல்படுத்துவதால் எந்த பயனும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், சுற்றுச்சூழலையும், வனத்தையும் பாதுகாக்க அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என அறிவுறுத்தினர்.

அன்னிய மரங்களை அகற்ற போர்க்கால அடிப்படையில் தீவிரம் காட்டாவிட்டால், அவை வேகமாக பரவி, தீவிர தாக்கத்தை ஏற்படுத்தி வனத்தை அழித்து விடும் என்பதால் தனியார் நிறுவனங்களை அடையாளம் கண்டு சமூக பாதுகாப்பு நிதியைப் பெற்று விரைந்து அன்னிய மரங்களை அகற்ற வேண்டும் என உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 11ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[9/16, 20:32] Sekarreporter1: குடும்ப பிரச்னையில் மாமியாரை வெட்டிய மருமகன், அவரது தந்தை மற்றும் பெரியப்பாவுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை……

சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம்

சென்னை முத்தியால்பேட்டையை சேர்ந்த முகமது யாகூப் என்பவரை அவரது மருமகன் முகமது செரீப், செரீப்பின் தந்தை முகமது உசேன், பெரியப்பா அமீன்ஷா ஆகியோர் கொலை செய்யும் நோக்கத்துடன் வெட்டுக்கத்தியால் தாக்க முயற்சி சம்பவம்

தடுக்க முயன்ற செரீபின் மாமியார் ரசியா பானு, உறவினர் சபுரா பர்வீன் ஆகியோருக்கும் வெட்டு விழுந்தது தொடர்பாக முத்தியால்பேட்டை காவல் நிலைய வழக்கு

மூவருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ. 27 ஆயிரம் அபராதம் – நீதிபதி புவனேஷ்வரி
[9/16, 21:39] Sekarreporter1: அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் களத்துப்பட்டியை சேர்ந்த அதிமுக உறுப்பினர் எஸ். சூரியமூர்த்தி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், அதிமுக கட்சியில் நிறுவனர் எம்.ஜி.ஆர்., பொதுச் செயலாளர் ஜெ. ஜெயலலிதா ஆகியோர் உருவாக்கிய விதிகளுக்கு முரணாக ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் இரட்டை தலைமை முறையை ஒழித்துவிட்டு, ஒற்றை தலைமையை உருவாக்கும் வகையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட எடப்பாடி பழனிசாமி கட்சியில் கட்சி முடிவுகளை எடுப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று அதில் இடைக்காலக் கோரிக்கை வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் அந்த வழக்கில் இறுதி முடிவெடுக்கும் வரை இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதாக எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஏற்கக் கூடாது என்றும், அவரை தேர்ந்தெடுக்கும் வகையில் ஜூலை 11ஆம் தேதி நிறைவேற்றப்பட்ட (3,4,5,6,7) தீர்மானங்களை ஏற்கக் கூடாது என்றும் உத்தரவிடவும் கோரிக்கை வைத்துள்ளார்.

சூரியமூர்த்தி தொடர்ந்த வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.

 

[9/16, 06:51] Sekarreporter1: [9/16, 06:50] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570583165395402753?t=1H2P1es3vkYVCpk0hjjhZw&s=08
[9/16, 06:50] Sekarreporter1: Justice s vaithiyanathan with chief justice in airport our chief left chennai yesterday
[9/16, 06:50] Sekarreporter1: 🌹🌹🌹
[9/16, 07:01] Sekarreporter1: Madras high court sep 15 th order whatsapp news round up https://sekarreporter.com/madras-high-court-sep-15-th-order/
[9/16, 11:46] Sekarreporter1: [9/16, 10:22] Inthira Jaising Senior Advt Sc: Senior Advocate Indira Jaising Requests CJI To Live-Stream Constitution Bench Hearings https://www.livelaw.in/top-stories/senior-advocate-indira-jaising-requests-cji-to-live-stream-constitution-bench-hearings-209426
[9/16, 11:45] Sekarreporter1: 🌹
[9/16, 12:03] Sekarreporter1: https://youtu.be/I-6qTz9H9Us
[9/16, 12:20] Sekarreporter1: [9/16, 12:19] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570665744400265216?t=wBmnbuPKnme-x8nuz-8oqQ&s=08
[9/16, 12:20] Sekarreporter1: Temple case In view of the submission made by learned Additional Advocate General to the effect that the respondents are not going to send back the temple elephants to Assam and that the respondents would take care of the temple elephants in the best possible manner, we do not find reason to give any further direction to the respondents to take care of the temple elephants. In such view of the matter, the writ petition is disposed of. There will be no order as to costs. Consequently, W.M.P.No.24062 of 2022 is closed. (M.D., ACJ.)           (S.M., J.). For the Petitioner       : Mr.M.R.Dhalapathy Vignesh Kumar For the Respondents : Mr.J.Ravindran Addl. Advocate General assisted by Mr.Arun Natarajan Special Government Pleader for 1st respondent and assisted by Mr.P.Muthukumar State Government Pleader for respondents 2 to 4 ORDER https://sekarreporter.com/temple-case-in-view-of-the-submission-made-by-learned-additional-advocate-general-to-the-effect-that-the-respondents-are-not-going-to-send-back-the-temple-elephants-to-assam-and-that-the-respondents/
[9/16, 12:36] Sekarreporter1: [9/16, 12:36] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1570670288656044033?t=2wZVpf34xsp3hPnLPhDxKw&s=08
[9/16, 12:36] Sekarreporter1: THE HONOURABLE MR. JUSTICE S.M.SUBRAMANIAM   W.P.No.27395 of 2016 and W.M.P.No.23598 of 2016 The Management of Metropolitan Transport Corporation (Chennai) Ltd., For Petitioner     : Mr.C.Gauthama Raj           For R1 &  R3     : Mr.K.H.Ravi Kumar                                 Government Advocate                                                     For R2                    : Mr.S.T.Varadarajulu   ORDER https://sekarreporter.com/the-honourable-mr-justice-s-m-subramaniam-w-p-no-27395-of-2016-and-w-m-p-no-23598-of-2016-the-management-of-metropolitan-transport-corporation-chennai-ltd-for-petitioner/
[9/16, 14:18] Sekarreporter1: [9/16, 14:17] Sekarreporter1: MSMED Act- Facilitation Council Cannot Review Its Own Decisions : Supreme Court

 

 

https://www.livelaw.in/top-stories/supreme-court-facilitation-council-msmed-act-bajaj-auto-limited-vs-ajanta-press-and-mechanical-works-2022-livelaw-sc-768-209451
[9/16, 14:18] Sekarreporter1: ..
[9/16, 14:19] Sekarreporter1: https://youtu.be/3X0EIKgUMtc
[9/16, 14:33] Sekarreporter1: https://youtu.be/qUl1K_fjLTk
[9/16, 14:56] Sekarreporter1: https://youtu.be/5MDV0suqC6w
[9/16, 14:57] Sekarreporter1: https://youtu.be/kCOLm7gFRqk
[9/16, 18:57] Sekarreporter1: [9/16, 18:57] Sekarreporter1: https://www.livelaw.in/top-stories/advocate-filing-writ-petition-for-fee-is-unprofessional-says-supreme-court-209486
[9/16, 18:57] Sekarreporter1: 🌹
[9/16, 19:02] Sekarreporter1: [9/16, 19:02] Sekarreporter1: https://www.hindutamil.in/news/tamilnadu/867148-high-court-branch-action-to-quash-wage-fixation-circular-of-co-operative-society-employees.html
[9/16, 19:02] Sekarreporter1: 🌹
[9/16, 19:10] Sekarreporter1: [9/16, 19:09] Sekarreporter1: https://www.livemint.com/news/india/supreme-court-refuses-plea-seeking-uniform-dress-code-in-educational-institution-11663319665589.html
[9/16, 19:09] Sekarreporter1: .
[9/16, 19:27] Sekarreporter1: THE HON’BLE MR.JUSTICE PARESH UPADHYAY AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.A.No.1470 of 2021 V.Prabhakar                                                  .. Appellant. For Appellant             : Mr.L.Chandra Kumar                                  For Respondent         : Mr.S.Haja Mohideen Gisthi JUDGMENT D.BHARATHA CHAKRAVARTHY, J. https://sekarreporter.com/the-honble-mr-justice-paresh-upadhyay-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-a-no-1470-of-2021-v-prabhakar/

 

 

 

You may also like...