Mhc orders round up march 10

 

[8/10, 11:12] Sekarreporter1: மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாமல்லபுரத்தில் இயங்கி வரும் முதலை பண்ணையில் கூடுதலாக இருக்கும் ஆயிரம் முதலைகளை குஜராத் மாநிலம் ஜாம் நகர் மாவட்டத்தில் உள்ள விலங்கியல் மறுவாழ்வு மையத்திற்கு இடமாற்றம் செய்ய மத்திய மாநில அரசு துறைகள் அனுமதியளித்ததை எதிர்த்து சென்னை சிந்தாதிரிபேட்டையை சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர் ஏ. விஸ்வநாதன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், 56 முதலைகளை மட்டுமே வைக்கக்கூடிய 7300 சதுர மீட்டர் இடத்தில் 1000 முதலைகள் அடைக்கப்போவதாகவும், இடமாற்றம் செய்ய அனுமதியளித்தது சட்டவிரோதம் என் அறிவித்து, அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும், இந்த பூங்காவுக்கு அனுமதி வழங்கியது தொடர்பாக சி.பி.ஐ. அல்லது சிறப்பு புலனாய்வு குழுவின் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய அமர்வு, குஜராத்தில் உள்ள விலங்குகள் மறுவாழ்வு மையத்தில் ஆயிரம் முதலைகளை பராமரிக்க போதுமான இட வசதிகள் உள்ளது என்பது மறுவாழ்வு மையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட புகைப்பட ஆதாரங்களில் இருந்து தெளிவாக தெரிவதால் மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது என உத்தரவிட்டனர்.

மேலும், முதலைகள் இடமாற்றம் செய்ய சட்டப்படி முறையாக அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், நிபுணர்களும் அந்த மையத்தில் உள்ள வசதிகள் குறித்து திருப்தி தெரிவித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.
[8/10, 11:57] Sekarreporter1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய அறநிலைய துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராத்ம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை சூளையில் உள்ள அருள்மிகு சொக்கவேல் சுப்பிரமணியர் திருக்கோவிலுக்கு சொந்தமான சொத்துக்களை குத்தகைக்கு எடுத்த தனி நபர்கள், நீண்ட காலம் வாடகை செலுத்தாமல் இருப்பதாகக் கூறி சென்னை சூளையைச் சேர்ந்த சுகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு விசாரணையின் போது, சம்பந்தப்பட்ட தனிநபர்களுக்கு எதிராக அறநிலையத்துறை சட்டத்தின் கீழ் நடவடிக்கை துவங்கப்பட்டுள்ளதாக அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, நடவடிக்கையை விரைவுபடுத்த கடந்த 2021 ம் ஆண்டு ஜூன் மாதம் உத்தரவு பிறப்பித்து இருந்தார்.

இந்த உத்தரவை அமல்படுத்தவில்லை என்று சுகுமார் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்துவதற்கு ஏற்பட்ட கால தாமதத்திற்கான காரணங்களை உதவி ஆணையர் தனது அறிக்கையில் தெரிவிக்கவில்லை என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாதது குறித்து உதவி ஆணையர் வருத்தம் தெரிவிக்காத நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் கூறி , இந்து சமய அறநிலையத்துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாயும், உதவி ஆணையர் மற்றும் இணை ஆணையர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளார்.

அபராதம் விதித்து தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து இந்து சமய அறநிலைய துறை ஆணையர் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மேல் முறையீட்டு வழக்கு நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் ஜெகதீஷ் சந்திரா அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது அறநிலைய துறை ஆணையர் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், பிரதான வழக்கில் எதிர்மனுதாரராக இல்லாத நிலையில், தனக்கு எதிராக தனி நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது தவறு என்றும், நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தவில்லை என தனக்கு எதிராக குற்றச்சாட்டு இல்லை என்பதால், அபராதம் விதித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இந்து சமய் அறநிலையத் துறை ஆணையருக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து, மேல் முறையீட்டு வழக்கை நான்கு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.

அதேசமயம், இணை ஆணையரும், உதவி ஆணையரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட தலா 50 ஆயிரம் ரூபாய் அபராதத்தை செலுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
[8/10, 18:07] Sekarreporter1: அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு எதிராக பன்னீர்செல்வம் மற்றும் வைரமுத்து தாக்கல் செய்த வழக்குகள் நீதிபதி ஜெயச்சந்திரன் முன் விசாரணைக்கு வந்தன.

அப்போது, பொதுக்குழு கூட்டம் கட்சி விதிகள்படி நடத்தப்பட்டதா? இல்லையா? என்பது குறித்து மட்டும் வாதிடும்படி இரு தரப்பு வழக்கறிஞர்களையும் நீதிபதி கேட்டுக் கொண்டார்.

பொதுக்குழுவின் போது கட்சி விதிகளை பின்பற்றாமல் இருந்திருந்தால், நீதிமன்றம் தகுந்த உத்தரவு பிறப்பிக்கும் என்றும் நீதிபதி தெளிவுபடுத்தினார்.

இதையடுத்து, பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் குரு கிருஷ்ணகுமார், அரவிந்த் பாண்டியன் மற்றும் ஸ்ரீராம் ஆகியோர், ஜெயலலிதா மறைவுக்கு பின் கட்சியில் பிளவு ஏற்பட்டது குறித்தும், பின் இரு பிரிவுகளும் இணைந்து 2017ல் பொதுக்குழுவை கூட்டி பொதுச்செயலாளர் பதவியை கலைத்து ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை உருவாக்கியது குறித்தும், இரு பதவிகளுக்கும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்தல் நடத்துவது என விதிகளில் திருத்தம் செய்தது குறித்தும் விளக்கினர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கு பொதுக்குழுவில் ஒப்புதல் அளிக்காவிட்டால் இரு பதவிகளும் காலியாகி விடும் என்றால் அது பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் பொருந்தும் என்றும், பொதுக்குழு ஒப்புதல் அளிக்காததால் இருவராலும் செயல்பட முடியவில்லை எனக் கூறுவது தவறு என்றும், பொதுக்குழுவை கூட்டுவது தொடர்பான விதிகள் பின்பற்றப்படவில்லை என்றும் வாதிட்டனர்.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஒப்புதலின்றி எந்த கூட்டமும் கூட்ட முடியாது எனவும், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் விருப்பத்தை 2,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மூலம் செல்லாததாக்கி விட முடியாது எனவும் பன்னீர்செல்வம், வைரமுத்து தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.

எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய்நாராயண் தனது வாதத்தை துவங்கும் முன், நிரந்தர பொதுச்செயலாளர் ஜெயலலிதா தான் என கூறி அந்த பதவியை கலைத்துவிட்டு மீண்டும் அந்த பதவியை உருவாக்கியது ஏன் ? எனவும், பொதுக்குழு கூட்டம் கட்சி விதிப்படி நடத்தப்பட்டதா எனவும் விளக்க வேண்டும் என நீதிபதி குறிப்பிட்டார்.

தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இல்லாவிட்டால் பொருளாளர், தலைமைக் கழக செயலாளர் கட்சியை நிர்வகிக்க விதிகள் வகை செய்வதால் தலைமை கழக நிர்வாகிகள் பொதுக்குழுவுக்கு அழைப்பு விடுத்ததில் தவறில்லை எனச் சுட்டிக்காட்டிய எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மூத்த வழக்கறிஞர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து கையெழுத்திட்டு தான் தற்காலிக அவைத்தலைவர் நியமிக்கப்பட்டார் எனவும், ஜூன் 23 பொதுக்குழுவில் அனைத்து உறுப்பினர்களின் ஒப்புதலுடன் தமிழ்மகன் உசேன் நிரந்தர அவைத்தலைவராக நியமிக்கப்பட்டதாகக் கூறினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பன்னீர்செல்வம் தரப்பு, அவைத்தலைவர் அறிவிப்புக்கு முன் பன்னீர்செல்வம் வெளியேறி விட்டதாகவும், தமிழ் மகன் உசேனை முன்மொழியவோ, வழிமொழியவோ இல்லை எனத் தெரிவித்தது.

கட்சியில் பெரும்பான்மையினர் ஒற்றை தலைமையை விரும்புவதால், ஜூலை 11ம் தேதி பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்து இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாகவும், எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டதாகவும், நான்கு மாதங்களில் பொதுச் செயலாளர் தேர்தல் நடத்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தல் தொடர்பாக கட்சி விதிகளில் திருத்தம் கொண்டு வந்த 2021ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஜூலை 11 வரை இருவரும் எடுத்த முடிவுகள் செல்லும் என்பதால் அவர்களால் நியமிக்கப்பட்ட அந்த பொதுக்குழு உறுப்பினர்கள் நியமனமும் செல்லும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

வழக்கில் வாதங்கள் நிறைவடையாததால், விசாரணையை நீதிபதி ஜெயச்சந்திரன் நாளை காலை 10:30க்கு தள்ளிவைத்தார்.
[8/10, 19:05] Sekarreporter1: சென்னையை சேர்ந்த டாக்டர் சுப்பையா மடிப்பாக்கம் பகுதியில் குடியிருந்தார். அப்போது அவர் மீது பக்கத்து வீட்டுக்காரர் ஒரு புகார் கொடுத்தார். அதில் டாக்டர் சுப்பையா எங்கள் வீட்டு முன்பு தினமும் அசிங்கம் செய்து வருகிறார். இதனால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆதம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் கடந்த மார்ச் மாதம் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்த டாக்டர் சுப்பையா மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் டாக்ர் சுப்பையாவுக்கு ஐகோர்ட் முன் ஜாமீன் வழங்கியது. ஆதம்பாக்கம் போீலீசார் பதிவு செய்த இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி டாக்டர் சுப்பையா ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி சதீஸ்குமார் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது புகார்தார் சார்பாக வக்கீல் குமரகுரு ஆஜராகி, இதில் டாக்டருக்கும் புகார்தாரருக்கும் சமரசம் ஏற்பட்டுவிட்டது என்றார். இதற்கு போலீஸ் தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இதை நீதிபதி ஏற்றுக்கொண்டு சுப்பையா மீதான வழக்கை ரத்து செய்தார்.
[8/10, 21:48] Sekarreporter1: தமிழகத்தில் மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் இல்லை உயர்நீதிமன்றத்தில் டாஸ்மாக் நிறுவனம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில், பிரதாப் என்பவர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், மதுபானங்களை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய முடிவு செய்து தமிழ்நாடு அரசு கடந்த 1996ம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்தால் அது மனித உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும். ஆனால், இந்த அரசாணையின்படி மதுவை கண்ணாடி பாட்டில்களுக்கு பதில் பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்ய டாஸ்மாக் நிறுவம் முடிவு செய்துள்ளது. மேலும் இது தொடர்பாக பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கிற்கு டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், மதுவை பிளாஸ்டிக் பாட்டிலில் விற்பனை செய்வது என்று தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடுத்து, அதுதொடர்பாக அரசாணை பிறப்பித்தது. அரசின் கொள்கை முடிவை எதிர்த்து மனுதாரர் வழக்கு தொடர முடியாது. அதேநேரம், தற்போது வரை மதுவை பிளாஸ்டிக் பாட்டில்களில் விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

You may also like...